புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு.. இதற்காகதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

பொது பயன்பாட்டிற்காக அண்மையில் வாங்கப்பட்ட புதிய பேருந்துகளை மாநில அரசு ஒன்று வாங்கிய கையோடு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு... இதற்குதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

ஏழை, எளிய மக்களின் போக்குவரத்தில் முக்கிய பங்களிக்கும் வாகனங்களில் ஒன்றாக அரசு பேருந்துகள் இருக்கின்றன.

ஆனால், இந்த வாகனங்களை ஒரு சில மாநில அரசுகள் முறையாக கவானிக்காத காரணத்தால் அவை தகர டப்பாக்களாக தற்போது மாறியுள்ளது. மேலும், அவை பயணிப்பதற்கு சற்றும் உதவாத ஓர் வாகனங்களாக மாறியுள்ளன.

புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு... இதற்குதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

ஆகையால், அத்தகைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவிட்டு, புது வாகனங்களை களமிறக்குவதற்கான பணியில் ஒரு சில மாநில அரசுகள் இறங்கியுள்ளன. அந்தவகையில், தமிழகத்தில் அண்மையில் புதிய பேருந்துகள் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமின்றி, கூடுதலாக மின்சார பேருந்துகளை இணைக்கும் பணியிலும் அது தீவிரம் காட்டி வருகின்றது.

புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு... இதற்குதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

இந்நிலையில், உத்தரகாண்ட் போக்குவரத்துத்துறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இணைக்கப்பட்ட புதிய பேருந்துகள் அனைத்தும் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் அரசு, அண்மையில் பொது பயன்பாட்டிற்காக 300-க்கும் அதிகமான பேருந்துகளை வாங்க திட்டமிட்டிருந்தது. இதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பேருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு... இதற்குதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

இதையடத்து, பயன்பாட்டிற்கு களமிறக்கும் விதமாக முதல்கட்டமாக 150 பேருந்துகள் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த புத்தம் புதிய பேருந்துகளை மத்திய சாலை போக்குவரத்து நிறுவனம் (சி.ஐ.ஆர்.டி) ஆய்வு செய்தது. அதில், பேருந்தின் கியரில் சிறு கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு... இதற்குதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

மேலும், அதனை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக ஓட்டுநர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். ஆகையால், புதிதாக வாங்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் மறு சீரமைத்து திருப்பியளிக்குமாறு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

MOST READ: காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்

புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு... இதற்குதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

இதுகுறித்து, உத்தரகாண்ட் போக்குவரத்துத்துறையின் (யுடிசி) எம்டி ரன்வீர் சிங் கூறியதாவது, "கடந்த சனிக்கிழமை அன்று புதிதாக வாங்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் சிஐஆர்டி ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன் முடிவுகள் அனைத்தும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிடைத்தது. அதில், பேருந்தின் கியர் லிவர்கள் சற்று கோளாறுடன் இருப்பது கண்டறியப்பட்டது. ஆகையால், அவற்றை சீரமைத்து தர கோரி திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

MOST READ: திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...

புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு... இதற்குதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

சுவாரஷ்யமாக, உத்தரகாண்டைப் போலவே ஹிமாச்சல பிரதேசமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இருந்து இதே பேருந்துகளை அண்மையில் பொது பயன்பாட்டிற்காக வாங்கியிருந்தது. ஆனால், அவையனைத்தும் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகின்றது.

தற்போது, உத்தரகாண்ட அரசு திருப்பியனுப்பி வைத்துள்ள அனைத்து பேருந்துகளும் மறுசீரமைக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டில் களமிறக்கப்பட உள்ளன.

MOST READ: டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சினிமாவை விஞ்சும் நிஜ கதை!

புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு... இதற்குதான் ரிட்டன் கொடுத்தாங்களா..?

புதிதாக வாங்கப்பட்ட இந்த 150 பேருந்துகளில் 50 பேருந்துகள் டெஹ்ராடூன் பணிமனைக்கும், 65 பேருந்துகள் குமாவுன் பகுதிக்கும், 35 பேருந்துகள் தனகபூர் பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோன்று, கடந்த அக்டோபர் மாதமும் 20 பேருந்துகள் ஹல்துவானி பகுதி பொது பயன்பாட்டிற்காக அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் யஷ்பல் ஆர்யா தொடங்கி வைத்திருந்தார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
UTC Dept To Return Newly Bought Buses. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X