விரைவில் வருகிறது டொயோட்டா பலேனோ கார்... !!
மாருதி பலேனோ கார் விரைவில் டொயோட்டா பிராண்டிலும் ரீபேட்ஜ் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.

கடந்த ஆண்டு மாருதி கார் நிறுவனமும், டொயோட்டா நிறுவனம் சில வர்த்தக விஷயங்களில் கூட்டணி அமைத்து செயல்பட முடிவு செய்தன. அதன்படி, எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க முடிவு செய்தன.

மேலும், இரு நிறுவனங்களும் தங்களது பிரபல கார் மாடல்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்யவும் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி, மாருதி பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் டொயோட்டா பிராண்டிலும், டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் மாருதி பிராண்டிலும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு வர இருக்கின்றன.

இந்த நிலையில், முதலாவதாக மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. நடப்பு ஆண்டின் பிற்பாதியில் டொயோட்டா பிராண்டில் பலேனோ கார் வர இருப்பதை டொயோட்டா அதிகாரி ஆட்டோகார் இந்தியா தளத்திடம் தெரிவித்துள்ளார்.

மாருதி பலேனோ காரின் வடிவமைப்பில் சிற்சில மாற்றங்களை செய்து டொயோட்டா லோகோவுடன் வர இருக்கிறது. குறிப்பாக, முகப்பு டிசைனில் மாற்றங்கள் செய்ய்யப்பட்டு இருக்கும். வெவ்வேறு வாடிக்கையாளர் வட்டத்தை பிடிக்கும் முயற்சியாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், மாருதி பலேனோ கார் தொடர்ந்து மாருதி நெக்ஸா ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்படும். எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளில் மாற்றம் இருக்காது. தற்போது பலேனோ காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ிசன் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தக்க வைக்கப்படும்.

எனினும், பலேனோ காரின் ஹைப்ரிட் மாடலையும் சிறிது காலத்திற்கு பின்னர் களமிறக்கும் திட்டமும் டொயோட்டா வசம் இருப்பதாக தெரிகிறது. ஆனால், தற்போது இல்லை என்பது உறுதியானதாக நம்பப்படுகிறது.

பொதுவாக ரீபேட்ஜ் செய்யப்படும் மாடல்கள் தாய் நிறுவனத்தில் விற்பனையில் இருக்கும் மாடலைவிட அதிக விலை கொண்டதாக வருவது வாடிக்கை. அந்த வழியில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா பலேனோ கார் சற்றே கூடுதல் விலையில் வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








