பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

பழைய வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு அதிரடியான திட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகில் காற்று அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் பல்வேறு நகரங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. நமது நாட்டின் தலைநகர் புது டெல்லியை இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

புது டெல்லி மட்டுமல்லாது இன்னும் பல்வேறு நகரங்களும் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன. எனவே இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளும் ஒன்று.

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

காற்று அதிகம் மாசடைவதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் முக்கிய காரணமாக உள்ளன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முயன்று வருகிறது.

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

அதுவும் பெட்ரோல், டீசலில் இயங்கும் பழைய வாகனங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். காற்று மாசுபாடு பிரச்னைக்கு இவைதான் முக்கியமான காரணங்கள். எனவே பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், அதற்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்க மக்களை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

இதன் ஒரு பகுதியாக 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை நிராகரிப்பவர்களுக்கு வரி சலுகைகளை வழங்குவது குறித்து மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் பழைய வாகனங்களை பயன்படுத்தும் ஆர்வம் மக்கள் மத்தியில் குறைந்து அவர்கள் அதனை கைவிடுவார்கள். அத்துடன் இதன் மூலமாக புதிய வாகனங்களை வாங்குவதற்கு மக்களை ஊக்குவிக்கவும் முடியும்.

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

இது காற்று மாசுபாடு பிரச்னைக்கு தீர்வாக அமைவதோடு, தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ள ஆட்டோமொபைல் துறை மீண்டு வரவும் உதவும். தற்போது ஆட்டோமொபைல் துறை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

MOST READ: ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார் அறிமுகம்... திகிலில் ஹேட்ச்பேக் கார்கள்!!

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

எனவே இந்த திட்டம் ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஆட்டோமொபைல் துறை சரிவில் இருந்து மீண்டு வர உதவும் விதமாக, புதிய வாகனங்களின் பதிவு கட்டணங்கள் மற்றும் பழைய வாகனங்களின் பதிவு புதுப்பிப்பு கட்டணங்களை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு ஒத்தி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

MOST READ: புதிய வரலாறு படைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... மக்கள் அமோக வரவேற்பு... என்னவென்று தெரியுமா?

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

வாகனங்களின் பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவதற்கான வரைவு அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. தற்போது வெறும் 50 ரூபாயாக மட்டுமே உள்ள புதிய இரு சக்கர வாகனங்களின் பதிவு கட்டணத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

MOST READ: உங்கள் கார் ஆசையை தூண்டும் மாற்றங்களுடன் வருகிறது புதிய ரெனால்ட் க்விட்... என்னவென்று தெரியுமா?

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

தற்போதைய நிலையில் புதிய பெட்ரோல், டீசல் கார்களுக்கான பதிவு கட்டணம் வெறும் 600 ரூபாயாக மட்டுமே உள்ளது. அவற்றின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணமும் கூட வெறும் 600 ரூபாய்தான். ஆனால் புதிய பெட்ரோல், டீசல் கார்களுக்கான பதிவு கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாயாகவும், அவற்றின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

இந்த கட்டண உயர்வு மிகவும் கடுமையானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்தும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாகவே இது பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது ஆட்டோமொபைல் துறை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்த திட்டம் அமலுக்கு வந்தால், ஆட்டோமொபைல் துறையின் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான் கட்டண உயர்வை அமலுக்கு கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளது. ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்பதற்கான பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார்.

பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

அப்போது வாகனங்களின் பதிவு கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தள்ளி வைப்பதாகவும் அவர் அறிவித்தார். இதன்படி புதிய வாகனங்களுக்கான பதிவு கட்டணம் தற்போது உயராது. ஆனால் பழைய வாகனங்களுக்கான பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் மட்டும் ஒரு வேளை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: ET Auto

Most Read Articles

English summary
Government Proposes Tax Incentives For Scrapping Old Vehicles In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X