வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் கொடுத்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் !!

டொயோட்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான சொகுசு வகை எம்பிவி கார் மாடல் அல்ஃபார்டு. இதன் உயர்வகை சொகுசு அம்சங்கள் பெற்ற மாடலானது வெல்ஃபயர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த வெல்ஃபயர் மாடாலுக்கு பணக்காரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதுடன், நட்சத்திர விடுதிகளில் வாடிக்கையாளர் சேவையிலும் பயன்படுத்தப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் கொடுத்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் !!

இந்தியாவிலும் டொயோட்டா அல்ஃபார்டு மற்றும் வெல்ஃபயர் மாடலுக்கு தனி ரசிகர்களும், வாடிக்கையாளர் வட்டமும் உள்ளது. இதுவரை இந்த காரை இறக்குமதி செய்து இந்திய பணக்காரர்கள் பெற்று வந்தனர். இந்த நிலையில், இந்தியாவில் இந்த காருக்கு சிறப்பான வர்த்தக வாய்ப்பு இருப்பதை டொயோட்டா உணர்ந்து கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் கொடுத்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் !!

இதனையடுத்து, நேரடியாக இந்த சொகுசு எம்பிவி காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. வரும் அக்டோபரில் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் கொடுத்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் !!

இதற்கு முன்னோட்டமாக, அண்மையில் டொயோட்டா டீலர்களுக்கான ஆண்டு கூட்டத்தில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் கொடுத்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் !!

டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் இரண்டு பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. ஸ்டான்டர்டு மற்றும் ஏரோ பாடி ஆகிய மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், ஸ்டான்டர்டு மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் கொடுத்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் !!

டொயோட்டா வெல்ஃபயர் கார் 4,935 மிமீ நீளமும், 1,850 மிமீ அகலமும், 1,935 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மிமீ ஆக உள்ளது. இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதால், மாற்றங்கள் எதுவும் பெரிய அளவில் இருக்காது.

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் கொடுத்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் !!

இந்த கார் வெளிநாடுகளில் மூன்றுவிதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைடக்கிறது. இதன் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 182 பிஎஸ் பவரையும், 235 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் 3.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 301 பிஎஸ் பவரையும், 361 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் கொடுத்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் !!

இந்த காரில் 2.5 லிட்டர் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் மாடலும் இருக்கிறது. இதுதான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இந்த மாடலில் இருக்கும் பெட்ரோல் எஞ்சின் 152 பிஎஸ் பவரையும், 206 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எலெக்ட்ரிக் மோட்டார் 143 பிஎஸ் பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் கொடுத்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் !!

இந்த காரின் வெளிப்புறத்தை போலவே, உட்புறமும் மிக பிரிமீயமாக இருக்கிறது. மர அலங்கார வேலைப்பாடுகள், சில்வர் ஆக்சஸெரீகளுடன் கூடிய இன்டீரியர் வசீகரமாக உள்ளது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், கார்னரிங் விளக்குகள், பவர் ஸ்லைடு கதவுகள், சாய்மான வசதியுடன் தனி இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் கொடுத்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் !!

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், தனி சீட்பெல்ட்டுகள், மூட் லைட் சிஸ்டம், சன்ரூஃப், இருக்கைகளுக்கான மெமரி வசதி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இதுதவிர்த்து, எண்ணற்ற சொகுசு வசதிகளையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் கொடுத்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் !!

புதிய டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் ரூ.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். இது நிச்சயம் பெரும் பணக்காரர்கள் மற்றும் அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Source: Facebook

More from DriveSpark

Article Published On: Tuesday, August 13, 2019, 13:54 [IST]
English summary
Toyota Vellfire luxury mini van has showcased for prospective buyers in India ahead of launch very soon.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+