சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-3 கார்கள்... எக்ஸ்யூவி300, ஹாரியர், எர்டிகா!
இந்திய கார் மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களில் பல்வேறு புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், 3 கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1. மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV 300)
விலை: ரூ.7.9 லட்சம் முதல் 11.99 லட்சம் வரை
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் இது. மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 காரை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சாங்யாங் டிவோலி காரின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் எக்ஸ்யூவி300 காரும் உருவாக்கப்பட்டுள்ளது. விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்விரு கார்களும் பல்வேறு பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளன. என்றாலும் எக்ஸ்யூவி300 காரின் எக்ஸ்டீரியர் டிசைன் மட்டும் வேறுபட்டதாக உள்ளது.

அல்டுராஸ் ஜி4 காரில் இருப்பதை போன்ற முன்பக்க க்ரில் அமைப்புதான் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஹெட்லேம்ப்ஸ் டிசைன் புதிது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் பக்கவாட்டு டிசைன் எளிமையாக உள்ளது. மஹிந்திரா நிறுவனம் டைமண்ட் கட் அலாய் வீல்களை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் பின் பகுதி புதிய டெயில் லேம்ப்ஸை பெற்றுள்ளது.

ஆனால் இன்டீரியர் டிசைன் டிவோலியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டீரியல்களின் தரம் சிறப்பாக உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் வசதிகளுக்கு பஞ்சமே இல்லை. சன் ரூஃப், 4 டிஸ்க் பிரேக்குகள், 7 ஏர் பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ், அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் அலர்ட் என மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் இடம்பெற்றுள்ள வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில், மேனுவல் கியர் பாக்ஸ் உடன் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

2. டாடா ஹாரியர் (Tata Harrier)
விலை: ரூ.12.7 லட்சம் முதல் 16.37 லட்சம் வரை
மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை காட்டிலும் அதிக எதிர்பார்ப்பு டாடா ஹாரியர் எஸ்யூவி காருக்கு நிலவி வந்தது. ஹாரியர் எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா ஹாரியர் கார் 17 இன்ச் அலாய் சக்கரங்களை பெற்றுள்ளது. இதன் மூன்றாவது வரிசை கண்ணாடி தனித்துவமான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் பின்பகுதியில் எல்இடி டெயில் லேம்ப்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர புதிய பம்பரும் இடம்பெற்றுள்ளது. இதன் இன்டீரியர் டிசைன் மிகவும் மாடர்ன் ஆக உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டீரியல்களின் தரமும் சிறப்பாக உள்ளது. டாடா ஹாரியர் காரில், டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோல், லெதர் இருக்கைகள், ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் கேமரா உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. டாடா ஹாரியர் எஸ்யூவி காரில், 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

3. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)
விலை: ரூ.7.4 லட்சம் முதல் 10.9 லட்சம் வரை
இரண்டாவது தலைமுறை எர்டிகா காரை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த எம்பிவி கார் பிரீமியமாக இருக்க வேண்டும் என்பதற்காக புத்தம் புதிய டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முன்பகுதியில் புதிய புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், புதிய க்ரில் அமைப்பு மற்றும் அப்டேட் செய்யப்பட்ட பம்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால் பக்கவாட்டு டிசைன் அப்படியேதான் உள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி காரில், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடன் கூடிய டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் கேமரா உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. மாருதி சுஸுகி எர்டிகா காரில், புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் 1.3 லிட்டர் டீசல் இன்ஜினுக்கு மாற்றாக புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
குறிப்பு: இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.


Click it and Unblock the Notifications








