டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயொட்டா, இந்தியா ஆட்டோபொமைல் சந்தையில் 1999ல் காலடி எடுத்து வைத்தது. 20 வருட இந்திய விற்பனை பயணத்தை முடித்துள்ள இந்நிறுவனம் இதனை கொண்டாடும் விதத்தில் 3 மாதத்திற்கான சர்வீஸ் கார்னிவல் என்கிற சலுகைகள் அடங்கிய பரிசை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...

இந்த வருட டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களால் சர்வீஸ் கார்னிவல் என்ற பெயர்ல் அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் விற்பனை விகிதத்தையும் அதிகரிக்க முடியும் என டொயொட்டா நிறுவனம் நம்புகிறது.

டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...

இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது டொயொட்டா மாடல்களில் உள்ள பழுதுகளை 20 சதவீதம் வரை தள்ளுபடியில் சரிசெய்து கொள்ள முடியும்.

டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...

இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் உரிமையாளர்கள் டொயொட்டா வி-கேர் சர்வீஸ் மையங்களில் சர்வீஸ் செய்வதன் மூலம் 20 சதவீத தள்ளுபடியை பெறலாம். கட்டாய 14 பாயிண்ட் பாதுகாப்பிற்கான சரிபார்ப்பும் இதில் அடங்கும். இந்த மெயிண்டனன்ஸ் சர்வீஸில் டயர் மற்றும் பேட்டரி மாற்றுதலுக்கான பணியாளர் கட்டணமும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மீதும் தங்களது தயாரிப்புகள் மீதும் வைத்திருக்கும் தரத்திற்கான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என டொயொட்டா நிறுவனம் கருதுகிறது. மிக விரைவான, அதே நேரத்தில் விலை குறைவான சர்வீஸ்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் இந்நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...

அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால் வாடிக்கையாளர்கள் வாகனத்தில் எந்த குறை என்றாலும் முதலில் தங்களது சர்வீஸ் மையங்களை தான் நாடுவர் எனவும் டொயோட்டா நிறுவனம் நம்புகிறது.

டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...

இந்த சலுகைகள் குறித்து டொயொட்டா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் என்.ராஜா கூறுகையில், எங்களுடன் இந்த 20 வருடங்களாக பயணித்து வந்த வாடிக்கையாளர்களுக்கு முதலில் நன்றி கூறி கொள்கிறோம். வாடிக்கையாளர்களின் கருத்திற்கு மதிப்பளித்து எங்களது தயாரிப்புகளையும் விற்பனை மற்றும் சர்வீஸ்களையும் செய்து வந்தோம் என நம்புகிறோம்.

டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...

இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த விழாகாலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள கார்னிவல் சலுகை. இந்த திட்டத்தில் எங்களது அனைத்து வாடிக்கையாளர்களும் பங்கேற்க வேண்டும் என விரும்பி கேட்டுகொள்கிறோம் என கூறி முடித்தார்.

டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...

இதனுடன் கூடுதல் தகவல் என்னவென்றால், டொயொட்டா நிறுவனம் விரைவில் இந்திய மார்கெட்டில் வெல்ஃபயர் ப்ரீமியம் எம்பிவி மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது. டொயொட்டாவின் முதன்மை மாடலாக வெளியாகவுள்ள இக்கார் இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த வெல்ஃபயர் அறிமுகமாகும் போது இதற்கு போட்டியாக இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட மெர்சிடெஸ் வி-கிளாஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள கியா கார்னிவல் போன்ற மாடல் இருக்கும். வெல்ஃபயர் இந்திய அறிமுகம் குறித்த விரிவான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நிலவி பொருளாதார மந்த நிலையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களை ஈர்க்க வித்தியாசமான முறைகளை கையாண்டு வருகின்றன. டொயொட்டா நிறுவனத்தின் இந்த புது அறிமுகமும் அதிரடி சலுகைகளும் இந்த வித்தியாசமான முறைகளில் ஒரு பகுதியே.

More from DriveSpark

Article Published On: Friday, October 18, 2019, 19:04 [IST]
English summary
Toyota Introduces Service Campaign With Added Benefits: Valid Till 31st December
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+