டொயோட்டா பிராண்டில் விரைவில் அறிமுகமாகும் மாருதி பலேனோ கார்!

இந்த மாதமே மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டொயோட்டா பிராண்டில் விரைவில் அறிமுகமாகும் மாருதி பலேனோ கார்!

ஜப்பானிய கார் நிறுவனங்களான டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய நிறுவனங்கள் வர்த்தகப் பணிகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்ய இருக்கிறது.

டொயோட்டா பிராண்டில் விரைவில் அறிமுகமாகும் மாருதி பலேனோ கார்!

மாருதியின் வெற்றிகரமான மாடல்களான பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா, சியாஸ் மற்றும் எர்டிகா ஆகிய 4 கார் மாடல்களும் டொயோட்டா நிறுவனத்தின் பெங்களூர் ஆலையில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

டொயோட்டா பிராண்டில் விரைவில் அறிமுகமாகும் மாருதி பலேனோ கார்!

மாருதி கார்களை டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்தும் விற்பனைக்கு வர இருக்கின்றன. இது எல்லாம் பழைய செய்திதான். ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் செய்தி, டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டிருக்கும் மாருதி பலேனோ கார் இந்த மாதமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.

டொயோட்டா பிராண்டில் விரைவில் அறிமுகமாகும் மாருதி பலேனோ கார்!

இந்த ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார் டொயோட்டா பலேனோ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த கார் இந்த மாதம் 26ந் தேதி டீலர்களுக்கு அனுப்பும் பணிகள் துவங்கப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மாதம் 30ந் தேதி முதல் டொயோட்டா பலேனோ காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பும் கொடுக்கப்பட இருக்கிறது.

டொயோட்டா பிராண்டில் விரைவில் அறிமுகமாகும் மாருதி பலேனோ கார்!

ஆனால், டொயோட்டா பிராண்டில் வர இருக்கும் மாருதி பலேனோ கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கும். ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

டொயோட்டா பிராண்டில் விரைவில் அறிமுகமாகும் மாருதி பலேனோ கார்!

மேலும், ரீபேட்ஜ் வர்த்தக கொள்கையின்படி, மாருதி பலேனோ காரைவிட டொயோட்டா பலேனோ கார் விலை அதிகம் நிர்ணயிக்கப்படும். தற்போது மாருதி பலேனோ காரின் மேனுவல் கியர்பாக்ஸ் ஸீட்டா வேரியண்ட் ரூ.6.92 லட்சம் விலையிலும், ஆல்ஃபா வேரியண்ட் ரூ.7.55 லட்சத்திலும் கிடைக்கிறது.

டொயோட்டா பிராண்டில் விரைவில் அறிமுகமாகும் மாருதி பலேனோ கார்!

சிவிடி கியர்ராக்ஸ் வேரியண்ட்டுகள் ரூ.8.24 லட்சத்திலும், 8.87 லட்சத்திலும் கிடைக்கின்றன. இந்த நிலையில், டொயோட்டா பலேனோ கார் இதனைவிட கூடுதல் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. டொயோட்டா பலேனோ காரில் சில வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

டொயோட்டா பிராண்டில் விரைவில் அறிமுகமாகும் மாருதி பலேனோ கார்!

மாருதி பலேனோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2019, 11:18 [IST]
English summary
Toyota Baleno Car To Be Launched This Month.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+