நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

உலகம் முழுவதும் புரட்சியை ஏற்படுத்திய பிரபல நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார், நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரியும் காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வீடியோக்கள் பலவற்றை நாம் இணையதளம் வாயிலாக பலவற்றை கண்டிருப்போம். அந்தவிதத்தில், அண்மைக் காலங்களாக நம் செவிக்கு வந்துசேரும் அதிகப் படியான தகவல், எலெக்ட்ரிக் வாகனங்களின் தீ விபத்துகுறித்ததாக இருக்கின்றன.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

அந்தவகையிலான ஓர் புதிய செய்தியைதான் இந்த பதிவில் நாம் காண இருக்கின்றோம்.

உலக, எலெக்ட்ரிக் கார்கள் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்தான் இம்முறை தீயிற்கு இரையாகியுள்ளது.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

இந்த கார், தன்னுடைய தானியங்கி தொழில்நுட்பத்தின்மூலம், தனது உரிமையாளர்களை விபத்தில் இருந்து காப்பது போன்ற பல்வேறு வீடியோக்களை நாம் இதற்கு முன்னதாக கண்டிருப்போம். ஆனால், முதல் முறையாக, இந்த கார் விபத்தில் சிக்கி தீயிற்கு இரையாக காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

டெஸ்லா நிறுவனத்தின் மாடல்3 கார்தான் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் அனைத்து கார்களுமே, தானியங்கி நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருகின்றது.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

இது, ஓட்டுநர் இயங்காமல் திறன் கொண்டதாகும். அதேபோன்று, விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் அதையும், அதன் உரிமையாளரையும் பாதுகாத்துக் கொள்ளும்வகையிலான அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

ஆனால், இத்தகைய சிறப்பு வாய்ந்த மாடல்3 எலெக்ட்ரிக் கார்தான் தற்போது விபத்தில் சிக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

இந்த கார், ஓட்டுநரால் இயக்கப்பட்டாலோ அல்லது தானாக இயங்கினாலோ, குறிப்பிட்ட தூரத்தில் ஏதேனும் ஒரு வாகனம் விபத்தை ஏற்படுத்துவதைப் போன்று வந்தால், உடனடியாக இந்த காரின் செயற்கை நுண்ணறிவு காரை தானாக கட்டுபடுத்தி பாதுகாக்கும்.

இந்த திறன், தற்போது விபத்தைச் சந்தித்திருக்கும் காரில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன்காரணமாகவே, டெஸ்லா மாடல் 3 விபத்தில் சிக்கி, தீயில் கருகியுள்ளது.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

இச்சம்பவம், ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் அரங்கேறியுள்ளது. இந்த கார் அலெக்ஸி ட்ரெட்டியாகோவ் (Aleksey Tretyakov) என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. இவர், மாஸ்கோவின் ரிங் ரோட் எனப்படும் மிகவும் பிரபலமான சாலையில் தனது குடுபத்தினருடன் சென்றுள்ளார்.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

சுமார், 100 கிமீ வேகத்தில் சென்றுக்கொண்டிருந்த அந்த கார், அதற்கு முன்புறமாகச் சென்றுக் கொண்டிருந்த ரெகவரி வேனின்மீது மோதியது.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

இந்த விபத்தில், அலெக்ஸி மற்றும் அவரது இரு குழந்தைகளுக்கும் மிக மோசமான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்நாட்டின் ஐஎக்ஸ்பிடி.காம் என்ற தளம், அலெக்ஸியின் இரு குழந்தைகள் மட்டுமே விபத்தில் மோசமான சூழ்நிலையைச் சந்தித்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், காயமுற்ற குழந்தைகளை அவரே மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த விபத்து குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும், விபத்தின் தீவிரம் காரணமாக, கார் தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும், அந்த தீ தீவிரம் அடைந்து காரின் அனைத்து பகுதியையும் சூழ்ந்துவிட்டது.

தொடர்ந்து, தீயனைப்பு துறையினர் வருவதற்குள், காரின் அனைத்து பகுதியும் தீயிற்கு இரையாகிவிட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

மேலும், மிகவும் பிரபலமான செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட டெஸ்லா நிறுவனத்தின் மாடல்3 கார் விபத்தைச் சந்தித்திருப்பது, அதன் ரசிகர்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

டெஸ்லா மாடல்3 இந்திய மதிப்பில் 30 லட்சத்து 70 ஆயிரத்து 567 ரூபாய் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. அதேசமயம், இந்த கார் ஒரு முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 355 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும்.

நடு ரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் கார்... பதறவைக்கும் காட்சி வெளியீடு!

மேலும், 0 த்தில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 5.6 வினாடிகளில் இது எட்டிவிடும். அதேபோன்று, இந்த மாடலின் ஹை எண்ட் வேரியண்ட், ஒரே சார்ஜில் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனைப் பெற்றிருக்கின்றது. இந்த மாடல் 0 -100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளிலேயே எட்டிவிடும். இது மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 13, 2019, 16:11 [IST]
English summary
Tesla Model 3 Gets Fire In Russia. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+