அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

டொயோட்டாவிற்கு நிகர் டொயோட்டாதான் என்பதை இன்னோவா கார் ஒன்று நிரூபித்து காட்டியுள்ளது. இந்த கார் எவ்வளவு கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா இன்னோவா கார் கடந்த 2005ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சௌகரியம் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய இரண்டு சொற்களுக்கு டொயோட்டா இன்னோவா காரை தாராளமாக குறிப்பிடலாம்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

அறிமுகம் செய்யப்பட்டது முதல் டொயோட்டா இன்னோவா விற்பனை கொடி கட்டி பறந்து கொண்டிருப்பதற்கு இதுவே முக்கிய காரணம். முதல் தலைமுறை இன்னோவா கார்கள் கூட, இன்றளவும் எவ்வித பிரச்னையும் இன்றி சாலைகளில் பயணித்து கொண்டிருப்பதை பலர் கண் கூடாக பார்த்திருக்க கூடும். டொயோட்டோவின் தரம் அப்படி.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்திய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் டொயோட்டா இன்னோவா காரின் விலை சற்று அதிகம். அப்படி இருந்தும் கூட இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார்களில் ஒன்றாக இன்னோவா உள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

விலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவில் இது சாதாரணமான விஷயம் அல்ல. இதற்கு டொயோட்டா இன்னோவா காரின் கட்டுமான தரம் (Build Quality), நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜின், விசாலாமான மற்றும் சௌகரியமான இன்டீரியர்கள் ஆகியவையே முக்கியமான காரணங்கள்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியிலும் டொயோட்டா இன்னோவா மிக பிரபலமான கார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் தமிழக அரசியலில் இன்னோவாவிற்கு என தனி இடமே கொடுக்கலாம்!!!

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த சூழலில், 6 லட்சம் கிலோ மீட்டர்கள் வெற்றிகரமாக ஓடிய டொயோட்டோ இன்னோவா கார் ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சரியாகதான் படித்துள்ளீர்கள். ஆம், உண்மையில் இந்த இன்னோவா 6 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், 6 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்த பிறகும் கூட, இந்த கார் தற்போதும் எவ்வித தடங்கலும் இன்றி ஓடி கொண்டுள்ளது. இது ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வெளிவந்த முதல் தலைமுறை காராகும்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

கோபிநாதன் என்பவர்தான் இந்த காரின் உரிமையாளர். கடந்த 2005ம் ஆண்டு ஜூலை மாதம், கேரளாவில் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கார் 6 லட்சம் கிலோ மீட்டர்கள் வெற்றிகரமாக ஓடுவது என்பதெல்லாம் உண்மையில் சாதாரணமான விஷயம் கிடையாது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த அதிசய காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், 6 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்த பிறகுதான் முதல் முறையாக கிளட்ச் மாற்றப்பட்டுள்ளது. இதுவும் ஒரு தனித்துவமான விஷயமாகதான் அனைவராலும் பார்க்கப்படுகிறது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஏனெனில் இந்தியாவை சேர்ந்த பல கார் உரிமையாளர்கள் ஒவ்வொரு 50 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் ஒரு முறை கிளட்ச்சை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் கோபிநாதனின் இந்த டொயோட்டா இன்னோவா ஒரே ஒரு கிளட்ச்சில் 6 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணித்துள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

பொதுவாக ஒரு கார் அறிமுகம் செய்யப்பட்டால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே அதனை வாங்க வேண்டும் என்ற ஆலோசனை பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் கார் உற்பத்தி நிறுவனம் அப்போதுதான் புகார்களை பெற்று, காரின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஒருவேளை இது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் டொயோட்டா விஷயத்தில் அப்படி அல்ல என்பதை இந்த இன்னோவா நிரூபித்து காட்டியுள்ளது. ஏனெனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே இந்த கார் வாங்கப்பட்டுள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இப்படி பல்வேறு அரிய சாதனைகளை நிகழ்த்தியிருப்பதன் காரணமாகதான் தற்போது இந்த இன்னோவா அனைவராலும் கவனிக்கப்படும் காராக உருவெடுத்துள்ளது. இந்த கார் கேரளாவில் உள்ள நிப்பான் டொயோட்டா என்ற டீலர்ஷிப்பில் வாங்கப்பட்டுள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

அத்துடன் அங்கேயே சர்வீசும் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த விஷயத்தில் இன்னோவா காருடன் சேர்த்து, அதனை முறையாக பராமரித்து வந்த அதன் உரிமையாளர் கோபிநாதன் மற்றும் நிப்பான் டொயோட்டா ஊழியர்களுக்கும் பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஏனெனில் சரியாக பராமரிக்காவிட்டால், டொயோட்டாவாக இருந்தாலும் சரி அல்லது உலகின் வேறு எந்த முன்னணி நிறுவனத்தின் காராக இருந்தாலும் சரி, நிச்சயமாக நீடித்து உழைக்காது. குறைவான ஆயுட்காலத்திலேயே பழுதாகி விடும்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த வியப்பிற்குரிய முதல் தலைமுறை இன்னோவா காரில், 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டி-4டி (D-4D) டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீசல் இன்ஜினுடன் இணைந்து 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

தற்போது இன்னோவா கிரிஸ்டா என்ற பெயரில், இரண்டாம் தலைமுறை இன்னோவா விற்பனையாகி கொண்டுள்ளது. முந்தைய தலைமுறை மாடலின் மரபை அது சுமந்து கொண்டிருந்தாலும், முன்பை காட்டிலும் பெரியதாக, அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இது 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல், 2.8 லிட்டர் டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வது என உங்கள் காரை நீங்கள் முறையாக பராமரித்தால், அது எவ்வித பிரச்னையும் இன்றி நீண்ட காலம் உழைக்கும். அத்துடன் உங்களின் மகிழ்ச்சியான தருணங்களில் உற்ற தோழனாகவும் நிற்கும்!!!

Image Courtesy: ModsOwnCountry Whatsapp Group

More from DriveSpark

Article Published On: Friday, February 1, 2019, 18:37 [IST]
English summary
This First Generation Toyota Innova Covered More Than 6 Lakhs Km. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+