விற்பனையை அதிகரிக்க மாடல் 3 காரின் விலையை இரண்டாவது முறையாக குறைத்த டெஸ்லா!

மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது மாடல் 3 காரின் விலையை இரண்டாவது முறையாக குறைத்து அறிவித்துள்ளது.

டெஸ்லா கார்

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தானாக இயங்கும் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

ஆட்டோமொபைல்ஸ் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய இந்த நிறுவனம், மின்சார கார் விற்பனையில் கொடிகட்டி பறந்து வருகிறது. ஆனால், இந்த கார் இன்றளவும் இந்தியாவில் விற்பனையைத் தொடங்கவில்லை. காரணம் இந்திய சாலை அதன் தொழில்நுட்பத்துக்குப் பொருந்தாததும், அரசின் சில விதிமுறைகள் அந்த நிறுவனத்துக்கு சவலாக இருப்பதால் இந்த தடை ஏற்பட்டுள்ளது.

டெஸ்லா கார்

இந்த நிலையில், டெஸ்லா தானியங்கி கார்களை இந்தியச் சந்தையில் மிக விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலைியில், டெஸ்லா மின்சார காரின், மாடல் 3யின் விலையை குறைத்து அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய ரூபாய் மதிப்பில் அந்த நிறுவனம் 78 ஆயிரத்து 727 ரூபாயை குறைத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ எலன் முஸ்க் கூறியதாவது,

"வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக டெஸ்லா நிறுவனம், தனது மாடல் 3 காரின் விலையை இந்த வருடத்தில் மட்டும் இரண்டாவது முறையாக குறைத்துள்ளது. அதன்படி, தற்போது அந்த காரின் விலையானது இந்திய விலையில் 30 லட்சத்து 70 ஆயிரத்து 567 ரூபாய் என அறிவித்துள்ளது.

டெஸ்லா கார்

எதிர்பார்த்ததை விட கடந்த நான்காம் நிதியாண்டில் டெஸ்லா கார் விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. இதன்காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டெஸ்லா கார்

இதைத்தொடர்ந்து, மாடல் 3 செடான் ரக கார்களின் தயாரிப்பை டெஸ்லா சிறிதளவு உயர்த்தியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக மேலும் சில சலுகைகளையும் வழங்க உள்ளது" என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 6, 2019, 18:50 [IST]
English summary
Tesla Model 3 Car Price Cuts Second Time This Year. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X