இந்தியா வரும் 'மேட் இன் சைனா' டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள்?

இந்தியாவில் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு டெஸ்லா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியா வரும் 'மேட் இன் சைனா' டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள்?

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா கார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. சொகுசு, அதிக பயண தூரம், சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வர்த்தக விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்தியா வரும் 'மேட் இன் சைனா' டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள்?

அந்த வகையில், இந்தியாவிலும் தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டெஸ்லா திட்டமிட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 செடான் காரையும், மாடல் ஒய் என்ற க்ராஸ்ஓவர் ரக எலெக்ட்ரிக் காரையும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாம்.

இந்தியா வரும் 'மேட் இன் சைனா' டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள்?

மேலும், சீனாவில் உள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த இரண்டு கார்களையும் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கவும் முடிவு செய்துள்ளதாம். இதில், மாடல் 3 கார் மிக குறைவான டெஸ்லா காராக இருக்கும் என்பதால், இந்தியாவில் விற்பனையில் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வரும் 'மேட் இன் சைனா' டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள்?

இருப்பினும், சீனாவிலிருந்து கார்களை இறக்குமதி செய்வதில் பல்வேறு நடைமுறை மற்றும் விதிமுறைகள் சவாலாக இருப்பதால், விரைவில் இதுகுறித்து டெஸ்லா இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. மேலும், இந்தியாவில் அமைக்க திட்டமிட்ட கார் ஆலையையும் சீனாவில் அமைக்க முடிவு செய்தது.

இந்தியா வரும் 'மேட் இன் சைனா' டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள்?

இந்தியாவில் மின்சார கார்களுக்கான கட்டமைப்பு போதிய அளவு வலுவாக இல்லாததே, இந்த முடிவுக்கு காரணம். இதே காரணத்தால்தான், இந்தியாவில் கார்களை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வருவதிலும் டெஸ்லா ஆர்வம் காட்டவில்லை.

இந்தியா வரும் 'மேட் இன் சைனா' டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள்?

எனினும், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதால், அடுத்த ஆண்டு இந்தியாவில் களமிறங்குவதற்கான திட்டங்கள் குறித்து டெஸ்லா அறிவித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வரும் 'மேட் இன் சைனா' டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள்?

டெஸ்லா மாடல் 3 செடான் கார் ரூ.22 லட்சம் மதிப்பில் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. இந்த காரை இறக்குமதி செய்து விற்பனை செய்யும்போது வரி அதிகமாக நிர்ணயிக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே, எந்த மாதிரியான வர்த்தக முடிவுடன் இந்தியாவில் டெஸ்லா கால் பதிக்கும் என்பதை காண ஆட்டோமொபைல் துறை ஆவலுடன் காத்திருக்கிறது.

Source: Businessworld

More from DriveSpark

Article Published On: Thursday, October 31, 2019, 11:55 [IST]
English summary
According to report, Tesla is planning to launch 2 electric car models in India.
மேலும்... #டெஸ்லா #tesla
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+