விற்பனையில் கலக்கும் இந்தியாவின் டாப்- 8 எம்பிவி கார்கள்!

எம்பிவி கார்களுக்கான வரவேற்பு இந்தியாவில் எப்போதுமே அதிகம். இந்த நிலையில், புதிய மாடல்களின் வரவு மற்றும் வாடிக்கையாளர்களின் பட்ஜெட் அடிப்படையில் பல்வேறு விலை ரகங்களில் எம்பிவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் விற்பனையில் முதல் 8 இடங்களை பிடித்த எம்பிவி கார்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் கலக்கும் இந்தியாவின் டாப் -8 எம்பிவி கார்கள்!

08. டாடா ஹெக்ஸா

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மார்க்கெட்டை குறிவைத்து டாடா ஹெக்ஸா அறிமுகம் செய்யப்பட்டது. ஆஜானுபாகுவான தோற்றம், சிறப்பான இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான விலையில் வந்ததாத்ல, ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. ஆனால், புதிய மாடல்களின் வரவால் அந்த வரவேற்பை தக்க வைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 10 வது இடத்தையே டாடா ஹெக்ஸா பிடித்தது.

கடந்த மாதத்தில் 136 ஹெக்ஸா கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. ஹெக்ஸா காருக்கு வரவேற்பு குறைந்த நிலையில், விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் அடிப்படையிலான கசினி என்ற 7 சீட்டர் எஸ்யூவி ரக மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் கலக்கும் இந்தியாவின் டாப் -8 எம்பிவி கார்கள்!

07. டட்சன் கோ ப்ளஸ்

டட்சன் கோ ப்ளஸ் கார் 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்பட்ட 7 சீட்டர் எம்பிவி ரக மாடல். இந்த காரின் மூன்றாவது வரிசை இருக்கை ஒப்புக்குத்தான் வழங்கப்பட்டு இருக்கிறது. சிறியவர்கள் அமர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அதேநேரத்தில், இதனை 5 சீட்டர் மாடலாக பயன்படுத்தும்போது, பெரிய ஹேட்ச்பேக் காரின் வசதியை அளிக்கும்.

டட்சன் கார்களின் தரம், இந்த பிராண்டின் மீதான நம்பகத்ததன்மையும், விற்பனைக்கு பிந்தைய சேவையும் இந்த காருக்கு பின்னடைவாக இருந்து வருகிறது. ஆனால், மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் எம்பிவி கார். கடந்த மாதத்தில் 169 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

விற்பனையில் கலக்கும் இந்தியாவின் டாப் -8 எம்பிவி கார்கள்!

06. மஹிந்திரா ஸைலோ

மார்க்கெட்டில் நீண்ட காலமாக இருந்து வரும் எம்பிவி ரக கார் மாடல். இடவசதி, எரிபொருள் சிக்கனம் மிகுந்த இதன் எஞ்சின் தனி நபர் வாடிக்கையாளர் சந்தை மட்டுமின்றி, டாக்சி மார்க்கெட்டிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. எனினும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் புதிய கார் மாடல்களால் விற்பனையில் பெரிய எண்ணிக்கையை பதிவு செய்ய முடியவில்லை. கடந்த மாதம் 356 ஸைலோ கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

விற்பனையில் கலக்கும் இந்தியாவின் டாப் -8 எம்பிவி கார்கள்!

05. மஹிந்திரா மராஸ்ஸோ

மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா கார்களின் மாமர்க்கெட்டை நேரடியாக குறிவைத்து களமிறக்கப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ காரும் ஆரம்ப கட்டத்தில் அதிக புக்கிங்குகளை பெற்றது. ஆனால், அதனை தொடர்ந்து தக்கவைக்கவில்லை. கடந்த மாதத்ததில் 697 மராஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. மாருதி எர்டிகா காரின் சரியான பட்ஜெட் மற்றும் டொயோட்டா இன்னோவா காரின் பிரிமீயம் அந்தஸ்தை மராஸ்ஸோவால் எதிர்பார்த்த அளவு உடைக்கமுடியவில்லை.

விற்பனையில் கலக்கும் இந்தியாவின் டாப் -8 எம்பிவி கார்கள்!

04. மாருதி எக்ஸ்எல்-6

மாருதி எர்டிகா காரில் பல மாறுதல்களை செய்து எக்ஸ்எல்-6 என்ற பெயரில் பிரிமீயம் ரக மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மாருதி எக்ஸ்எல்-6. மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண எர்டிகா காரைவிட அதிக சிறப்பம்சங்கள் மற்றும் சொகுசான கேப்டன் இருக்ககைகளுடன் 6 சீட்டர் மாடலாக வந்துள்ளது. கடந்த மாதத்தில் 2,356 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. மராஸ்ஸோ, ட்ரைபர் உள்ளிட்ட கார்களால் மாருதி எர்டிகா காரின் மார்க்கெட்டை பாதிக்கக்கூடாது என்று மாருதி போட்ட கணக்கு, கூடுதல் விற்பனையை பெற்று சரியாகி இருக்கிறது.

விற்பனையில் கலக்கும் இந்தியாவின் டாப் -8 எம்பிவி கார்கள்!

03. ரெனோ ட்ரைபர்

அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே டாப்- 5 இடத்திற்குள் வந்துள்ளது ரெனோ ட்ரைபர். இதுவும் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் 7 சீட்டர் கார் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.4.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்திருக்கும் இந்த காரின் இருக்கைகளை பல்வேறு விதங்களில் பயன்பாட்டுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் ஹைலைட். இன்ஃபோடெயின்மென்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. கடந்த மாதத்தில் 2,490 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது எதிர்பார்த்ததைவிட குறைவுதான். ரெனோ பிராண்டின் மீதான நம்பகத்தன்மையையும், விற்பனைக்கு பிந்தையை சேவையையும் செம்மைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

விற்பனையில் கலக்கும் இந்தியாவின் டாப் -8 எம்பிவி கார்கள்!

02. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

இந்தியாவின் அதிசிறந்த எம்பிவி கார் என்ற பெருமையை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. டிசைன், இடவசதி, பிரிமீயம் அம்சங்கள், அந்தஸ்தை உயர்த்தும் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் கனவு எம்பிவி கார் மாடலாக விளங்குகிறது. மிக நீண்ட காலமாக இந்தியாவின் சிறந்த எம்பிவி கார் மாடல் என்ற பெருமையை பெற்றிருப்பதுடன், மறுவிற்பனை மதிப்பிலும் நம்பர்-1 மாடல் என்பது இதற்கு வலுசேர்க்கிறது. இதனால், இந்த காருக்கான விற்பனை மிக சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 4,796 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

விற்பனையில் கலக்கும் இந்தியாவின் டாப் -8 எம்பிவி கார்கள்!

01. மாருதி சுஸுகி எர்டிகா

இந்தியர்களின் பட்ஜெட் மற்றும் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் மாடலாக மாருதி எர்டிகா பெயர் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாவது தலைமுறை மாடல் இடவசதி, டிசைன், வசதிகள் என அனைத்திலும் மேம்படுத்தப்பட்டு வந்தததால், பெரிய வரவேற்பை பெற்றிருப்பதுடன், விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 8,391 எர்டிகா கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக வாடிக்கையாளர் மனதில் பதிந்துவிட்டது. மறுவிற்பனையிலும் சிறந்த மாடலாக உள்ளது.

Most Read Articles
English summary
The list of top-selling MPVs in India for August 2019 has been released. The list of the top-8 best-selling MPVs in India showcases the Maruti Suzuki Ertiga top the list with the highest sales for the month of August 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X