இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

நடப்பு தசாப்தம் துவங்கியது முதலே எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்தது. மினி எஸ்யூவி, காம்பேக்ட் எஸ்யூவி, பிரிமீயம் எஸ்யூவி என வடிவத்திலும், ரகத்திலும் எந்தவிதமான எஸ்யூவி மாடலுக்கும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் கூட ரெனோ க்விட் போன்ற எஸ்யூவி ஸ்டைலிலான மாடல்கள் அவசியமாகிவிட்டன. ஓரிரு மாதங்களில் அறிமுகமாக இருக்கும் புதிய மாருதி ஆல்ட்டோ கார் கூட எஸ்யூவி ரகத்திலேயே வடிவமைக்கப்பட்டு வர இருக்கிறது.

இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

மேலும், இந்தியாவில் களமிறங்கும் எம்ஜி மோட்டார்ஸ், சிட்ரோன் போன்ற அனைத்து கார் நிறுவனங்களுமே, எஸ்யூவி மாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து இருப்பதை பார்க்க முடிகிறது. எம்ஜி ஹெக்டர், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ், கியா எஸ்பி என்று தங்களது முதல் கார் மாடலையே எஸ்யூவி ரக மாடலாகவே நிலைநிறுத்த கார் நிறுவனங்கள் எத்தனிக்கின்றன.

இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

ஒவ்வொரு ரகத்திலும் ஒரு எஸ்யூவி மாடல் வேண்டும் என்பதை மனதில் வைத்து மஹிந்திரா, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் தீவிர வர்த்தக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அண்மையில் வந்த டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்களுக்கான வரவேற்பும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

மறுபுறத்தில் ஹேட்ச்பேக், செடான் வகை கார்களுக்கான விற்பனை வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்கள்தான் விற்பனை அடிப்படையில் டாப் -10 லிஸ்ட்டில் இடம்பிடிக்கும்.

இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

ஆனால், தற்போது மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்களின் விற்பனை பல முன்னணி ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களை விஞ்சி நிற்கிறது. மேலும், மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டிலும் எதிர்பார்த்த அளவு விற்பனை வளர்ச்சி இல்லை. அதாவது, எஸ்யூவி கார்களை ஒப்பிடுகையில் அந்த அளவு விற்பனை வளர்ச்சி இல்லை.

இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

பட்ஜெட் கார் மார்க்கெட் மட்டுமல்ல, சொகுசு கார் மார்க்கெட்டிலும் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஆடி க்யூ3 எஸ்யூவிக்கு கிடைத்த புக்கிங் பற்றிய செய்தி வியக்க வைத்தது.

இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

அதேபோன்று, கடந்த ஆண்டு அறிமுகமான வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவிக்கான வரவேற்பும் நீங்கள் எங்களது செய்திகள் வாயிலாக அறிந்ததே. பென்ஸ், பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களும் புதிய எஸ்யூவி மாடல்களை அதிக அளவில் கொண்டு வருவதற்கான திட்டங்களில் கவனம் செலுத்தி வருகின்றன.

இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

முரட்டுத்தனமான தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிக இடவசதி, அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ் போன்ற விஷயங்கள் உலக அளவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பை அதிகரித்துவிட்டது. மேலும், ஆஃப்ரோடு சாகசங்கள் மீதான மோகமும், வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்து வருகின்றன.

இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

இன்று அதிக அளவில் எஸ்யூவி கார்கள் பற்றிய செய்தியைத்தான் வாசகர்களும் விரும்பி படிக்கின்றனர். பிற கார்கள் மீதான மோகம் மெல்ல குறைய துவங்கிவிட்டதாகவே கருத முடிகிறது. எஸ்யூவி கார்களை போன்று இன்று மின்சார கார்களுக்கான வரவேற்பும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கிறது.

இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

இந்தியாவிலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் விரைவில் செயல்பாட்டு வர இருக்கின்றன. எனவே, அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் மின்சார கார்களுக்கான வரவேற்பும், தேவையும் வெகுவாக உயரும்.

இது எஸ்யூவி கார்களின் யுகம்...!!

அங்கேயும் எஸ்யூவி ரகத்திலான மின்சார கார்களைத்தான் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார்ஸ், மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. எனவே, இது எஸ்யூவி ரக கார்களின் யுகமாகவே கருத முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 11, 2019, 14:49 [IST]
English summary
The Golden Age Of SUV cars Now.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+