ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 5 எஸ்யூவி: அதிரடியாக விற்பனையான ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

இந்திய வியாபார சந்தையில் எஸ்யூவி ரக கார்களின் வரிசையில் கடந்த ஏப்ரல் மாதம் ஹூண்டாய், டாடா, மஹிந்திரா போன்ற முன்னணி கார்கள் நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் சிறப்பான விற்பனையை கடந்துள்ளது. மேலும் இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 5 எஸ்யூவி: அதிரடியாக விற்பனையான ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

இந்திய கார் பிரியர்கள் மத்தியில் எஸ்யூவி ரக கார்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் உண்டு. இதனால் பொதுவாக எஸ்யூவி ரக கார்கள் சிறப்பான விற்பனையை அடையும். அவ்வகையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய வியாபார சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஜீப் காம்பஸ் மற்றும் ரெனால்ட் டஸ்ட்டர் ஆகிய எஸ்யூவி கார்கள் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி விற்பனையாகியுள்ளது என கார்வாலே இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 5 எஸ்யூவி: அதிரடியாக விற்பனையான ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

ஹூண்டாய் கிரெட்டா:

ஹூண்டாய் நிறுவனத்தின் காம்பெக்ட் எஸ்யுவியாக விற்பனைக்கு களம் இறங்கியது. எடை குறைவாகவும், நல்ல பிக்கப் அளித்ததால் வாடிக்கையாளர்களை இது மிகவும் கவர்ந்தது. ஹூண்டாய் கிரெட்டாவின் சக்திவாய்ந்த 1.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 128 பிஎஸ் பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை வழங்கும் . மேலும் இதில் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் கிடைக்கிறது. ரூபாய் 13.59 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் கிரெட்டா எஸ்யூவி. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10,487 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 5 எஸ்யூவி: அதிரடியாக விற்பனையான ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

டாடா ஹாரியர்:

புதிய ஹாரியர் எஸ்யூவி காரை டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதன்பின்னர் இந்திய எஸ்யூவி சந்தையில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக டாடா ஹாரியர் மாறியது. டாடா ஹாரியர் எஸ்யூவியின் சக்திவாய்ந்த 2.0 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவி ரூபாய் 12.69 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டாடா ஹாரியர் எஸ்யூவி கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2,075 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 5 எஸ்யூவி: அதிரடியாக விற்பனையான ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

மஹிந்திரா எக்ஸ்யூவி 500:

மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 500 கார் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகமானது, இதன் ஆற்றல்மிக்க 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் 140 பிஎச்பி பவரையும் 330 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. மேலும் இதில் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மூன்று வேரியண்டில் விற்பனையாகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1,508 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 5 எஸ்யூவி: அதிரடியாக விற்பனையான ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

ஜீப் காம்பஸ்:

அமெரிக்காவை சார்ந்த ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யுவி பெட்ரோல் மற்றும் டீசல் என் இரு வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படுகிறது.இதில் உள்ள நவீன 1.4 லிட்டர் மல்டி-டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். ஜீப் காம்பஸ் எஸ்யுவியில் 6 ஸ்பீட் மற்றும் 7 ஸ்பீட் டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யுவி 15.16 லட்சம் ரூபாயில் துவங்கி ரூ. 21.37 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஜீப் காம்பஸ் எஸ்யுவி கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1,204 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 5 எஸ்யூவி: அதிரடியாக விற்பனையான ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

ரெனால்ட் டஸ்ட்டர்:

இந்திய எஸ்யூவி விற்பனையில் சந்தையில் டஸ்ட்டர் எஸ்யுவி ரெனால்ட் நிறுவனத்திற்கு சிறப்பான அறிமுகத்தை மக்களிடம் தந்தது. ரெனால்ட் டஸ்ட்டர் பெட்ரோல் மற்றும் இரு டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனையாகிறது. இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 104 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் .மேலும் இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும் மற்றொரு டீசல் என்ஜின் 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி 749 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

Most Read Articles
English summary
Top 5 SUVs sold in India in April 2019: Read More in Tamil
Story first published: Thursday, May 9, 2019, 17:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X