மேஜிக் செய்த கோவா அரசு... மந்தநிலை நிலவும் சூழலில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... எப்படி தெரியுமா?

கோவா அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக, ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை நிலவும் சூழலிலும், வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

கோவாவில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... அரசின் இந்த அதிரடிதான் இதற்கு காரணம்...

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இது போதாத காலம். கார் மற்றும் டூவீலர் உள்பட அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது. இதனால் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும், அங்கு பணியாற்றும் ஊழியர்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவாவில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... அரசின் இந்த அதிரடிதான் இதற்கு காரணம்...

இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான ஜிஎஸ்டி மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் என ஆட்டோமொபைல் துறையில் சரிவுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவாவில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... அரசின் இந்த அதிரடிதான் இதற்கு காரணம்...

இதன் ஒரு பகுதியாக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு மட்டுமல்லாது, ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்க பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில், கோவாவும் ஒன்று.

கோவாவில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... அரசின் இந்த அதிரடிதான் இதற்கு காரணம்...

கோவா மாநில அரசானது, புதிய வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து 50 சதவீதம் விலக்கு அளித்துள்ளது. சாலை வரியில் 50 சதவீத விலக்கு என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு, கோவாவில் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அத்துடன் சாலை வரி மூலம் கிடைக்கும் கலெக்ஸனும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

கோவாவில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... அரசின் இந்த அதிரடிதான் இதற்கு காரணம்...

சாலை வரியில் இருந்து 50 சதவீதம் விலக்கு என்ற உத்தரவு கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியானது. இதன் பின்பு கடந்த அக்டோபர் 18ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை கோவா மாநிலத்தில் 2,000க்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அத்துடன் வரிகள் மூலமாக 4.2 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கோவாவில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... அரசின் இந்த அதிரடிதான் இதற்கு காரணம்...

சாலை வரி குறைப்பிற்கு முந்தைய மற்றும் பிந்தைய வாகனங்களின் விற்பனை நிலவரம் மற்றும் சாலை வரி வசூல் தொடர்பான விபரங்களை போக்குவரத்து துறை அமைச்சர் மவுவின் கோடின்ஹோ பகிர்ந்துள்ளார். இவை கோவா ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தால் தரப்பட்டவையாகும். செப்டம்பர் 18-26 கால கட்டத்தின் எண்களை அக்டோபர் 18-26 காலகட்டத்துடன் அவர் ஒப்பிட்டுள்ளார்.

கோவாவில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... அரசின் இந்த அதிரடிதான் இதற்கு காரணம்...

இதுகுறித்து அமைச்சர் மவுவின் கோடின்ஹோ கூறுகையில், ''செப்டம்பர் 18-26 வரையிலான கால கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 280 மட்டுமே. ஆனால் சாலை வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, அக்டோபர் 18-26 காலகட்டத்தில் 833 நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

கோவாவில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... அரசின் இந்த அதிரடிதான் இதற்கு காரணம்...

அதேபோல் செப்டம்பர் 18-26 கால கட்டத்தில் சாலை வரியாக 1,99,62,187 ரூபாய் மட்டுமே வசூலாகி இருந்தது. ஆனால் சாலை வரி குறைப்பு அறிவிப்புக்கு பிந்தைய அக்டோபர் 18-26 கால கட்டத்தில் இது 3,63,52,469 ரூபாயாக உயர்ந்துள்ளது'' என்றார். நான்கு சக்கர வாகனங்களை போல் இரு சக்கர வாகனங்களும் இதேபோன்ற டிரெண்டை காட்டியுள்ளன.

கோவாவில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... அரசின் இந்த அதிரடிதான் இதற்கு காரணம்...

அதாவது செப்டம்பர் 18-26 கால கட்டத்தில் 808 டூவீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அக்டோபர் 18-26 வரையிலான கால கட்டத்தில் 1,555 டூவீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களின் விற்பனை மட்டுமல்லாது அதன் மூலமாக கிடைக்கும் சாலை வரி வருவாயும் அதிகரித்துள்ளது.

கோவாவில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... அரசின் இந்த அதிரடிதான் இதற்கு காரணம்...

அதாவது கடந்த செப்டம்பர் 18-26 கால கட்டத்தில் 54,37,077 ரூபாயாக இருந்த சாலை வரி வருவாய் அக்டோபர் 18-26 கால கட்டத்தில் 57,12,629 ரூபாயாக உயர்ந்துள்ளது. வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பதற்கு சாலை வரி குறைப்பு மட்டுமல்லாது, தீபாவளி பண்டிகை காலமும் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 31, 2019, 0:51 [IST]
English summary
Vehicle Sales Increased In Goa After 50 Per cent Road Tax Waiver. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+