பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த வீடியோ வைரலாக பரவி வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக கருதப்படும் எலெக்ட்ரிக் கார்கள் உலகம் முழுக்க வெகு வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன. எனவே உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. என்றாலும் இந்த ரேஸில் அமெரிக்காவின் டெஸ்லா (Tesla) நிறுவனம்தான் வேகமாக முந்தி சென்று கொண்டுள்ளது.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

டெஸ்லா நிறுவன எலெக்ட்ரிக் கார்களில், அதிநவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு துளி கூட பஞ்சமே இருக்காது. அத்துடன் ஒரு முறை சார்ஜ் செய்தால், மிக நீண்ட தொலைவு பயணிக்கும் வகையில் டெஸ்லா நிறுவன எலெக்ட்ரிக் கார்கள் வடிவமைக்கப்படுகின்றன. எனவேதான் டெஸ்லா நிறுவனம் உலகம் முழுக்க பிரபலமாக திகழ்ந்து வருகிறது.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

உலகின் பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தாலும் கூட, இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் இன்னும் கால் பதிக்கவில்லை. ஆனால் இந்தியர்கள் டெஸ்லாவின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். கூடிய விரைவில் அது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், டெஸ்லா நிறுவனத்திற்கு சற்றே பின்னடைவான சம்பவம் ஒன்று சீனாவில் தற்போது நிகழ்ந்துள்ளது.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த டெஸ்லா மாடல் எஸ் (Tesla Model S) கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் சீனாவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. சீனாவின் மிக பிரபலமான சமூக வலை தளமாக திகழும் வைபோ (Weibo) வெப்சைட்டில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. வைபோ என்பது டிவிட்டர் போன்றது. சீனாவின் மிகப்பெரிய சமூக வலை தளங்களில் ஒன்றாக இதனை கூறலாம்.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த டெஸ்லா மாடல் எஸ் கார் ஒன்று புகையை கக்கும் நிகழ்வை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. அதன்பின் ஓரிரு வினாடிகளில் கார் திடீரென தீப்பற்றி எரிகிறது. இந்த சம்பவம் சீனாவின் எந்த பகுதியில் நடைபெற்றது? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் வைபோ பயனாளர்கள் பதிவு செய்துள்ள கருத்துக்கள் அடிப்படையில் பார்த்தால், அனேகமாக ஷாங்காய் நகரமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

அதே சமயம் இந்த திடீர் தீ விபத்திற்கு என்ன காரணம்? என்பதும் உடனடியாக தெரியவரவில்லை. இந்த சூழலில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சீனாவிற்கு சிறப்பு குழுவை அனுப்பி வைத்திருப்பதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாங்கள் உடனடியாக சீனாவிற்கு குழுவை அனுப்பியுள்ளோம். உண்மையை வெளிக்கொணர உள்ளூர் அதிகாரிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இந்த சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதே தற்போதைக்கு தெரியவந்துள்ள தகவல்'' என கூறப்பட்டுள்ளது.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

கடந்த 2013ம் ஆண்டில் இருந்து எடுத்து கொண்டால், இதுவரை குறைந்தபட்சம் 14 முறை டெஸ்லா கார்கள் தீப்பிடித்திருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் பெரும்பாலான தீ விபத்து சம்பவங்கள் விபத்திற்கு பின் நிகழ்ந்தவை. சீனாவில் தற்போது நிகழ்ந்திருப்பதோ வேறு மாதிரியான விஷயம். பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

பெட்ரோல் கார்களை காட்டிலும் தங்களது எலெக்ட்ரிக் கார்கள் தீப்பிடிப்பதற்கான வாய்ப்பு தோராயமாக 10 மடங்கு குறைவு என டெஸ்லா நிறுவனம் தெரிவித்திருப்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். முன்னதாக சீனா-அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போரானது, டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களின் விலையில் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

இப்படிப்பட்ட நிலையிலும் சீனாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகரிக்க டெஸ்லா நிறுவனம் முயற்சி செய்து வரும் சூழலில்தான் இந்த தீ விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு வித அச்சம் எழுந்துள்ளது. இருந்தபோதும் டெஸ்லா கார்கள் விற்பனையில் இது பாதிப்பை உண்டாக்குமா? என்றால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என சீனாவின் ஆட்டோமொபைல் வல்லுனர்கள் அடித்து கூறுகின்றனர்.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

இதுகுறித்து ஆட்டோமொபைல் நிபுணர்கள் கூறுகையில், ''டெஸ்லா நிறுவன எலெக்ட்ரிக் கார்கள் இதற்கு முன்பும் கூட தீப்பற்றி எரிந்துள்ளன. ஆனால் அதன் காரணமாக சீனாவில் டெஸ்லாவின் வளர்ச்சி எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் தற்செயலானது என விசாரணையில் உறுதி செய்யப்பட்டு விட்டால், டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது'' என்றனர்.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

தற்போதைய நிலையில் டெஸ்லா நிறுவனம் சீனாவில் விற்பனை செய்யும் தனது அனைத்து கார்களையும் இறக்குமதிதான் செய்து வருகிறது. என்றாலும் ஷாங்காய் நகரில், டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது. அங்கு முதற்கட்டமாக டெஸ்லா மாடல் 3 (Tesla Model 3) கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதன் மூலம் சீனா-அமெரிக்கா இடையேயான வர்த்தக போரின் தாக்கம் குறையும்.

பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? வைரல் வீடியோவால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சி...

முன்னதாக ஏற்கனவே குறிப்பிட்டபடி டெஸ்லா மாடல் எஸ் எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரியும் வீடியோ சீனாவில் வைரலாக பரவி வருகிறது. Jay In Shanghai வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த சம்பவம் தொடர்பான உடனடியாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என சமூக வலை தள வாசிகள் டெஸ்லா நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் இந்த சம்பவத்தை கிண்டல் அடித்து வருகின்றனர். ''டெஸ்லா காருக்கு அடுத்தபடியாக நமது காரை பார்க்கிங் செய்யக்கூடாது என்பதே இந்த சம்பவத்தில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்'' என ஒருவர் நக்கலாக கமெண்ட் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2019, 15:24 [IST]
English summary
Tesla Model S Catches Fire: Investigation Begins- Video. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+