விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் டொயோட்டா: யாரிஸ் அறிமுகத்தில் அதிரடி நிச்சயம்...

டொயோட்டா நிறுவனம் விற்பனையை அதிகரிக்கும் விதமாக யாரிஸ் காரை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இத்துடன் சில சிறப்பு சலுகைகளையும் அது அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் டொயோட்டா: யாரிஸ் அறிமுகத்தில் அதிரடி நிச்சயம்...

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, அதன் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான யாரிஸ் செடான் ரக காரை அப்கிரேட் செய்துள்ளது.

இந்த அப்கிரேட் செய்யப்பட்ட மாடல் நாளை (செப்டம்பர் 3) களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் டொயோட்டா: யாரிஸ் அறிமுகத்தில் அதிரடி நிச்சயம்...

அண்மைக் காலங்களாக விற்பனைச் சரிவைச் சந்தித்து வரும் இந்நிறுவனம், புதிய அப்கிரேட் செய்யப்பட்ட யாரிஸ் மூலம் விற்பனை வளர்ச்சியைப் பெற விரும்புகின்றது. இதன்காரணமாகவே, இதனை டொயோட்டா புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் டொயோட்டா: யாரிஸ் அறிமுகத்தில் அதிரடி நிச்சயம்...

அதேசமயம், யாரிஸ் செடான் ரக காரும் பெரியளவில் விற்பனையைப் பெறக்கூடிய மாடலாக இல்லை. இருப்பினும் டொயோட்டா நிறுவனம், இந்த காரை விட்டுக் கொடுக்காமல் அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் டொயோட்டா: யாரிஸ் அறிமுகத்தில் அதிரடி நிச்சயம்...

அந்தவகையில், புதிய அப்டேட்டுகளாக யாரிஸ் காரில் பல இருக்கின்றன. அதில் மிக முக்கியாக, ட்யூவல் டோன் மேற்கூரை, டைமண்ட் தோற்றத்திலான அலாய் வீல்கள் இருக்கின்றது. இத்துடன், கூடுதலாக பல பிரிமியம் ரகத்திலான அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன.

விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் டொயோட்டா: யாரிஸ் அறிமுகத்தில் அதிரடி நிச்சயம்...

அவ்வாறு, யாரிஸின் கேபினுக்குள் புதிய லெதர் இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளன. இத்துடன், பின் பக்க இருக்கையில் கூடுதல் சொகுசு அம்சத்திற்காக புதிய போல்ஸ்டரிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் டொயோட்டா: யாரிஸ் அறிமுகத்தில் அதிரடி நிச்சயம்...

இந்த புதுப்பிப்பலைப் பெற்றிருக்கும் யாரில் காரில் வெறும் காஸ்மெட்டிக் மாற்றம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால், மெக்கானிக்கலாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. எனவே, முந்தைய மாடலில் இடம்பெற்ற அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின்தான் ஃபேஸ்லிஃப்ட் யாரிஸிலும் இடம்பெற்றிருக்கின்றது.

விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் டொயோட்டா: யாரிஸ் அறிமுகத்தில் அதிரடி நிச்சயம்...

இது, அதிகபட்சமாக 106 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். யாரிஸ் நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஜே, ஜி, வி மற்றும் விஎக்ஸ் ஆகியவைதான் அவை. இவையனைத்தும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷனில் கிடைக்கின்றது.

விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் டொயோட்டா: யாரிஸ் அறிமுகத்தில் அதிரடி நிச்சயம்...

இதேபோன்று பாதுகாப்பு அம்சங்களாக டொயோட்டா யாரிஸ் காரில், டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் இதில் காணப்படுகின்றது. இத்துடன், இரு ஏர் பேக்குகள், டிபிஎம்கள், இஎஸ்பி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் குழுந்தைகள் ஐசோபிக்ஸ் மவுண்ட் உள்ளிட்டவை இதில் இடம்பெறுகின்றது.

விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் டொயோட்டா: யாரிஸ் அறிமுகத்தில் அதிரடி நிச்சயம்...

இந்த அப்கிரேட் செய்யப்பட்ட யாரிஸ் ரூ. 9.29 லட்சம் முதல் ரூ. 14.07 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதைவிட குறைவான விலையிலும் அது களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது. ஏனென்றால், டொயோட்டா நிறுவனம் இந்த காரின் விற்பனையை அதிகரிக்க முயற்சியிலேயே அப்கிரேட் செய்து வருகின்றது.

விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் டொயோட்டா: யாரிஸ் அறிமுகத்தில் அதிரடி நிச்சயம்...

ஆகையால், மலிவான விலையில் இந்த கார் களமிறக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், சில சிறப்பு சலுகைகளும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Yaris Facelift Launching Soon: Features Dual-Tone Colour, Diamond Alloy Wheels. Read In Tamil.
Story first published: Monday, September 2, 2019, 16:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X