செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ

இந்திய மார்கெட்டில் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையான டாப்-10 எம்பிவி கார்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் மாருதி எர்டிகா மாடல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ

6,284 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த மாருதி எர்டிகா, கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 60 சதவீதம் கூடுதலாக விற்பனையாகியுள்ளது.

செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ

இந்த காருக்கு அடுத்த இடத்தை பார்த்தால், ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி உள்ளது. பிரெஞ்ச் கார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கார் இந்திய மார்கெட்டில் பிரபலமான மாடல் காரான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை முந்தி கொண்டு 4,710 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ

இதனால் மூன்றாவது இடத்திற்கு இறங்கிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, 4,225 யூனிட்கள் விற்பனையான போதிலும் கடந்த ஆண்டை விட 35 சதவீத விற்பனை வீழ்ச்சியை அடைந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எப்போதும் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருக்கும் இன்னோவா க்ரிஸ்ட்டா, அறிமுகமானதில் இருந்து எல்லா மாதங்களிலும் கணிசமான விற்பனையை தொடர்ந்து வருகிறது.

செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ

இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை மஹிந்திரா பொலிரோ 4,179 யூனிட்கள் விற்பனையாகி பெற்றுள்ளது. இருந்தப்போதிலும் இக்காரின் விற்பனையை சிறிது காலத்திற்கு மஹிந்திரா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. ஏனெனில் 2020-க்குள் இம்மாடலில் சில அப்டேட்களை செய்து வெளியிட அந்நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. பொலிரோவின் ஸ்பெஷல் எடிசன் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த விரிவான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ

மாருதி சுசுகி எக்ஸ்எல்6 இந்த வரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளது. மாருதியின் எர்டிகா மாடலில் உள்ளது போல இம்மாடலிலும் ஆறு இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எக்ஸ்எல்6 மாடல் கார் கடந்த செப்டம்பர் மாதத்தில் 3,840 யூனிட் விற்பனையை பதிவு செய்திருந்தது. இந்த காரை இந்தியா முழுவதும் மாருதி சுசுகி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்ஸ் விற்பனை செய்து வருகிறது.

செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ

இதற்கு அடுத்த 5 இடங்களில் முறையே மஹிந்திரா மராஸ்ஸோ, ஹோண்டா பிஆர்-வி, டட்சன் கோ+, டாடா ஹெக்ஸா மற்றும் ரெனால்ட் லாட்ஜி மாடல் கார்கள் உள்ளன.

Rank Models Units Sold
1 Maruti Ertiga 6,284
2 Renault Triber 4,710
3 Toyota Innova Crysta 4,225
4 Mahindra Bolero 4,179
5 Nexa XL6 3,840
6 Mahindra Marazzo 892
7 Honda BR-V 168
8 Datsun Go+ 160
9 Tata Hexa 148
10 Renault Lodgy 78
செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ

கடந்த ஆண்டின் மத்தியில் வெளியான மஹிந்திரா மராஸ்ஸோ பவர்புல் என்ஜின் மற்றும் சிறந்த தொழிற்நுட்பங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதத்தில் 892 யூனிட் விற்பனையை பதிவு செய்திருந்த இந்த கார் 2,892 யூனிட்கள் விற்பனையாகியிருந்த 2018 செப்டம்பரை விட 68 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை அடைந்துள்ளது.

செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ

ஏழாவது இடத்தில் உள்ள ஹோண்டா பிஆர்-வி 168 யூனிட்களும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள டட்சன் கோ+ மாடல் 160 யூனிட்களும் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளன. டாடா நிறுவனத்தின் முதன்மை மாடலாக உள்ள ஹெக்ஸா, 692 யூனிட்கள் விற்பனையான 2018 செப்டம்பர் மாதத்தை விட 79 சதவீதம் விற்பனையில் குறைந்து வெறும் 148 யூனிட் விற்பனையை பதிவு செய்துள்ளது.

செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ

ரெனால்ட் லாட்ஜி கடந்த மாதத்தில் 78 யூனிட்கள் விற்பனையாகி 10வது இடத்தில் இருந்தாலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை காட்டிலும் 189 சதவீதம் விற்பனையில் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த கார் அந்த சமயத்தில் 27 யூனிட்களே விற்பனையாகியிருந்தது.

செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ

வெளியாகியுள்ள இந்த அட்டவணையை வைத்து பார்க்கும்போது ரெனால்ட் ட்ரைபர் இந்திய மார்கெட்டில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்த செப்டம்பர் மாதத்திலும் முன்னேற்றத்தை நோக்கி சென்றுள்ளது. இதனால் தான் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்ட்டா சரிவை கண்டுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2019, 14:01 [IST]
English summary
Top-Selling MPVs In India For September 2019: Renault Triber Closes In On The Maruti Ertiga
மேலும்... #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+