புதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்!

புதிய டொயோட்டா க்ளான்ஸா காரின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

புதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்!

மாருதி சுஸுகி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. டொயோட்டா க்ளான்ஸா என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய காரின் சோதனை முறையிலான உற்பத்தி குஜராத்தில் உள்ள சுஸுகி ஆலையில் துவங்கப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்!

இந்த மாத இறுதியில் டீலர்களுக்கு டெஸ்ட் டிரைவ் கார்கள் வர இருக்கின்றன. இந்த நிலையில், இந்த காரின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, வரும் ஜூன் 6ந் தேதி டொயோட்டா க்ளான்ஸா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்!

மாருதி பலேனோ காரில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், டொயோட்டா பேட்ஜ் கொடுக்கப்பட்டு புதிய தோற்றத்தில் வருகிறது க்ளான்ஸா கார். முகப்பு க்ரில், டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை மாற்றம் கண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோன்று உட்புறத்திலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

புதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்!

டொயோட்டா க்ளான்ஸா காரில் 1.2 லிட்டர் கே12பி பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோன்று, 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், மாருதி பலேனோ காரில் ஃபியட் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுவதால், அதற்கு புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டி இருக்கும் என்பதால், டீசல் மாடல் தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.

புதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்!

டொயோட்டா க்ளான்ஸா காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிச்சயமான ஒன்று.

புதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்!

மாருதி பலேனோ காரைவிட கூடுதல் சிறப்பம்சங்களுடன் உட்புறம் மேம்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. அதேபோன்று, பாதுகாப்பு அம்சங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில், இது மாருதி பலேனோ காரைவிட விலை அதிகமாக இருக்கும் என்பதால், கூடுதல் மதிப்பை தருவது அவசியமாகும்.

புதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்!

மாருதி பலேனோ காரின் ஸீட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்டுகளின் அடிப்படையிலான இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே டொயோட்டா க்ளான்ஸா கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆரம்ப விலை ரூ.6.5 லட்சத்தை ஒட்டி நிர்ணயிக்கப்படலாம்.

புதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்!

மாருதி பலேனோ கார் மிக வெற்றிகரமான மாடலாக வலம் வரும் நிலையில், அதே கார் தற்போது டொயோட்டா பிராண்டிலும் வர இருக்கிறது. ரீபேட்ஜ் கார் மாடல்களின் வரலாற்றை எடுத்து பார்த்தால் அது சொதப்பலாகவே அமைந்துள்ளது. இந்தநிலையில், க்ளான்ஸா காரின் வெற்றி டொயோட்டா வர்த்தக கொள்கைகள், விற்பனைக்கு பிந்தைய சேவையை பொறுத்தே அமையும்.

புதிய டொயோட்டா க்ளான்ஸா அறிமுக தேதி விபரம்!

தற்போது குஜராத்தில் உள்ள சுஸுகி ஆலையில் டொயோட்டா க்ளான்ஸா கார் உற்பத்தி செய்யப்பட்டாலும், கூடிய விரைவில் பெங்களூரில் உள்ள டொயோட்டா ஆலைக்கு க்ளான்ஸா கார் உற்பத்தி மாற்றப்படும். ஹூண்டாய ்எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் கார்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

Source: Gaadiwaadi

More from DriveSpark

Article Published On: Wednesday, April 24, 2019, 15:21 [IST]
English summary
Toyota To Launch Glanza Car In India On June 6, 2019.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+