வருகிறது விலை குறைவான டொயோட்டா க்ளான்ஸா வேரியண்ட்!

விற்பனை மெச்சத்தக்க வகையில் அமைந்துள்ள நிலையில், டொயோட்டா க்ளான்ஸா காரின் விலை குறைவான வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

வருகிறது விலை குறைவான டொயோட்டா க்ளான்ஸா வேரியண்ட்!

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் வெளிவந்த முதல் கார் மாடல் டொயாோட்டா க்ளான்ஸா. மாருதி பலேனோ காரை ரீபேட்ஜ் செய்து க்ளான்ஸா என்ற பெயரில் டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிந்ததே.

வருகிறது விலை குறைவான டொயோட்டா க்ளான்ஸா வேரியண்ட்!

கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா க்ளான்ஸா காரின் விற்பனை நன்றாகவே இருந்து வருகிறது. டொயோட்டா க்ளான்ஸா கார் மாதத்திற்கு 2,500 என்ற அளவில் விற்பனையாகிறது.

வருகிறது விலை குறைவான டொயோட்டா க்ளான்ஸா வேரியண்ட்!

இதனால், உற்சாகமடைந்துள்ள டொயோட்டா கார் நிறுவனம் க்ளான்ஸா காரில் குறைவான விலை வேரியண்ட்டை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதாவது, மாருதி பலேனோ கார் 4 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

வருகிறது விலை குறைவான டொயோட்டா க்ளான்ஸா வேரியண்ட்!

ஆனால், டொயோட்டா க்ளான்ஸா கார் விலை உயர்ந்த 2 வேரியண்ட்டுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, விலை குறைவான புதிய வேரியணட்டை அறிமுகப்படுத்த உள்ளது டொயோட்டா. அடுத்த மாதம் புதிய வேரியண்ட் எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிறது விலை குறைவான டொயோட்டா க்ளான்ஸா வேரியண்ட்!

தற்போது டொயோட்டா க்ளான்ஸா கார் ஜி மேனுவல், வி மேனுவல், ஜி சிவிடி மற்றும் வி சிவிடி ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், விலை குறைவான ஜி மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டானது ரூ.7.28 லட்சத்தில் கிடைக்கிறது. ஆனால், இதே மாருதி பலேனோ காரின் வேரியண்ட் ரூ.7.86 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வருகிறது விலை குறைவான டொயோட்டா க்ளான்ஸா வேரியண்ட்!

அதாவது, அறிமுகச் சலுகை விலையாக டொயோட்டா க்ளான்ஸா கார் குறைவான விலையில் களமிறக்கப்பட்டது. இந்த நிலையில், க்ளான்ஸா காரின் விலை அதிகரிக்கப்பட இருக்கிறது விலை குறைவான வேரியண்ட் இருந்தால்தான் க்ளான்ஸா காரின் விற்பனையை ஓரளவு தக்க வைக்க முடியும் என்பதால் புதிய வேரியண்ட் வர இருக்கிறது.

வருகிறது விலை குறைவான டொயோட்டா க்ளான்ஸா வேரியண்ட்!

டொயோட்டா க்ளான்ஸா கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், மாருதி பலேனோ போலவே, இரண்டு 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 1.2 லிட்டர் டியூவல் ஜெட் டியூவல் விவிடி எஞ்சின் தேர்வானது ஜி மேனுவல் வேரியண்ட்டில் மட்டும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. இரண்டு பெட்ரோல் எஞ்சின்களுமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

வருகிறது விலை குறைவான டொயோட்டா க்ளான்ஸா வேரியண்ட்!

டொயோட்டா க்ளான்ஸா மைல்டு ஹைப்ரிட் எஞ்சின் 90 எச்பி பவரையும், சாதாரண எஞ்சின் 83 எச்பி பவரையும் வெளிப்படுத்தும். க்ளான்ஸா ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 23.87 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த காகருக்கு 5 ஆண்டுகள் அல்லது 2.20 லட்சம் கிமீ தூரத்திற்கான கூடுதல் கால வாரண்டியுடன் கிடைக்கிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
According to reports, Toyota Glanza will get new cheaper variant in India soon
Story first published: Wednesday, September 25, 2019, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X