டொயோட்டா ரஷ் இந்திய வருகை விபரம்... க்ரெட்டாவுக்கு அடுத்து ஒரு போட்டி!!

டொயோட்டா ரஷ் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா ரஷ் இந்திய வருகை விபரம்... க்ரெட்டாவுக்கு அடுத்து ஒரு போட்டி!!

இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் மூலமாக இந்தியர்களின் மனதை வென்ற டொயோட்டா கார் நிறுவனம் புத்தம் புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

டொயோட்டா ரஷ் இந்திய வருகை விபரம்... க்ரெட்டாவுக்கு அடுத்து ஒரு போட்டி!!

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ரஷ் அல்லது சிஎச்ஆர் ஆகிய இரண்டு மாடல்களில் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நீண்ட காலமாக தகவல்கள் உலா வருகின்றன. இந்த சூழலில், ரஷ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய டொயோட்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கார்பிளாக்இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.3

டொயோட்டா ரஷ் இந்திய வருகை விபரம்... க்ரெட்டாவுக்கு அடுத்து ஒரு போட்டி!!

டொயோட்டா டீலர் வாயிலாக இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆசிய பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் டொயோட்டா ரஷ் விற்பனையில் உள்ளது. 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. இதில், 7 சீட்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

டொயோட்டா ரஷ் இந்திய வருகை விபரம்... க்ரெட்டாவுக்கு அடுத்து ஒரு போட்டி!!

வரும் 2021ம் ஆண்டில் புதிய டொயோட்டா ரஷ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், முன்கூட்டியே அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டொயோட்டா ரஷ் இந்திய வருகை விபரம்... க்ரெட்டாவுக்கு அடுத்து ஒரு போட்டி!!

புதிய டொயோட்டா ரஷ் எஸ்யூவியானது ஹூண்டாய் க்ரெ்டடா, நிஸான் கிக்ஸ், ரெனோ கேப்ச்சர் ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியான ரகத்தில் இருக்கும். டொயோட்டா நிறுவனத்தின் டிஎன்ஜிஏ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா ரஷ் இந்திய வருகை விபரம்... க்ரெட்டாவுக்கு அடுத்து ஒரு போட்டி!!

புதிய டொயோட்டா ரஷ் எஸ்யூவி பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் அறிமுகம் செய்யப்படும். டீசல் எஞ்சின் ஆப்ஷன் இருக்காது. டொயோட்டா யாரிஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தக்கூடும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 107 பிஎச்பி பவரையும், 141 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

டொயோட்டா ரஷ் இந்திய வருகை விபரம்... க்ரெட்டாவுக்கு அடுத்து ஒரு போட்டி!!

புதிய டொயோட்டா ரஷ் எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.14 லட்சம் இடையிலான விலைப்பட்டியலில் நிலைநிறுத்தப்படும். ஃபார்ச்சூனர் போலவே இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய டொயோட்டா ரஷ் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்களிப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Carblogindia

More from DriveSpark

Article Published On: Wednesday, April 24, 2019, 17:06 [IST]
English summary
Toyota Plans To Launch Rush SUV in India by 2021.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+