2020 மஹிந்திரா தார் காரின் புதிய ஸ்பை படங்கள் கசிந்தன!
மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு வாகனமான 2020 மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

அங்க அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில், புதிய தலைமுறை மஹிந்திரா எஸ்யூவி தொடர்ந்து சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. புதிய 5 ஸ்போக் அலாய் சக்கரங்களும், 235 அல்லது 245 செக்ஷன் டயர்களுடன் காணப்படுவதால் இந்த காரை பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தில் உள்ளது. ஆனால் இது தவிர காரின் மற்ற பாகங்கள் மறைக்கப்பட்டுள்ளதால் எதுவும் சரியாக தெரியவில்லை.

மஹிந்திரா 2020 தார் கார்கள் சாஃப்ட் டாப் மற்றும் ஹார்ட் டாப் என இரண்டு விதமான வேரியண்ட்களில் வெளியாகவுள்ளது. விரைவில் அறிமுகமாகவுள்ள மாடலில் பின்புற இருக்கைகள் முன்புறத்தை நோக்கி இருக்கும் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்தது தான். இது தற்போதைய மாடலில் இருக்கும் பக்கவாட்டு இருக்கைகளை விட சிறந்தவை. ஆனால் மஹிந்திரா தாரின் சாஃப்ட் டாப் வேரியண்ட்டில் தற்போதைய மாடலைப்போலவே பக்கவாட்டு இருக்கைகளே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்பை புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது 2020 மஹிந்திரா தார் இப்போது உள்ள மாடலை விட அகலத்திலும் நீளத்திலும் பெரியதாக உள்ளது. இதனால் இந்த தார் மாடல் சாலையில் பெரியளவிலான இடத்தை ஆக்கிரமித்து விடுகிறது. மேலும் காரின் உருவமும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் விபத்தில் இருந்து மிகவும் பாதுகாக்கப்படும். மிகச் சிறந்த ஆப்-ரோடு திறனையும் இந்த எஸ்யூவி கொண்டிருக்கும்.

ஜீப் ரேங்லர் மாடலில் உள்ளது போல் 2020 மஹிந்திரா தார் ரெட்ரோ நிறத்திலேயே தொடரவுள்ளது. மற்ற மாடர்ன் கார்களின் சாயலும் இந்த தாரில் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த எஸ்யூவி தற்போதுள்ள கார்களின் தோற்றத்திலேயே இருக்கும்.

இக்காரின் உட்புறம் ஜீப்பின் உணர்வை தராமல் விலையுயர்ந்த காரில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வையே தரும். இதன் டேஸ்போர்டு அமைப்பு புதிதாக இருக்கும். இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கப்பட்ட தொடுதிரையுடன் உள்ளது.

முன்புறத்தில் இரண்டு ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹைஸ்பீட் வார்னிங், முன்பக்க சீட்பெல்ட் அணிவதை நினைவூட்டும் வசதி மற்றும் பார்கிங் சென்சார் போன்ற அம்சங்கள் 2020 மஹிந்திரா தாரில் உள்ளன.

இக்காரின் பிஎஸ்விஐ 2.0 டீசல் என்ஜின் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி500 போன்ற மாடல்களின் என்ஜின் திறன்களுக்கு இணையானதாக இருக்கும். தற்போதைய மாடலின் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் சாஃப்ட் வேரியண்ட்டில் மட்டும் தொடரவுள்ளதாம். இந்த எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்துடன் இடம்பெறுகிறது.


Click it and Unblock the Notifications








