டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

டாடா டிகோர் காரின் விற்பனை கடுமையாக சரிவடைந்து வருகிறது. இது எதற்கான அறிகுறி என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

டாடா டிகோர் (Tata Tigor) கார்களின் விற்பனை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், கடுமையான சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா டிகோர் கார்களின் எண்ணிக்கை வெறும் 520 மட்டுமே.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது சுமார் 80 சதவீத வீழ்ச்சியாகும். அதே சமயம் கடந்த மே மாதத்தில் டாடா நிறுவனம் வெறும் 306 டிகோர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இது சுமார் 90 சதவீத வீழ்ச்சி.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

டாடா டிகோர் காரின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்து வருவதற்கு உறுதியான காரணம் எதுவும் தெரியவில்லை. இது சப்-4 மீட்டர் செடான் ரக கார் ஆகும். ஆனால் சப்-4 மீட்டர் செடான் செக்மெண்ட்டில் டிமாண்ட் குறைந்து வருகிறது என்றும் சொல்ல முடியாது.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

ஏனெனில் மாருதி சுஸுகி நிறுவனம் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிசையர் கார்களையும், ஹோண்டா நிறுவனம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமேஸ் கார்களையும் விற்பனை செய்துள்ளன. இதனை வைத்து பார்க்கையில் டிமாண்ட் குறைந்தது போல் தெரியவில்லை.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

ஒரு வேளை டாடா நிறுவனம் டிகோர் கார்களின் உற்பத்தியை குறைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. டிகோர், டியாகோ மற்றும் நெக்ஸான் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணியை டாடா செய்து வருகிறது.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

இந்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டன. எனவே டிகோர், டியாகோ மற்றும் நெக்ஸான் ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் நடப்பாண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

இந்த மூன்று புதிய மாடல்களில் டிகோர் ஃபேஸ்லிஃப்ட்தான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை குறைந்திருப்பதை வைத்து பார்க்கையில், அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பது போலவே தெரிகிறது.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதனை மனதில் வைத்துதான், டிகோர் மற்றும் டியாகோ கார்களின் முன் பகுதியை டாடா நிறுவனம் டிசைன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

இதன்மூலம் 2 கார்களும் இன்னும் கவர்ச்சிகரமானதாக மாறவுள்ளன. ஆனால் பின் பகுதி மற்றும் பக்கவாட்டு டிசைன்கள் தற்போது உள்ளதை போன்றே இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. டிசைன் தவிர மெக்கானிக்கலாகவும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

குறிப்பாக ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷன்கள் புதிய பிஎஸ்-6 பெட்ரோல் இன்ஜின் உடன் விற்பனைக்கு வரலாம். ஆனால் டீசல் இன்ஜின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் டாடா நிறுவனம் தனது சிறிய 1.05 லிட்டர் டீசல் இன்ஜினை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்போவதில்லை.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

டாடா டிகோர் மற்றும் டியாகோ கார்களின் டீசல் வேரியண்ட்களுக்கான டிமாண்ட் தற்போது குறைந்து வருகிறது. இதனுடன் பிஎஸ்-6 விதிமுறைகளும் இணைந்து கொண்டதால், அவ்விரு கார்களின் டீசல் வேரியண்ட்கள் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

தற்போதைய நிலையில் டாடா டிகோர் மற்றும் டியாகோ கார்களில், 1.05 லிட்டர், 3 சிலிண்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிறிய டீசல் இன்ஜினை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தினால், அதிக செலவு ஆகும். ஆனால் டிமாண்ட் குறைவாகவே இருந்து வருகிறது. எனவேதான் டாடா நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கும் என கூறப்படுகிறது.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

முன்னதாக டிகோர் மற்றும் டியாகோ கார்களின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷன்களை டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவை டிகோர் ஜேடிபி மற்றும் டியாகோ ஜேடிபி என அழைக்கப்படுகின்றன.

டாடா டிகோர் காரின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது... இது எதற்கான அறிகுறி தெரியுமா?

இதில், ஜேடிபி என்பது ஜெயம் டாடா பெர்ஃபார்மென்ஸ் (JTP - Jayem Tata Performance) என்பதை குறிக்கிறது. இது ஜெயம் ஆட்டோமோட்டிவ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சி ஆகும். இந்த வேரியண்ட்களில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவர் மற்றும் 150 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

Article Published On: Saturday, June 8, 2019, 17:41 [IST]
English summary
Tata Tigor Sales Declined By 90 Per cent In May 2019: Here Is Why. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+