டாடா நிறுவனத்தின் புதிய பிரம்மாண்ட எஸ்யூவி: உற்சாகத்தில் டாடா ரசிகர்கள்
டாடா நிறுவனம் எச்2எக்ஸ் மற்றும் பஸ்ஸார்ட் எஸ்யூவி தொடர்ந்து தனது மூன்றாவது எஸ்யூவி காரினை அறிமுகம் செய்யவுள்ளது. டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் ஹாரியரின் வெற்றிடத்தை நிரப்ப புதிய டாடா ப்ளூபேர்ட் எஸ்யூவி களம் இறங்குகிறது. இது குறித்த விவரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நிறுவனம் தொடர்ந்து தனது தயாரிப்பினை விரிவுபடுத்தி வருகிறது. இதனால் டாடா நிறுவனம் புதிய கார்களை விரைவாக அறிமுகம் செய்து வருகிறது. டாடா நிறுவனம் ஒமேகா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட டாடா ஹாரியர் காரினை கடந்த ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனையில் தனி இடம் பிடித்தது. இந்நிலையில் டாடா நிறுவனம் எச்5எக்ஸ் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய புதிய கார்களை அறிமுகம் செய்தது. இதில் எச்5எக்ஸ் கான்செப்ட் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் டாடா பஸ்ஸார்டு 7 சீட்டர் கான்செப்ட் எஸ்யூவியை ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைத்திருந்தது. டாடா பஸ்ஸார்டு எஸ்யூவி பெயர் மாற்றப்பட்டு டாடா கசினி என்ற பெயரில் வெளிவரலாம் என தெரிகிறது. டாடா கசினி இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக விற்பனைக்கு வருகிறது.

டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் அல்ட்ராஸ் கார் மிக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அல்ட்ராஸ் விற்பனைக்கு வருகிறது. டாடா நிறுவனம் எச்2எக்ஸ் மற்றும் பஸ்ஸார்ட் எஸ்யூவி ஆகிய கார்களை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் டாடா நிறுவனம் புதிய தயாரிப்பான டாடா ப்ளூபேர்ட் எஸ்யூவி காரினை தயாரித்து வருகிறது.

டாடா ப்ளூபேர்ட் எஸ்யூவி ஏச்5எக்ஸ் எஸ்யூவியின் இம்பெக்ட் 2.0 டிசைனில் உருவாகிறது. இதில் டாடா ஹாரியரில் உள்ளது போன்ற ஸ்டேரிங் அமைப்பு மற்றும் பல அடுக்கு முன் பக்க விளக்குகள், ஹாரியரில் உள்ள அதே இன்டிரியர் வடிவமைப்பு போன்ற வசதிகளுடன் வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா ப்ளூபேர்ட் எஸ்யூவி மாருதி எஸ்கிராஸ் காருக்கு போட்டியாக வரலாம் என தெரிகிறது. டாடா ப்ளூபேர்ட் எஸ்யூவி டாடா நிறுவனத்தின் மூன்றாவது எஸ்யூவியாக வெளிவருகிறது.

டாட்டா ப்ளூபேர்ட் எஸ்யுவியில் மின்சார சன்ரூஃப், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோமேட் ஹெட்லேம்ப்ஸ், குரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜ் மற்றும் பல டிரைவிங் மோட்கள் போன்ற பல அம்சங்களுடன் வரும் என தெரிகிறது . ப்ளூபேர்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் ஆட்டோமெடிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாட்டா ப்ளூபேர்ட் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து எஸ்யூவி மாடல்களை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வரும் டாடா நிறுவனம். மினி எஸ்யூவி கார்களையும் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் டாடா நிறுவனத்தின் நேரடி போட்டி நிறுவனமான மாருதி மற்றும் மஹிந்திரா நிறுவனங்களுக்கு டாடா பெரும் சவாலாக இருக்கும். இதன் மூலம் வரும் காலங்களில் டாடா நிறுவனம் எஸ்யூவி விற்பனையில் தனியிடம் பிடிக்கும் என தெரிகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








