டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் அறிமுகம் எப்போது?

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு மினி எம்பிவி காரின் அறிமுகம் குறித்து நிறுவனத்திடமிருந்து வந்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் அறிமுகம் எப்போது?

கடந்த சில மாதங்களாகவே டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் அறிமுகம் குறித்த செய்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் தற்போது இந்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் அறிமுகம் எப்போது?

ஆனால், சில காரணங்களை முன்வைத்து இந்த காரின் அறிமுகத்தை டொயோட்டா கார் நிறுவனம் தள்ளிப்போட்டு வருகிறது. ஏற்கனவே, சில டீலர்களுக்கு வந்துவிட்ட இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தரிசனம் கொடுத்து வருகிறது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் அறிமுகம் எப்போது?

இந்த நிலையில், வரும் 2020ம் ஆண்டு துவக்கத்தில் இந்த கார் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. டொயோட்டா வெல்ஃபயர் கார் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் அறிமுகம் எப்போது?

முதல் 2,500 கார்களை எந்த மாற்றமும் இல்லாமல் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு சிறப்பு அனுமதி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ்தான் இந்த புதிய சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் அறிமுகம் எப்போது?

கடந்த 2018ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா அல்ஃபார்டு கார் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அல்ஃபார்டு காரின் அதிக சொகுசு அம்சங்கள் நிரம்பிய மாடல்தான் வெல்ஃபயர். இந்த கார் அப்போதிலிருந்தே இந்திய பணக்காரர்கள் மற்றும் நட்சத்திர விடுதி உரிமையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் அறிமுகம் எப்போது?

மிக தாராளமான இடவசதி, அதிக சொகுசு அம்சங்களுடன் இந்த கார் உட்புறம் முழுமையான எம்பிவி கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளிதாக ஏறி, இறங்குவதற்கான ஸ்லைடிங் கதவுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், சாய்மான வசதியுடன் இருக்கைகள், இரண்டு சன்ரூஃப், மூட் லைட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்கு சிறிய டேபிள்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் அறிமுகம் எப்போது?

இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஹைப்ரிட் மாடலாக வருகிறது. இந்த கார் 197 எச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்தது. சிவிடி கியர்பாக்ஸ் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது.

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு கார் அறிமுகம் எப்போது?

புதிய டொயோட்டா அல்ஃபார்டு வெல்ஃபயர் கார் ரூ.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த கார் மாடலாக இருக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் காருடன் இது போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 23, 2019, 13:41 [IST]
English summary
Toyota has confirmed that the Toyota Vellfire will be launched in India by early next year.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+