விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

இந்தியாவின் பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி தனது புதிய ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஓதில் இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் மேலும் காணலாம்.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமான மாருதி சுஸுகி கார் நிறுவனம் வியாபார சந்தையில் கடும் போட்டியை சந்தித்து வருகிறது. இதனால் மாருதி நிறுவனம் தனது புதிய ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. சமீபத்தில் மாருதி சுஸுகி டீசல் கார் உற்பத்தியினை நிறுத்துவதாக அறிவித்தது. இது அந்நிறுவன வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாருதி சுஸுகி விற்பனைக்கு காலம் இறக்கப்போகும் கார்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

மாருதி சுஸுகி விட்டாரா:

இந்தியாவின் எஸ்யூவி மாருதி சுஸுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனையில் வெற்றி நடைபோட்டு வலம் வருகிறது. இருப்பினும் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யூவி கார் மாருதி நிறுவனத்திற்கு கடும் போட்டியை தருகிறது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

இதனை சரிசெய்ய மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா 7 சீட்டர் எஸ்யூவி காரினை தயாரித்து வருகிறது. விட்டாரா எஸ்யூவி வரும் 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

மாருதி சுஸுகி Y1K:

மாருதி நிறுவனத்தின் தயாரிப்பான Y1K காரின் கான்செப்ட் மாடல் கார் 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி நிறுவனத்தின் பழைய ஜென் காரின் டிசைனை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சற்று டிசைன் மேம்படுத்தப்பட்டு நவீன கார் டிசைனாக வடிவம் பெற்றுள்ளது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

இதில் டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் மற்றும் பல பாதுகாப்பு அம்சகங்களும் இடம்பெறவுள்ளது. மாருதி சுஸுகி Y1K 1.0 லிட்டர் அல்லது 1.2 லிட்டர் என்ஜினில் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது. Y1K கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

மாருதி சுஸுகி எர்டிகா க்ராஸ்:

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஆண்டி புதிய தலைமுறை எர்டிகா காரினை அறிமுகம் செய்தது. இதனையடுத்து மாருதி சுஸுகி நிறுவனம் எர்டிகா காரின் புதிய வேரியண்ட்டை களமிறக்கவுள்ளது. இந்த கார் எர்டிகா க்ராஸ் என்ற பெயரில் வெளிவரலாம் என தெரிகிறது. இந்த புதிய கார் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படவுள்ளன.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

எர்டிகா காரின் டிசைனில் மாற்றம் செய்யப்படாமல் இன்டிரியர் மற்றும் பாதுகாப்பு வசதிகளில் மட்டும் மற்றம் கொண்டுவர மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எர்டிகா க்ராஸ்1.5 லிட்டர் என்ஜினுடன் 6 சீட்டர் காரக வரவுள்ளது. புதிய எர்டிகா க்ராஸ் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

மாருதி சுஸுகி வேகன் ஆர் 7 சீட்டர்:

மாருதி நிறுவனம் சமீபத்தில் புதிய வேகன் ஆர் காரினை அறிமுகம் செய்தது. மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதால். வேகன் ஆர் மேம்படுத்த வேகன் ஆர் 7 சீட்டர் காரினை களமிறக்க முடிவு செய்துள்ளது. வேகன் ஆர் 7 சீட்டர் காரில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் தரும் வல்லமை கொண்டது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரவுள்ளது. மேலும் இதில் டச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் அளிக்கப்படும் என தெரிகிறது. வேகன் ஆர் 7 சீட்டர் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படவுள்ளது. வேகன் ஆர் 7 சீட்டர் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

மாருதி சுஸுகி வேகன் ஆர் இவி:

மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரக களமிறங்கவுள்ளது வேகன் ஆர் இவி. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது வேகன் ஆர் இவி. இதன் டிசைன் வேகன் ஆர் காரின் டிசைனில் மாறுபடாமல் உள்ளது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

இதில் கூடுதலாக அலாய் வீல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இன்டிரியரில் சில மாற்றங்களுடன் வரலாம் என தெரிகிறது. வேகன் ஆர் இவி வரும் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் டூயல் ஜெட்:

மாருதி நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களில் ஸ்விஃப்ட் காரும் ஒன்று. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் வேரியண்ட்டுகள் அனைத்தும் விற்பனையில் தனியிடம் பிடித்தது. தற்போது நிறுவனம் ஸ்விஃப்ட் டூயல் ஜெட் என்ற புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது விரப்பணியில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் காரின் அதே அம்சங்கள் இதில் இடம்பெற்றாலும் கூடுதலாக இதில் சக்திவாய்ந்த பீஸ்6 டூயல் ஜெட் என்ஜின் சேர்க்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

இந்த என்ஜின் 91 பிஎச்பி பவரையும், 118 என்எம் டார்க் திறனையும் தரும் வல்லமை கொண்டது. இதில் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் டூயல் ஜெட் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு வரவிருக்கும் அசத்தலான மாருதி சுஸுகி கார்கள்: விற்பனையில் வெல்லப்போவது எது?

மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இந்த புதிய கார்களில் எது விற்பனையில் சாதனை படைக்கும் என்பதில் மாருதி சுஸுகி ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மாருதி சுஸுகி நிறுவனம் மஹிந்திரா, ஹோண்டா மற்றும் டாடா நிறுவனத்துடன் நேரடியாக போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2019, 13:31 [IST]
English summary
Top 10 Upcoming Maruti Suzuki Cars In India: Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+