முழு சார்ஜில் 400 கிமீ செல்லும் புதிய டெஸ்லா எஸ்யூவி கார் அறிமுகம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில், மாடல் ஒய் என்ற பெயரிலான இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிமுகம் செய்தார்.

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் பயணிக்கும் புதிய டெஸ்லா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

முழு சார்ஜில் 400 கிமீ செல்லும் புதிய டெஸ்லா எஸ்யூவி கார் அறிமுகம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில், மாடல் ஒய் என்ற பெயரிலான இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிமுகம் செய்தார். எஸ்யூவி மற்றும் கூபே ரக கார்களின் வடிவமைப்பை கலந்து கட்டிய க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

முழு சார்ஜில் 400 கிமீ செல்லும் புதிய டெஸ்லா எஸ்யூவி கார் அறிமுகம்!

டெஸ்லா நிறுவனத்தின் இரண்டாவது மின்சார எஸ்யூவி மாடலாக இது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பேட்டரி திறனை பொறுத்து இரண்டு விதமான மாடல்களில் கிடைக்கும்.

முழு சார்ஜில் 400 கிமீ செல்லும் புதிய டெஸ்லா எஸ்யூவி கார் அறிமுகம்!

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை செல்லும் மாடலானது விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கும். இந்த மாடலுக்கு 39,000 டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.26.89 லட்சம் விலை கொண்டது.

முழு சார்ஜில் 400 கிமீ செல்லும் புதிய டெஸ்லா எஸ்யூவி கார் அறிமுகம்!

அதிக திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்ட மாடல் ஒய் காருக்கு 47,000 முதல் 60,000 டாலர் விலை நிர்ணயிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மாடல்தான் முதலில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த பிரிமீயம் மாடல் ஒய் காரும், 2021ம் ஆண்டில் மேற்கண்ட விலை குறைவான மாடலும் சந்தையில் கிடைக்கும்.

முழு சார்ஜில் 400 கிமீ செல்லும் புதிய டெஸ்லா எஸ்யூவி கார் அறிமுகம்!

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டெஸ்லா மாடல் எக்ஸ் மின்சார எஸ்யூவி காரின் அடிப்படையிலான விலை குறைவான எஸ்யூவி மாடலாக மாடல் ஒய் வர இருக்கிறது. மாடல் எக்ஸ் காரில் இருக்கும் ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் இந்த மாடல் ஒய் காரில் இடம்பெற்றிருக்காது. குறிப்பாக, ஃபால்கன் டோர் எனப்படும் விசேஷமான முறையில் திறக்கும் கதவுகள் இருக்காது.

முழு சார்ஜில் 400 கிமீ செல்லும் புதிய டெஸ்லா எஸ்யூவி கார் அறிமுகம்!

டெஸ்லா மாடல் 3 செடான் காரைவிட மாடல் ஒய் எஸ்யூவி கார் 10 சதவீதத்திற்கு மேல் பெரிய கார் மாடலாக இருக்கும். டெஸ்லா மாடல் 3 கார் மாடலானது 4,690 மிமீ நீளமும், 1,930 மிமீ அகலமும், 1,440 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதன் வீல் பேஸ் 2,880 மிமீ ஆக இருக்கிறது. இதைவிட பெரிய காராக வருகிறது மாடல் ஒய் கூபே ரக எஸ்யூவி.

முழு சார்ஜில் 400 கிமீ செல்லும் புதிய டெஸ்லா எஸ்யூவி கார் அறிமுகம்!

மேலும், டெஸ்லா மாடல்3 காரில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே பேட்டரிகள்தான் இந்த புதிய மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, மாடல் 3 காரில் 50, 62 மற்றும் 75 kWh பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

முழு சார்ஜில் 400 கிமீ செல்லும் புதிய டெஸ்லா எஸ்யூவி கார் அறிமுகம்!

அடுத்த ஆண்டு புதிய டெஸ்லா மாடல் ஒய் காரின் உற்பத்தி துவங்கப்பட இருக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள நெவடா பகுதியில் அமைந்திருக்கும் டெஸ்லா ஜிகாஃபேக்டரியில்தான் புதிய மாடல் ஒய் எஸ்யூவி கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2019, 16:00 [IST]
English summary
Tesla unveiled their all-new Model Y SUV recently at California, USA. The mid-size electric SUV was unveiled by Elon Musk and will be the most-affordable electric-SUVs from the American EV carmaker.
மேலும்... #டெஸ்லா #tesla
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+