புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம்!

ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம்!

ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கிறது. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை மனதில் வைத்து ட்ரையம்ஃப் நிறுவனமும் தனது ஸ்க்ராம்ப்ளர் ரக வடிவமைப்பிலான மாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம்!

இந்த நிலையில், அண்மையில் ட்ரையம்ஃப் நிறுவனம் தனது ஸ்பீடு ட்வின் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அப்போது கார்அண்ட்பைக் தளத்திடம் பேசிய ட்ரையம்ஃப் நிறுவனத்தின் பொது மேலாளர் ஷோயிப் ஃபரூக்," அடுத்த மாதம் ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.

புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம்!

வெளிநாடுகளில் ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் மாடலானது இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண சாலைகளுக்கான மாடலானது ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 எக்ஸ்சி என்ற பெயரிலும், ஆஃப்ரோடு அம்சங்கள் கொண்ட மாடலானது ட்ரையம்ஃப் 1200 எக்ஸ்இ என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம்!

இதில், ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் எக்ஸ்சி1200 மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக்கில் பகல்நேர விலக்குகளுடன் எல்இடி ஹெட்லைட்டுகள், ட்வின் பேரல் புகைப்போக்கி குழல்கள், பின்புற ஃபுட்பெக்குகளை கழற்றி மாட்டும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம்!

இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 1,200சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. டார்க் அசிஸ்ட் க்ளட்ச் சிஸ்டம் உள்ளது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம்!

இந்த பைக்கில் ஸ்டீல் ட்பியூலர் டபுள் க்ராடில் ஃப்ரேம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஓலின்ஸ் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இந்த பைக்கில் முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்்தில் 17 அங்குல சக்கரமும் உள்ளன.

புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம்!

அதேபோன்று, முன்சக்கரத்தில் பிரெம்போ எம்-50 மோனோபிளாக் காலிபர்கள் கொண்ட இரண்டு 320 மிமீ டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் பிரெம்போ 2 பிஸ்ன் ஃப்ளோட்டிங் காலிபர்கள் கொண்ட 255 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம்!

ரைடு பை ஒயர் தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல் சி்டம், ஹீட்டடட் ஹேண்ட் க்ரிப்புகள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள். இந்த பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. கோ புரோ கேமராவை இணைத்துக் கொள்வதற்கான வசதி, நேவிகேஷன் வசதியும் இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்கும்.

Source: Carandbike

More from DriveSpark

Article Published On: Saturday, April 27, 2019, 10:37 [IST]
English summary
Triumph Motorcycle India has revealed that the next model to join the company's line-up will be the Triumph Scrambler 1200.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+