டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் வரும் புதிய கார்... இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள் கசிந்தன...

டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் விற்பனைக்கு வரவுள்ள க்ளான்ஸா கார் குறித்த புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் வரும் புதிய கார்... இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள் கசிந்தன...

கார் உலகின் இரு பெரும் ஜாம்பவான்களான சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கென ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி கார் மாடல்கள், பிளாட்பார்ம்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை இரண்டு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ள உள்ளன.

டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் வரும் புதிய கார்... இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள் கசிந்தன...

இந்த சூழலில் க்ளான்ஸா (Toyota Glanza) என்ற பிரீமியம் ஹேட்ச்பேக் காரை, டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) கார்தான், டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் விற்பனை கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் வரும் புதிய கார்... இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள் கசிந்தன...

க்ளான்ஸா காரின் முதல் அதிகாரப்பூர்வ டீசரை டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. டொயோட்டா க்ளான்ஸ் கார் வரும் ஜூன் 6ம் தேதி இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. எனவே குஜராத்தில் உள்ள சுஸுகி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஏற்கனவே உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது. இதே தொழிற்சாலையில்தான் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்திற்காக பலேனோ கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் வரும் புதிய கார்... இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள் கசிந்தன...

சுஸுகி மோட்டார் இந்தியா மற்றும் மாருதி சுஸுகி இந்தியா ஆகிய இரண்டும் வெவ்வேறு நிறுவனங்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சுஸுகி மோட்டார் இந்தியா நிறுவனத்திடம் இருந்துதான் பலேனோ கார்களை மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் வாங்குகிறது. அதேபோல் டொயோட்டா இந்தியா நிறுவனமும் (டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்), சுஸுகி மோட்டார் இந்தியா நிறுவனத்திடம் இருந்துதான் பலேனோ கார்களை வாங்கவுள்ளது.

டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் வரும் புதிய கார்... இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள் கசிந்தன...

மாருதி நிறுவனம் இந்தியாவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 18 ஆயிரம் பலேனோ கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் டொயோட்டா இந்தியா நிறுவனம் 2019ம் ஆண்டில் இங்கு ஒரு மாதத்திற்கு 2 ஆயிரம் க்ளான்ஸா கார்களை மட்டுமே விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தபோதும் இதனை சிறிய இலக்கு என கூறி விட முடியாது. ஏனெனில் க்ளான்ஸா காரில் டொயோட்டா நிறுவனம் டீசல் இன்ஜினை வழங்கப்போவதில்லை.

டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் வரும் புதிய கார்... இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள் கசிந்தன...

வி மற்றும் ஜி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் டொயோட்டா க்ளான்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. டொயோட்டா டீலர்ஷிப்களுக்கு க்ளான்ஸா டெஸ்ட் டிரைவ் மற்றும் டிஸ்ப்ளே கார்கள் விரைவில் வர தொடங்கும். இவை பெரும்பாலும் வி எம்டி (V MT) அல்லது வி சிவிடி (V CVT) மாடல்களாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டாப் எண்ட் ஜி சிவிடி (G CVT) மற்றும் ஜி எம்டி (G MT) வேரியண்ட்கள், லான்ச் செய்யப்படுவதற்கு முன்பாக டெஸ்ட் டிரைவிற்கு கிடைக்காது. அதேபோல் காட்சிக்கும் வைக்கப்படாது.டொயோட்டா க்ளான்ஸா காரின் முதல் டீசர் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதனிடையே டொயோட்டா க்ளான்ஸா வி மாடலானது மாருதி பலேனோவின் ஆல்பா ட்ரிம் ஆகும். அதே நேரத்தில் க்ளான்ஸா ஜி மாடலானது பலோனோவின் ஜெட்டா ட்ரிம் ஆகும். டொயோட்டா க்ளான்ஸா காரில், ப்ளூ, சில்வர், க்ரே, ஒயிட் மற்றும் ரெட் என 5 கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இதில், ப்ளூ மற்றும் க்ரே ஆகிய நிறங்கள், விற்பனையில் தலா 25 சதவீத பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சில்வர் 20 சதவீதமும், ரெட் மற்றும் ஒயிட் ஆகிய வண்ணங்கள் தலா 15 சதவீதமும் விற்பனையில் பங்களிக்கும் என டொயோட்டா இந்தியா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் வரும் புதிய கார்... இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள் கசிந்தன...

இதனிடையே க்ளான்ஸா காரின் அதிக விலையை வாடிக்கையாளர்களிடம் எடுத்துரைப்பது என்பது டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகளுக்கு மிகவு சவாலான காரியமாக இருக்கப்போகிறது. ஆம், மாருதி பலேனோ உடன் ஒப்பிடுகையில், டொயோட்டா க்ளான்ஸா அதிகமான விலையில்தான் விற்பனை செய்யப்படவுள்ளது. சுஸுகி-டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணி, அதிக விலைக்கு பின்னணியில் உள்ள அம்சங்கள் ஆகியவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைக்க வசதியாக விற்பனை பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் வரும் புதிய கார்... இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள் கசிந்தன...

பலேனோ காரில் உள்ள அதே 1.2 பெட்ரோல் பிஎஸ்6 இன்ஜின்தான் டொயோட்டா க்ளான்ஸா காரிலும் பயன்படுத்தப்படவுள்ளது. இதில், எவ்வித மாற்றமும் இல்லை. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. க்ளான்ஸா காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படாது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 27, 2019, 19:40 [IST]
English summary
Toyota Aims To Sell 2,000 Glanza Premium Hatchback Every Month. Read in Tamil
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+