தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா அதன் பிரபலமான மாடல்களுக்கு தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேன்ஞ் போனஸ், கார்ப்பிரேட் தள்ளுபடி மற்றும் பல சலுகைகளை இந்த விழாகாலத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த சலுகைகள் டொயோட்டாவின் டாப் மாடல்களான எட்டியோஸ், க்ளான்ஸா, யாரிஸ், இன்னோவா க்ரிஸ்ட்டா, கரொல்லா அல்டிஸ் மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இம்மாடல்களின் வேரியண்ட்களுக்கு ஏற்றாற்போல் சில கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

 

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

பிளாட்டினம் எட்டியோஸ்

டொயோட்டா நிறுவனத்தின் சிறந்த முறையில் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கும் எட்டியோஸிற்கு இந்நிறுவனம் ரூ.28,000வரை சலுகைகளை அறிவித்துள்ளது. இதில், ரூ.15,000 மதிப்புள்ள கார்ப்பிரேட் தள்ளுபடியும் அடங்கும்.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

இரு என்ஜின் தேர்வுகளில் வெளியாகும் எட்டியோஸின் நான்கு சிலிண்டர் அமைப்புகளை உடைய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 88 பிஎச்பி பவரையும் 132 என்எம் டார்க் திறனையும் மற்றொரு 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 67 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகின்றன. இரு என்ஜின்களும் ஐந்து நிலை வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் நிலையாக இணைக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

கிளான்ஸா

டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து புதிய ஹேட்ச்பேக் மாடலாக சமீபத்தில் சந்தையில் இறக்கப்பட்ட க்ளான்ஸாவிற்கு ரூ.35,000 வரையில் சலுகைகளை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ரூ.15,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ், கார்ப்பிரேட் தள்ளுபடிகள் மற்றும் பல சலுகைகள் அடங்குகின்றன.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

டொயோட்டா, மாருதி என இரு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட க்ளான்ஸா ஹேட்ச்பேக் பிஎஸ்6 தரத்துக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இரு விதமான தேர்வுகளில் விற்பனையாகி வருகிறது. இதில் சக்தி வாய்ந்த என்ஜின் 89 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் ஐந்து நிலை மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

மற்றொரு என்ஜின் 82 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வெளிப்படுத்துகிறது. மேலும் க்ளான்ஸ் மாடல் டொயோட்டா நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 என்ஜினை கொண்டு வெளியான முதல் மாடலாகும்.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

யாரிஸ்

யாரிஸ் மாடலுக்கு ரூ.1.52 லட்சம் வரையிலான சலுகைகளை டொயொட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு ரூ 1 லட்சம் பணம் தள்ளுபடியும் அடங்கும். இதனுடன் எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் கார்ப்பிரேட் தள்ளுபடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

இதன் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட டூயுல் விவிடி-ஐ 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 106 பிஎச்பி பவர் மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜின் ஆறு நிலை வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஏழு நிலை வேக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் யாரிஸ் மாடலின் ஜி-தேர்வு வேரியண்ட்டையும் அறிமுகம் செய்திருந்தது.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

இன்னோவா க்ரிஸ்ட்டா

டொயோட்டாவின் சிறந்த எம்பிவி மாடலான இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு ரூ.75,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.10,000க்கு பணம் தள்ளுபடி மற்றும் ரூ.30,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ் ஆகியவை இதில் அடங்கும். மூன்று என்ஜின் தேர்வுகளில் இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி விற்பனையாகிறது. இதில் ஒவ்வொரு என்ஜினும் நான்கு சிலிண்டர்கள் அமைப்புகளை கொண்டது.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

க்ரிஸ்ட்டாவின் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 164 பிஎச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் திறனையும், 2.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 148 பிஎச்பி பவர் மற்றும் 343 என்எம் டார்க் திறனையும், ஹையர்-ஸ்பெக் 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 172 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஐந்து நிலை மேனுவல் கியர்பாக்ஸ், ஆறு நிலை ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் யூனிட்கள் இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்டின் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

அதேநேரம், டீசல் வேரியண்ட் என்ஜினிற்கு ஐந்து நிலை மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்றொரு சக்தி வாய்ந்த டீசல் என்ஜினிற்கு ஆறு நிலை வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் இணைக்கப்பட்டுள்ளது. டோயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை தொடர்ந்து வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரை இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. அதுகுறித்த விரிவான தககவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

கரொல்லா அல்டிஸ்

கரொல்லா அல்டிஸ் மாடலுக்கு டொயோட்டா நிறுவனம் ரூ.2.10 லட்சம் வரை சலுகைகளை வழங்கியுள்ளது. இதில் ரூ.1.25க்கு பணம் தள்ளுபடியும் ரூ.25,000க்கு கார்ப்பிரேட் தள்ளுபடி, எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் பல சலுகைகளை அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வேரியண்ட் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும் கரொல்லா அல்டிஸின் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 138 பிஎச்பி பவர் மற்றும் 173 என்எம் டார்க் திறனையும், நான்கு சிலிண்டர்களை கொண்ட 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 87 பிஎச்பி பவர் மற்றும் 205 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

இரு என்ஜின்களுடன் ஆறு நிலை வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் வேரியண்டிற்கு மட்டும் மற்றொரு தேர்வாக ஏழு நிலை சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

ஃபார்ச்சூனர்

ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு டொயோட்டா நிறுவனம், மூன்று வருட பாதுகாப்பு, மூன்று வருட மெயிண்டனன்ஸ் ப்ளான் மற்றும் ஐந்து வருட உத்தரவாதம் போன்ற சிறப்பான சலுகைகளுடன், ரூ.40,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸும் வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் என்ஜின்களில் வெளியாகி வரும் ஃபார்ச்சூனர் காரின் நான்கு சிலிண்டர்களை கொண்ட 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 164 பிஎச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் திறனையும், அதே நான்கு சிலிண்டர்களை கொண்ட 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 174 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக் இக்காரின் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு, ஐந்து நிலை வேக மேனுவல் கியர்பாக்ஸ், ஆறு நிலை வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. டீசல் வேரியண்ட்டிற்கு, ஆறு நிலை வேக மேனுவல் கியர்பாக்ஸ், நான்கு சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் கூடிய ஆறு நிலை வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் யூனிட் கொடுக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

இக்காரின் ஸ்பெஷல் எடிசனாக டீசல் என்ஜின் அமைப்பை மட்டுமே கொண்ட ஃபார்ச்சூனர் டிஆர்டி மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளது.

கவர்ச்சிகரமான டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...

டொயோட்டா நிறுவனம் வருகிற தீபாவளி பண்டிக்கையை பயன்படுத்தி இந்த சலுகைகள் மூலம் அதிகளவில் கார்களை விற்க திட்டமிட்டுள்ளது. சலுகைகள் அனைத்தும் ஆரம்ப கட்ட கார்களுக்கு தான் அதிகளவில் கொடுக்கப்பட்டுள்ளதால், இது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அதேசமயம் இந்த சலுகைகளால் சில மாடல்களின் விலையும் சற்று உயரும் என்பது உறுதி.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Diwali Discount Offers: Festive Benefits Available On Select Models
Story first published: Monday, October 14, 2019, 15:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X