ஒரு முறை சார்ஜ் செய்தால் 540 கிமீ பயணிக்கும் கார்... எங்கு தயாராகிறது என தெரிந்தால் தனி கெத்துதான்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 540 கிலோ மீட்டர்கள் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது எங்கு தயாராகிறது என தெரிந்தால் நீங்கள் பெருமைப்படக்கூடும்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்கள் மிக அதிகமான விலையில் விற்பனையாகி கொண்டுள்ளன. கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கட்டுக்குள் இருந்தாலும், அவற்றின் விலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயரலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 540 கிமீ பயணிக்கும் கார்... எங்கு தயாராகிறது என தெரிந்தால் தனி கெத்துதான்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்தால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விடும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை புதிய உச்சங்களை தொட்டு வந்தது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 540 கிமீ பயணிக்கும் கார்... எங்கு தயாராகிறது என தெரிந்தால் தனி கெத்துதான்

ஆனால் அதன்பின் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்ததால், முன்பு இருந்ததை விட தற்போது பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. என்றாலும் மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பின் காரணமாக அதன் விலை தற்போதும் அதிகமாக உள்ளது என்பதே பலரது வாதம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 540 கிமீ பயணிக்கும் கார்... எங்கு தயாராகிறது என தெரிந்தால் தனி கெத்துதான்

இப்படிப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக அமையும். பெட்ரோல், டீசல் வாகனங்களில் பயணிக்க ஆகும் செலவை காட்டிலும், எலெக்ட்ரிக் வாகனங்களில் பயணம் செய்ய ஆகும் செலவு மிக குறைவுதான்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 540 கிமீ பயணிக்கும் கார்... எங்கு தயாராகிறது என தெரிந்தால் தனி கெத்துதான்

எனவே தற்போது பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களை மக்கள் ஒதுக்க தொடங்கியுள்ளனர். அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எனவே முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 540 கிமீ பயணிக்கும் கார்... எங்கு தயாராகிறது என தெரிந்தால் தனி கெத்துதான்

இந்த சூழலில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான லாரெட்டி, தங்களின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எஸ்யூவி வகையை சேர்ந்த இந்த காருக்கு டியான் எக்ஸ் (DionX) என பெயரிடப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 540 கிமீ பயணிக்கும் கார்... எங்கு தயாராகிறது என தெரிந்தால் தனி கெத்துதான்

எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் மிகப்பெரிய குறையே, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தாலும் குறைவான தூரம் மட்டுமே பயணிப்பதுதான். ஆனால் டியான் எக்ஸ் எலெக்ட்ரிக் கார் அந்த குறையை போக்கும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 540 கிமீ பயணிக்கும் கார்... எங்கு தயாராகிறது என தெரிந்தால் தனி கெத்துதான்

ஏனெனில் இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 540 கிலோ மீட்டர்கள் தாராளமாக பயணம் செய்யலாம். எலெக்ட்ரிக் கார்களின் செயல்திறனை (Performance) ஒரு சிலர் குறையாக கூறி கொண்டுள்ளனர்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 540 கிமீ பயணிக்கும் கார்... எங்கு தயாராகிறது என தெரிந்தால் தனி கெத்துதான்

ஆனால் இந்த விமர்சனங்களுக்கும் டியான் எக்ஸ் எலெக்ட்ரிக் கார் முற்றுப்புள்ளி வைக்கிறது. ஏனெனில் பூஜ்ஜியத்தில் இருந்து 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.4 வினாடிகளில் டியான் எக்ஸ் எலெக்ட்ரிக் கார் எட்டிவிடும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 540 கிமீ பயணிக்கும் கார்... எங்கு தயாராகிறது என தெரிந்தால் தனி கெத்துதான்

லாரெட்டி நிறுவனமானது டியான் எக்ஸ் எலெக்ட்ரிக் காரை, வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காரை புதுச்சேரியில் உற்பத்தி செய்ய லாரெட்டி நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக லாரெட்டி நிறுவனம் 2,578 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
UK Manufacturer Laureti Plans Made-in-india Electric SUV With 540Km Range. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X