டொயோட்டா-சுஸுகி ஒப்பந்தத்தில் விற்பனைக்கு வரும் முதல் கார் குறித்த டீசர் வீடியோ வெளியீடு!

டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்களின் இணைப்பிற்கு பின்னர் முதல் மாடலாக வெளிவர இருக்கும் க்ளான்ஸா கார் குறித்த வீடியோ டீசரை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

டொயோட்டா-சுஸுகி ஒப்பந்தத்தில் விற்பனைக்கு வரும் முதல் கார் குறித்த டீசர் வீடியோ வெளியீடு!

டொயெட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரு நிறுவனங்களும் இணைப்பிற்கு பின் களமிறங்கும் முதல் மாடலாக க்ளான்ஸா இருக்கின்றது. இதற்கு முன்னதாக இந்த கார் சுஸுகி நிறுவனத்தின் மூலம் பலனோ என்ற பெயரில் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில், டொயோட்டா பேட்ஜில் வரவிருக்கும் க்ளான்ஸா (பலினோ) கார் குறித்த டீசர் வீடியோவை டோயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், காரின் பின்பக்க கவர்ச்சியைக் காட்டும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.

டொயோட்டா-சுஸுகி ஒப்பந்தத்தில் விற்பனைக்கு வரும் முதல் கார் குறித்த டீசர் வீடியோ வெளியீடு!

கிளான்ஸாவைத் தொடர்ந்து, எர்டிகா, சியாஸ் மற்றும் பிரஸ்ஸா உள்ளிட்ட மாடல்களையும் டொயோட்டா நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. முன்னதாக, இந்த மாடல்கள் அனைத்தும் குஜராத்தில் உள்ள மாருதி சுஸுகியின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, இரு நிறுவனங்களின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பெங்களுரூவில் உள்ள டொயோட்டாவின் கிர்லோஷ்கர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன.

டொயோட்டா-சுஸுகி ஒப்பந்தத்தில் விற்பனைக்கு வரும் முதல் கார் குறித்த டீசர் வீடியோ வெளியீடு!

டொயோட்டாவின் இந்த புத்தம் புதிய கிளான்ஸா ஹேட்ச்பேக் கார் வருகின்ற மாதங்களில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாகவே க்ளான்ஸா மாடல் கார்கள் டெஸ்ட் டிரைவிற்காக டீலர் ஷோரூம்களில் காட்சிப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

டொயோட்டா-சுஸுகி ஒப்பந்தத்தில் விற்பனைக்கு வரும் முதல் கார் குறித்த டீசர் வீடியோ வெளியீடு!

இந்த பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காருக்கு 3 வருடங்கள்/1 லட்சம் கிமீ வாரண்டி வழங்கப்பட உள்ளது. இது மாருதி பலனோவைக் காட்டிலும் அதிகமாகும். மாருதி பலனோ 2 வருடங்கள்/40 ஆயிரம் கிமீட்டர்கள் வாரண்டியில் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த கூட்டப்பட்ட வாரண்டியுடன், மேலும் கூடுதலான வாரண்டியையும் டொயோட்டா நிறுவனம் வழங்க இருக்கிறது. அவ்வாறு, 5 வருடங்கள் வாரண்டி ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது. இத்துடன் மேலும் சில வாரண்டி சலுகைகளும் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளன.

டொயோட்டா-சுஸுகி ஒப்பந்தத்தில் விற்பனைக்கு வரும் முதல் கார் குறித்த டீசர் வீடியோ வெளியீடு!

இந்த புத்தம் புதிய டொயெட்டா க்ளான்ஸாவின் ஸ்டைல் மற்றும் வடிவம் சுஸுகி பலனோவைப் போலவே உள்ளது. இருப்பினம் சிறு சிறு மாற்றங்களாக முன்பக்க க்ரில் அமைப்பு, டெயில் லைட், க்ளஸ்ட்டர் ஆகியவை மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

டொயோட்டா-சுஸுகி ஒப்பந்தத்தில் விற்பனைக்கு வரும் முதல் கார் குறித்த டீசர் வீடியோ வெளியீடு!

மாருதி சுஸுகி பலனோ பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், புதிதாக வரவிருக்கும் டொயோட்டா க்ளான்ஸா பிஎஸ்6 தரத்தில் பெட்ரோல் எஞ்ஜினில் மட்டும் வர இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த காரில் 1.2 லிட்டர் கே12பி பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்ஜின் 84பிஎஸ் பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

டொயோட்டா-சுஸுகி ஒப்பந்தத்தில் விற்பனைக்கு வரும் முதல் கார் குறித்த டீசர் வீடியோ வெளியீடு!

அதேபோன்று, சிவிடி எஞ்ஜினும் ஆப்ஷனாக வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டாவின் இந்த புதிய க்ளான்ஸாவானது, ஹை வேரியண்ட்களான ஜி மற்றும் வி வெர்ஷன்களில் மட்டுமே கிடைக்க உள்ளன. இவை பலினோவின் ஜிட்டா மற்றும் ஆல்ஃபா பிளாட்பாரங்களில் உருவானவைக்கு சமம்.

டொயோட்டா-சுஸுகி ஒப்பந்தத்தில் விற்பனைக்கு வரும் முதல் கார் குறித்த டீசர் வீடியோ வெளியீடு!

டொயோட்டா நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வர இருப்பதால் தற்போது விற்பனையில் இருக்கும் பலேனோ காரைக் காட்டிலும் க்ளான்ஸா பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சற்று கணிசமான விலையுயர்வைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிரே, சிவப்பு, நீளம், சில்வர் மற்றும் வெள்ளை ஆகிய ஐந்து விதமான வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2019, 16:29 [IST]
English summary
Toyota Releases New Teaser Of The Upcoming Glanza Hatchback — Launch Expected In June. Read In Tamil.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+