Just In
- 1 hr ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 2 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 5 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- News பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
விற்பனை மிக கடுமையாக சரிவடைந்தாலும் மாருதி சுஸுகி ஆதிக்கம் தொடர்கிறது... 10ல் 7 இடங்களை பிடித்தது...
விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ள சூழலிலும், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை சமீப காலமாக மிக கடுமையாக சரிவடைந்து வருகிறது. எனினும் 10ல் 7 இடங்களை அந்நிறுவனம்தான் தன்வசப்படுத்தியுள்ளது. எஞ்சியுள்ள மூன்று இடங்களை ஹூண்டாய் கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.
Rank | Model | Units |
1 | Maruti WagonR | 15,062 |
2 | Maruti Dzire | 12,923 |
3 | Maruti Swift | 12,677 |
4 | Maruti Alto | 11,577 |
5 | Maruti Baleno | 10,482 |
6 | Maruti Eeco | 9,814 |
7 | Hyundai Venue | 9,585 |
8 | Maruti Ertiga | 9,222 |
9 | Hyundai i20 | 9,012 |
10 | Hyundai Creta | 6,585 |
மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை மாதத்திற்கு மாதம் சரிவடைந்து கொண்டே வருகிறது. ஆனால் வேகன் ஆர் காரை பொறுத்தவரை நிலைமை அப்படியே தலை கீழாக உள்ளது. கடந்த ஜூலை மாதம் 15,062 வேகன் ஆர் கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதத்தில் 10,288 வேகன் ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அப்போது 5வது இடத்தில் இருந்த வேகன் ஆர் தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த பட்டியலில் 2வது இடத்தை மாருதி டிசையரும், 3வது இடத்தை மாருதி ஸ்விப்ட்டும் பிடித்துள்ளன. மொத்தம் 12,923 மாருதி டிசையர் கார்களும், 12,677 ஸ்விப்ட் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசையர் காரின் விற்பனைக்கு மிக நெருக்கமாக ஸ்விப்ட் காரின் விற்பனையும் வந்துள்ளது. ஆனால் கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிட்டால் இரண்டு கார்களின் விற்பனையுமே சரிவடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 14,868 டிசையர் கார்களும், 16,300 ஸ்விப்ட் கார்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் கடந்த மாதங்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த கார் மாருதி சுஸுகி ஆல்டோ. ஆனால் இம்முறை ஆல்டோ 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 11,577 ஆல்டோ கார்களை மட்டுமே மாருதி சுஸுகியால் விற்பனை செய்ய முடிந்துள்ளது. ஆனால் கடந்த ஜூன் மாதம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆல்டோ கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் 5வது மற்றும் 6வது இடங்களை முறையே மாருதி சுஸுகி பலேனோ மற்றும் மாருதி சுஸுகி ஈக்கோ ஆகிய கார்கள் பிடித்துள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் மொத்தம் 10,482 பலேனோ கார்களையும், 9,814 ஈக்கோ கார்களையும் விற்பனை செய்துள்ளது.
இந்த சூழலில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக ஹூண்டாய் வெனியூ தற்போது உருவெடுத்துள்ளது. 9,585 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் இந்த காம்பேக்ட் எஸ்யூவி பட்டியலில் 7வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இதில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், ஹூண்டாய் வெனியூவின் நேரடி போட்டியாளரான மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா டாப்-10 பட்டியலில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ளது என்பதுதான்.
இந்த பட்டியலில் 8வது இடத்தை மாருதி சுஸுகி எர்டிகா பிடித்துள்ளது. மொத்தம் 9,222 எர்டிகா கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் கடைசி இரு இடங்களை முறையே ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகியவை பிடித்துள்ளன. 9,012 யூனிட்கள் என்ற விற்பனை எண்ணிக்கையுடன் ஹூண்டாய் ஐ20 ஒன்பதாவது இடத்தையும், 6,585 யூனிட்கள் என்ற விற்பனை எண்ணிக்கையுடன் ஹூண்டாய் கிரெட்டா 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!