புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

மஹாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தாரிடம் உள்ள விலையுயர்ந்த மற்றும் சொகுசு கார்கள்குறித்த தகவல் கசிந்துள்ளது.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

மஹாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28ம் தேதி பொறுப்பேற்றார். நாடே மஹாராஷ்டிரா அரசியல்மீது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த சூழ்நிலையில் பெரும் சர்ச்சைகள் மற்றும் போராட்டாங்கள் என பல சலசலப்புகளுக்கு மத்தியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்தார்.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

வாரிசு வாரியாக நீண்ட காலமாக அரசியல் களத்தில் இருந்தாலும் முதல் முறையாக அரசு பதவியை ஏற்பவராக உத்தவ் தாக்கரே மாறியுள்ளார். இவரின் குடும்பத்தைச் சார்ந்த பலர் அரசியலில் இருந்தது, தற்போதும் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், இவரின் குடும்பத்தார் பலர் செல்வம் படைத்தவர்களாக காட்சியளிக்கின்றனர். மேலும், இவர்களிடம் உள்ள கார்கள் பெரும் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் விலையுயர்ந்தவையாக காட்சியளிக்கின்றன.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

பொதுவாக அரசியல்வாதிகளிடம் விலையுயர்ந்த சொகுசு கார்கள் இருப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. இருப்பினும், உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பம் பயன்படுத்தும் கார்கள்குறித்த தகவல் முதல் முறையாக வெளிவந்திருப்பதால் அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

அந்தவகையில், உத்தவ் தாக்கரேவிடம் பல சொகுசு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், முதலாவதாக உத்தவ் தாக்கரேவிடம் உள்ள விலையுயர்ந்த கார்களைப் பற்றி பார்க்கலாம். பின்னர், அவரது மகன் மற்றும் உறவுகாரரிடம் உள்ள கார்களைப் பற்றிய தகவலைப் பார்க்கலாம்.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

உத்தவ் தாக்கரே

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்-கிளாஸ்:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார்களில் ஒன்றாக ஜிஎல் வகுப்பு கார்கள் இருக்கின்றன. இவை எஸ்யூவி காராகும். இந்த காரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்பட சொகுசு வசதிகள் என ஏராளமான அம்சங்கள் காணப்படுகின்றன. இதுமட்டுமின்றி, உத்தவ் தாக்கரேவிற்கு ஏற்றவாறு பல்வேறு சிறப்பு வசதிகள் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

இதன்காரணமாகவே, தற்போது மஹாராஷ்டிராவின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னரும் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் காரை பயன்படுத்தி வருகின்றார். ஆனால், அவருக்கு தற்போது அரசு சார்பாக பாதுகாப்பு நிறைந்த டாடா சஃபாரி கார் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்:

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் மட்டுமின்றி எஸ் கிளாஸ் காரையும் உத்தவ் பயன்படுத்தி வருகின்றார். ஆனால், இதனை அவரது உறவினர் ராஜ் தாக்கரே அதிகமாக காட்சியளித்து வருகின்றார். இந்த மிக பழைய தலைமுறை மாடலாகும்.

மும்பையில் வசிக்கும் பலர் இந்த காரில் உத்தவ் தாக்கரேவின் உறவினர்கள் பயணிப்பதைக் காண முடியும். அந்த அளவிற்கு அவர்களுக்கு பிடித்தமான கார்களில் ஒன்றாக எஸ் கிளாஸ் உள்ளது.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

ஆதித்யா தாக்கரே

பிஎம்டபிள்யூ 5 ஜிடி:

உத்தவ் தாக்கரேவின் மகனும், மும்பை சட்டமன்றத்தின் எம்எல்ஏ-வுமான ஆதித்யா தாக்கரே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5ஜிடி என்ற சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் இந்தியாவில் ரூ. 6.5 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

தேர்தல் களப் பணியின் ஆதித்யா தாக்கரே இந்த காரை அதிகம் பயன்படுத்தியுள்ளார். ஆகையால், அவ்வப்போது சாலையில் பிஎம்டபிள்யூ 5ஜிடி காரில் பயணிப்பதை நம்மால் காண முடியும்.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர்:

பிஎம்டபிள்யூ 5 ஜிடி மட்டுமின்றி ஆதித்யா தாக்கரேவிடம் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காரும் உள்ளது. ரேஞ்ஜ் ரோவர் காரை பல தொழிலதிபர்கள் மற்றும் முன்னணி அரசியல்வாதிகளிடம் நம்மால் காண முடியும். ஆகையால், இந்த காரை ஆதித்யா தாக்கரேவிடம் காண்பது அவ்வளவு ஆச்சரியமான ஒன்றாக தெரியவில்லை. இருப்பினும், இந்த காரும் விலையுயர்ந்த கார்களில் ஒன்று என்பதால் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கார் உள்ளது.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

ராஜ் தாக்கரே

டொயோட்டா லேண்ட் க்ரூஸர்:

அதிகம் வருமானம் ஈட்டும் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக ராஜ் தாக்கரே திகழ்ந்து வருகின்றார். இவரிடமும் பல்வேறு சொகுசு மற்றும் விலையுயர்ந்த கார்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் பலரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் இருக்கின்றது.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

இந்த மாடல் காரை பல திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் முக்கிய தலைவர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏனென்றால், இந்த காரில் பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவே ராஜ் தாக்கரேவும் இந்த காரை பயன்படுத்த முக்கிய காரணமாக இருக்கின்றது.

புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் இத்தனை கார்களா..? ஒவ்வொன்றின் மதிப்பும் உச்சபட்சம்!

அதுமட்டுமின்றி அவரிடம் உள்ள மற்ற கார்களைக் காட்டிலும் லேண்ட் க்ரூஸரையே ராஜ் தாக்கரேவிற்கு அதிகம் பிடிக்கும் என கூறப்படுகின்றது.

ஆகையால், குடும்பத்தினர் பல முறை வெளியே செல்லும்போது இந்த காரிலேயே பயணம் செய்கின்றார். அதுமட்டுமின்றி, பயணங்களின்போது அந்த காரை அவரே இயக்கியும் செல்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, December 2, 2019, 16:33 [IST]
English summary
Uddhav Thackerey & Their Cars. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+