விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

பெரும்பாலன மக்களின் விருப்பமான காராக இருக்கும் பலேனோ காரின் மறுபிறவியாக இருக்கும் டொயோட்டா க்ளான்ஸா கார் மிக விரைவில் ஷோரூம்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த கார் சிறப்பு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து வாகன தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக கடந்த வருடம் அறிவித்திருந்தது. இதனடிப்படையில், இந்த நிறுவனங்களும் இணைந்து க்ளான்ஸா என்ற முதல் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றன.

முன்னதாக, க்ளான்ஸா மாடலை சுஸுகி நிறுவனம், பலேனோ என்ற பெயரில் விற்பனைச் செய்து வந்தது. தற்போது, இரு நிறுவனங்களின் இணைப்பினைத் தொடர்ந்து, க்ளான்ஸா என்ற பெயரில் பலேனோ விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. இந்த கார் குறித்த டீசரை இந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

மேலும், விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் இந்த புதிய க்ளான்ஸா கார் டொயோட்டாவின் பேட்ஜில், அதன் ஷோரூம்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. க்ளான்ஸா என்ற பெயரில் டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே ஹேட்ச்பேக் ரகத்திலான ஸ்போர்ட்ஸ் காரை ஜப்பானில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

சுஸுகி நிறுவனத்தின்கீழ், இந்த கார் தயாரிக்கப்பட்ட காலத்தில் அதன் குஜராத் பிளாண்ட்டில் வைத்து உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, இந்த நிறுவனங்களின் இணைப்பைத்தொடர்ந்து, இந்த புதிய ஹேட்ச்பேக் ரக க்ளான்ஸா கார், பெங்களூருவில் உள்ள டொயோட்டாவின் பிடாடி பிளாண்டில் வைத்து உற்பத்தி செய்யப்பட உள்ளன.

விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

இந்நிலையில், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட க்ளான்ஸா கார்கள் டீலர்களின் ஷோரூம்களில் காட்சிப்படுத்தப்படுவதற்காக, சுஸுகியின் குஜராத் பிளாண்டில் கொண்டுவரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

அந்த வகையில், கொண்டுவரப்படும் கார்கள் விற்பனைக்கு அல்ல என்றும், அவை ஷோரூம்களில் காட்சிப்படுத்தப்பட மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த கார்கள் அனைத்தும் டொயோட்டா நிறுவனத்தில் அதிகம் விற்பனையாகும் சிவப்பு நிற கார்களாக உள்ளன.

விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

டொயோவின் பேட்ஜில் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய க்ளான்ஸா கார், வருகின்ற ஜீன் மாதம் 6ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்தே, தற்போது டீலர் ஷோரூம்களில் காட்சிப்படுத்துவதற்காக க்ளான்ஸா கார்கள் குறிப்பிட்ட அளவில் வரவழைக்கப்பட்டுள்ளன.

விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

மேலும், இந்த பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காருக்கு 3 வருடங்கள்/1 லட்சம் கிமீ வாரண்டியினை டொயோட்டா நிறுவனம் வழங்க இருக்கின்றது. இது மாருதி பலனோவைக் காட்டிலும் அதிகமாகும். மாருதி பலனோ 2 வருடங்கள்/40 ஆயிரம் கி.மீட்டர்கள் வாரண்டி வழங்கி வந்தது.

இந்த கூட்டப்பட்ட வாரண்டியுடன், மேலும் கூடுதலான வாரண்டியையும் டொயோட்டா நிறுவனம் வழங்க இருக்கிறது. அவ்வாறு, 5 வருடங்கள் முதல் ஏழு வருடங்கள் வரை ஆப்ஷனலாக வாரண்டி வழங்கப்பட உள்ளன.

விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

டொயோட்டாவின் இந்த புதிய க்ளான்ஸாவானது, ஹை வேரியண்ட்களான ஜி மற்றும் வி வெர்ஷன்களில் மட்டுமே கிடைக்க உள்ளன. இதில் க்ளான்ஸாவின் வி மாடலானது மாருதி பலேனோவின் ஆல்பா ட்ரிமிலும், ஜி மாடலானது பலோனோவின் ஜெட்டா ட்ரிம் பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

இவை, ப்ளூ, சில்வர், க்ரே, ஒயிட் மற்றும் ரெட் ஆகிய ஐந்து கலர்கள் ஆப்ஷனில் கிடைக்க இருக்கின்றன. அதேசமயம், டொயோட்டா க்ளான்ஸா பிஎஸ்6 தரத்தில் பெட்ரோல் எஞ்ஜினில் மட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. அந்த வகையில், இந்த காரில் 1.2 லிட்டர் கே12பி பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்ஜின் 84பிஎஸ் பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

விரைவிலேயே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாக இருக்கும் உங்கள் சூப்பர் ஸ்டார் கார்: சிறப்பு தகவல்!

டொயோட்டா நிறுவனத்தின் மூலம் க்ளான்ஸா விற்பனைக்கு வரவிருப்பதால், பலேனோவைக் காட்டிலும் கணிசமான விலையுயர்வைப் பெறலாம் என கூறப்படுகிறது. மேலும், கிளான்ஸாவைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் எர்டிகா, சியாஸ் மற்றும் பிரஸ்ஸா உள்ளிட்ட மாடல்களையும் தயாரிக்க இருப்பது குறிப்படித்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 28, 2019, 17:25 [IST]
English summary
Toyota Glanza Dispatch Begins From SMC Gujarat. Read In Tamil.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+