டொயோட்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி - அறிமுக விபரம்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ ரகத்திலான புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி - அறிமுக விபரம்!

டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எஸ்யூவியானது ரைஸ் (Rise) என்ற பெயரில் வர இருக்கிறது. இந்த புதிய டொயோட்டா எஸ்யூவி 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் டைகட்சூ நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு டிஎன் ட்ரெக் என்ற கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியது.

டொயோட்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி - அறிமுக விபரம்!

இந்த கான்செப்ட் அடிப்படையில்தான் டொயோட்டா ரைஸ் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா ரைஸ் எஸ்யூவி சில நாடுகளில் டைகட்சூ பிராண்டிலும் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. டைகட்சூ பிராண்டில் ராக்கி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதாவது, ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு நாடுகளில் இரண்டு பிராண்டுகளிலும் விற்பனை செய்யப்படும்.

டொயோட்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி - அறிமுக விபரம்!

டொயோட்டா நிறுவனத்தின் டிஎன்ஜிஏ என்ற மோடுலர் கட்டமைப்பு கொள்கையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய டொயோட்டா ரைஸ் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். மேலும், இது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் இருக்கும்.

டொயோட்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி - அறிமுக விபரம்!

அடுத்த மாதம் ஜப்பானில் டொயோட்டா ரைஸ் மற்றும் டைகட்சூ ராக்கி எஸ்யூவிகள் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். டொயோட்டா ரைஸ் எஸ்யூவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

MOST READ: சேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ!

டொயோட்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி - அறிமுக விபரம்!

இந்தியாவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ஆனால், இந்தியாவில் கொண்டு வருவதற்கான சாத்திக்கூறுகள் அதிகம் இருக்கிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

MOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

டொயோட்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி - அறிமுக விபரம்!

ஏனெனில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளதால், இந்த புதிய ரைஸ் எஸ்யூவியின் வருகை குறித்து ஊர்ஜிதமாக இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாத நிலை உள்ளது.

MOST READ: விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

டொயோட்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி - அறிமுக விபரம்!

அதேநேரத்தில், டொயோட்டா பிராண்டில் நேரடி மாடலாக ரைஸ் எஸ்யூவி வந்தால், நிச்சயம் அது பெரிய அளவிலான வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, நிச்சயமாக டொயோட்டா நிறுவனம் இதுகுறித்து பரிசீலித்து முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota is all set to introduce of its all new Rise compact SUV in Japan by next month.
Story first published: Tuesday, October 15, 2019, 14:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X