தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

டொயோட்டா-சுஸுகி ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள க்ளான்ஸா ஹேட்ச்பேக் ரக கார் மிக விரைவில் விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது. இந்நிலையில், இந்த கார் குறித்த ஸ்பை படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து, அதன் ரசிகர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டி வருகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

டொயோட்டா-சுஸுகி ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் க்ளான்ஸா என்ற ஹேட்ச்பேக் ரக கார் மிக விரைவில் அறிமுகமாக இருக்கின்றது. இரு நிறுவனங்களின் இணைப்பைத் தொடர்ந்து, வெளிவரும் முதல் காராக இது இருக்கின்றது. டொயோட்டோ பேட்ஜில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த கார், முன்னதாக சுஸுகியின் பேட்ஜில் பலேனோ பெயரில் விற்பனையாகி வந்தது.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

இதனால், புதிதாக தயாராகியுள்ள க்ளான்ஸா கார் மீது, இந்தியர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்கேற்ப, இந்த எதிர்பார்ப்பை ஆவலாக தூண்டும் வகையில், அண்மைக் காலங்களாக இந்த கார் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

முன்னதாக, இந்த கார் குறித்த தொலைக்காட்சி விளம்பர வீடியோ ஒன்று வெளியாகியது. அதில், காரின் பின் பக்கம் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, க்ளான்ஸா கார், டெஸ்ட் டிரைவ் மற்றும் ஷோரூமில் காட்சிப்படுத்துவதற்காக அதன் டீலர்களை வந்தடைந்திருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகியது. அதில், க்ளான்ஸா கார், கராஜில் நிறுத்தி வைத்திப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போதுதான் இந்த கார் முதல் முறையாக, முழுமையாக காட்சி கொடுத்தது.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

இந்த நிலையில், ஷோரூமிற்கு வந்த க்ளான்ஸா காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பினை அதன் டீலர்கள் அண்மையில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். அப்போது, புதிய க்ளான்ஸா காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வீடியோக் காட்சிகள் வெளியாகின. இந்த வீடியோ மூலம், க்ளான்ஸா காரில் சிவிடி ஆப்ஷன் இருப்பது உறுதியாகியது.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

இந்நிலையில், மீண்டும் ஒரு முறை இந்த கார் கேமிராவின் கண்களில் சிக்கியுள்ளது. ஆனால், இம்முறை வித்தியாசமாக, அந்த காரை விளம்பரத்திற்காக ஷூட்டிங் செய்யும்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த புகைப்படமும், வீடியோவும்தான் தற்போதைய வாகன உலகத்தில் டாப் டிரெண்டிங்கில் இருக்கின்றது.

தற்போது டொயோட்டா பேட்ஜில் உருவாகி வரும் பலேனோ (க்ளான்ஸா) கார் பெரிய அளவிலான மாற்றங்களைப் பெறாமல், கணிசமான மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ளது. அந்தவகையில், பழைய பலேனோவுடன் ஒப்பிட்டு பார்த்தால் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

காரின் ரேடியேட்டர் க்ரில் அமைப்பு உள்ளிட்டவை, சிறு சிறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. க்ரில்லானது, இரண்டு குரோம் பூச்சுக் கொண்ட விங் அமைப்பைப் பெற்றுள்ளது. அதேபோன்று, காரின் உட்புறத்திலும் பெயரளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

டொயோட்டா நிறுவனம், க்ளான்ஸா என்ற பெயரில் ஏற்கனவே ஹேட்ச்பேக் ரகத்திலான ஸ்போர்ட்ஸ் காரை ஜப்பானில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கார் சுஸுகி நிறுவனத்தின்கீழ் தயாரிக்கப்பட்டபோது, அதன் குஜராத் பிளாணட்டில் வைத்து உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்த கார் பெங்களூருவில் உள்ள டொயோட்டாவின் பிடாடி பிளாணட்டில் வைத்து உற்பத்தி செய்யப்பட உள்ளது.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

டொயோவின் பேட்ஜில் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய க்ளான்ஸா கார், வருகின்ற ஜீன் மாதம் 6ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இந்த காருக்கான வாரண்டி காலங்கள் பழைய பலேனோவைக் காட்டிலும் அதிகமாக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

அந்தவகையில், இந்த பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காருக்கு 3 வருடங்கள்/1 லட்சம் கிமீ வாரண்டியினை டொயோட்டா நிறுவனம் வழங்க இருக்கின்றது. அதேபோன்று, 5 வருடங்கள் முதல் ஏழு வருடங்கள் வரை ஆப்ஷனலாகவும் வாரண்டி வழங்கப்பட உள்ளன. டொயோட்டாவின் இந்த புதிய க்ளான்ஸா, ஹை வேரியண்ட்களான ஜி மற்றும் வி வேரியண்ட்களில் தயாராகியுள்ளன.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

இதில் க்ளான்ஸாவின் வி மாடலானது மாருதி பலேனோவின் ஆல்பா ட்ரிமிலும், ஜி மாடலானது பலோனோவின் ஜெட்டா ட்ரிம் பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், க்ளான்ஸா ப்ளூ, சில்வர், க்ரே, ஒயிட் மற்றும் ரெட் ஆகிய ஐந்து வண்ண தேர்வில் கிடைக்க இருக்கின்றது.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

டொயோட்டா க்ளான்ஸா காரில் பிஎஸ்-6 தரத்திலான, 1.2 லிட்டர் கே12எம் விவிடி என்/ஏ 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82.94 பவரையும் (61 kW), 113 என்எம் டார்க்கையும் வெளப்படுத்தும் திறன் கொண்டது. இது லிட்டருக்கு 21.01 கிமீ மைலேஜை தரும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக தரிசனத்தை வாரி வழங்கும் டொயோட்டா-சுஸுகி க்ளான்ஸா: இப்போது எங்கு தெரியுமா?

இத்துடன், 5 ஸ்பீடு எம்டி அல்லது 19.56 கிமீ/லி சிவிடி ஆகிய ஆப்ஷன்களிலும் இந்த கார் கிடைக்க இருக்கின்றது. அதேசமயம், இந்த க்ளான்ஸா கார் டொயோட்டா நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வரவிருப்பதால், பலேனோவைக் காட்டிலும் கணிசமான விலையுயர்வைப் பெறலாம் என கூறப்படுகிறது.

Source: RushLane

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2019, 20:04 [IST]
English summary
Toyota Glanza Spied During TVC Shoot –Video. Read In Tamil.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+