க்ளான்சா காருக்கான புதிய டீசரை வெளியிட்டது டொயோட்டா... ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம்...

க்ளான்சா காருக்கான புதிய டீசரை டொயோட்டா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

க்ளான்சா காருக்கான புதிய டீசரை வெளியிட்டது டொயோட்டா... ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம்...

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரண்டு முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக மாருதி சுஸுகி பலேனோ கார், டொயோட்டா பிராண்டில் க்ளான்சா என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

க்ளான்சா காருக்கான புதிய டீசரை வெளியிட்டது டொயோட்டா... ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம்...

டொயோட்டா க்ளான்சா ஹேட்ச்பேக் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. எனவே இந்தியாவில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப்களில் அதிகாரப்பூர்வமற்ற வகையில், க்ளான்சா காருக்கு முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

க்ளான்சா காருக்கான புதிய டீசரை வெளியிட்டது டொயோட்டா... ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம்...

இந்த சூழலில் க்ளான்சா காருக்கான புதிய டீசர் ஒன்றை டொயோட்டா தற்போது வெளியிட்டுள்ளது. இதில், க்ளான்சா காரின் முன் மற்றும் பின் பகுதிகள் காட்டப்பட்டுள்ளன. அந்த டீசர் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

டொயோட்டா க்ளான்சா கார் தோற்றத்தில் அப்படியே மாருதி சுஸுகி பலேனோவை உரித்து வைத்தது போல் உள்ளது. முன் பக்க க்ரில், முன் மற்றும் பின் பக்க பேட்ஜ்கள் மற்றும் ஸ்டியரிங் வீலில் உள்ள பேட்ஜ் ஆகியவை மட்டுமே மாற்றப்பட்டுள்ளன.

க்ளான்சா காருக்கான புதிய டீசரை வெளியிட்டது டொயோட்டா... ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம்...

டொயோட்டா க்ளான்சா காரின் இன்டீரியம் கூட அப்படியே மாருதி சுஸுகி பலேனோவை போலவேதான் உள்ளது. அத்துடன் பலேனோ காரில் வழங்கப்படும் வசதிகள்தான் டொயோட்டா க்ளான்சாவிலும் வழங்கப்படுகின்றன. இதிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

க்ளான்சா காருக்கான புதிய டீசரை வெளியிட்டது டொயோட்டா... ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம்...

ஆனால் டொயோட்டா நிறுவனம் முன் பக்க க்ரில் அமைப்பை மட்டும் சற்று மாற்றியுள்ளது. தனது சொந்த டிசைன் மொழிக்கு மேட்ச் ஆகும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனம் க்ளான்சா காரில் மொத்தம் 2 வேரியண்ட்களை வழங்கவுள்ளது.

க்ளான்சா காருக்கான புதிய டீசரை வெளியிட்டது டொயோட்டா... ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம்...

அவை மாருதி சுஸுகி பலேனோ காரின் டாப் எண்ட் ட்ரிம்களான ஜெட்டா மற்றும் ஆல்பா ஆகியவற்றுக்கு இணையானவை. டொயோட்டா க்ளான்சா காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையானது.

க்ளான்சா காருக்கான புதிய டீசரை வெளியிட்டது டொயோட்டா... ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவர் மற்றும் 124 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. ஏற்கனவே குறிப்பிட்டபடி மாருதி சுஸுகி பலேனோ காரில் இருக்கும் வசதிகள்தான் கிட்டத்தட்ட அப்படியே டொயோட்டா க்ளான்சா காரிலும் வழங்கப்படவுள்ளன.

க்ளான்சா காருக்கான புதிய டீசரை வெளியிட்டது டொயோட்டா... ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம்...

இதில், ஆட்டோமெட்டிக் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடனான ஏபிஎஸ், டிரைவர் மற்றும் பாசஞ்சர் ஏர் பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர்கள் மற்றும் ஹை-ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் ஆகியவை உள்ளடங்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 17, 2019, 22:30 [IST]
English summary
Toyota Drop Teaser Video Ahead Of Glanza Launch — Dealers Taking Unofficial Bookings. Read in Tamil
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+