தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை இந்தியாவில் தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்துவரும் இவர் ஆடி நிறுவனத்தின் இந்திய தூதராகவும் விளங்குகிறார்.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இதனால் விராட்டின் கார்கள் கலெக்‌ஷனில் ஆடி கார்கள் தான் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் இந்த கார்களில் பழைய மாடல்களை விற்க விராட் திட்டமிட்டுள்ளார். அதன்படி தற்போது தனது ஆடி ஏ8 எல் டபிள்யூ12 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இந்த காரின் விலை ரூ.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை சிறிது அதிகம் தான் என்றாலும் இந்த ஆடி காரானது அதிக திறன் வாய்ந்த டபிள்யூ12 என்ஜினை கொண்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த கார், ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் தற்சமயம் ஹரியானாவில் தான் உள்ளது.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த காரை வேறொருவரிடம் இருந்து விராட் கோலி விலைக்கு வாங்கினார். இந்த கார் இதுவரை 8,000 கிமீ தூரம் இயங்கியுள்ளது. இது ஓடோமீட்டர் காட்டும் அளவாகும். இந்த காரின் முதல் உரிமையாளர் யார் என்பது தெரியவரவில்லை.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இரண்டு உரிமையாளர்களை கடந்த பின்னும் கிட்டத்தட்ட ஷோரூமில் உள்ளதை போன்று நல்ல நிலையிலேயே இந்த ஆடி கார் உள்ளது. கீறல்கள் கூட எதுவும் பட்டத்தாக தெரியவில்லை. இந்த ஆடி ஏ8 எல் டபிள்யூ12 மாடலில் அதிக முறை உலா வந்துள்ள விராட், ஒருமுறை டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சிக்காகவும் ஓட்டி சென்றுள்ளார்.

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

ஏற்கனவே கூறியதுபோல் மிகவும் சக்திவாய்ந்த வெர்சன் காராக விளங்கும் இந்த மாடலில் பெரிய 6.3 லிட்டர் டபிள்யூ12 என்ஜினை ஆடி நிறுவனம் பொருத்தியுள்ளது. டபிள்யூ-ஓரியண்டேஷனுக்காக 12 சிலிண்டர் அமைப்பை இந்த என்ஜின் பெற்றுள்ளது. அதாவது இரு 'V' இன்ஜின்கள் இணைந்து ஒரு 'W' என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது.

Most Read:சச்சின், விராட் வரிசையில் இணைந்த யுவராஜ்.. அடங்கேப்பா இவர் இத்தனை சொகுசு கார்களையா வச்சுருக்கிறாரு!

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,200 ஆர்பிஎம்-ல் 500 பிஎச்பி பவரையும், 4,750 ஆர்பிஎம்-ல் 625 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஓலாங் க்ரே நிறத்தில் வெளிப்புறத்தை கொண்டுள்ள இந்த காரின் உட்புறங்கள் போலோக்னா சாம்பல் நிறத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தை போன்று இந்த காரின் உட்புறமும் புதிய காரின் உணர்வையே தருகிறது.

Most Read:பெட்ரோல், டீசலுக்கு நீங்கள் செலவிடும் தொகை இனி குறையும்... மோடி அரசு மாஸ் திட்டம்... என்ன தெரியுமா?

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

இந்த ஆடி காரின் விற்பனை விளம்பரத்தில் காருக்கான ரூ.75 லட்சம் விலையுடன், சான்றிதழ் கட்டணம் மற்றும் பதிவு கட்டணமாக விலையில் 1 சதவீதத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுடன் போக்குவரத்து கட்டணங்களும் இந்த காரை வாங்குப்பவரிடம் இருந்து வசூலிக்கப்படவுள்ளது.

Most Read:புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

தனது பழைய ஆடி காரை விற்கும் விராட் கோலி... விலை மட்டும் எவ்வளவென்று தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க...

புதிய ஆடி ஏ8 எல் டபிள்யூ12 மாடல் கார் சந்தையில் ரூ.2.4 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆடி கார் வாங்க விரும்புவோருக்கு இதுவே சரியான தருணம். அதுமட்டுமில்லாமல் இந்த காரின் முந்தைய உரிமையாளர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி என்பது கூடுதல் விளம்பரம் தானே.

Source: Cartoq

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

விராட் கோஹ்லி தனது காரை விற்பனை செய்வது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் தனது கார்களை விற்பனை செய்துள்ளார். அந்த வகையில் கோஹ்லி விற்பனை செய்த சொகுசு கார் ஒன்று போலீசாரால் சின்னாபின்னமாகி வருகிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, விலை உயர்ந்த கார்கள் மீது அதிக ஈடுபாடு காட்ட கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ''லக்ஸரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்'' என விராட் கோஹ்லியே பல முறை கூறியுள்ளார்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

லக்ஸரி கார்களை உற்பத்தி செய்து வரும் ஆடி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக விராட் கோஹ்லி உள்ளார். இதன் காரணமாக ஏராளமான ஆடி கார்களை விராட் கோஹ்லி வைத்துள்ளார். இதில், ஆடி ஆர்எஸ்5 (Audi RS5) மற்றும் ஆடி ஆர்எஸ்6 (Audi RS6) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

அத்துடன் ஆடி ஏ8 எல் (Audi A8 L) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) ஆகிய கார்களும் விராட் கோஹ்லி வசம் உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக, விராட் கோஹ்லியின் அன்புக்குரிய காராக இருந்து வந்தது ஆடி ஆர்8 வி10 (Audi R8 V10) கார்தான். இது 2012ம் ஆண்டு மாடல் கார் ஆகும்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

வெள்ளை நிற ஆடி ஆர்8 வி10 காரில், விராட் கோஹ்லி வலம் வந்ததை பல முறை பார்க்க முடிந்திருக்கிறது. விராட் கோஹ்லியும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும், ஐபிஎல் போட்டிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

நெருங்கிய நண்பர்களான இருவரும் ஆடி ஆர்8 வி10 காரில் ஒரு முறை டெல்லி நகர சாலைகளில் வலம் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். இது விராட் கோஹ்லியின் கார்தான். கிறிஸ் கெய்லை ஏற்றிக்கொண்டு, விராட் கோஹ்லிதான் காரையும் ஓட்டி சென்றார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதுதவிர ரேஸ் டிராக்குகளுக்கும் கூட தனது ஆடி ஆர்8 வி10 காரை விராட் கோஹ்லி எடுத்து சென்றுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டிற்கு (BIC-Buddh International Circuit) ஒரு முறை தனது ஆடி ஆர்8 வி10 காரில் விராட் கோஹ்லி வந்தார்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

தற்போது இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு பார்முலா 1 (Formula One) ரேஸ் டிராக் இது மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது விராட் கோஹ்லி மற்றும் அவரது அன்புக்குரிய ஆடி ஆர்8 வி10 காரின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவின.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

ஆனால் விராட் கோஹ்லி பயன்படுத்திய ஆடி ஆர்8 வி10 கார், மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அங்கு தூசு படிந்து, பார்ப்பதற்கே பரிதாபகரமான நிலையில் நின்று கொண்டிருக்கிறது விராட் கோஹ்லியின் ஆடி ஆர்8 வி10 கார்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

நடந்தது இதுதான். விராட் கோஹ்லி தனது ஆடி ஆர்8 வி10 காரை, புரோக்கர் ஒருவர் மூலமாக, சாஹர் தாக்கர் எனும் ஷாஹி என்பவருக்கு, கடந்த 2016ம் ஆண்டு விற்பனை செய்தார். இந்த காரின் உண்மையான விலை சுமார் 2.5 கோடி ரூபாய். ஆனால் 60 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

விராட் கோஹ்லியிடம் இருந்து காரை வாங்கி சாஹர் தாக்கர், தனது காதலிக்கு பிறந்த நாள் அன்பளிப்பாக வழங்கினார். ஆனால் பின்நாட்களில் இந்தியா முழுக்க பெரும் புயலை கிளப்பிய கால் சென்டர் முறைகேடு குற்றச்சாட்டு ஒன்றில் சாஹர் தாக்கர் சிக்கினார்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ஆடி ஆர்8 வி10 கார் மும்பை போலீசாரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரால் கார் பறிமுதல் செய்யப்பட்ட சமயத்தில், ஓனர்ஷிப் மாற்றம் செய்யப்படாமல் விராட் கோஹ்லியின் பெயரில் இருந்தது பரபரப்பை கூட்டியது.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

எனவே விராட் கோஹ்லியும் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் விராட் கோஹ்லி தனது ஆடி ஆர்8 வி10 காரை சாஹர் தாக்கருக்கு விற்பனை செய்ததும், அதன் பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே பயன்படுத்தப்பட்டு வந்ததும், போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

விசாரணை முடிவில், சாஹர் தாக்கரின் மோசமான நடவடிக்கைகள் எதையும் விராட் கோஹ்லி அறிந்து வைத்திருக்கவில்லை என்பதை மும்பை போலீசார் கண்டறிந்து அறிவித்தனர்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

முன்னதாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆடி ஆர்8 வி10 கார், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது வரை அந்த கார் அங்கேயேதான் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு உரிய அழகை இழந்து கவலைக்கிடமான நிலையில் நின்று கொண்டிருக்கிறது அந்த கார்.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

ஆடி ஆர்8 வி10 போன்ற ஒரு அருமையான ஸ்போர்ட்ஸ் கார், போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வருவது ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு காட்சியை காண்பது என்பது ஆட்டோமொபைல் ஆர்வலர்களை பொறுத்தவரை கொடுமையானது.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

அப்படி இருக்கையில் அதனை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த விராட் கோஹ்லியும் நிச்சயம் கவலை அடைந்திருப்பார். கிறிஸ் கெய்ல் உடன் டெல்லியில் நகர் வலம், புத்தா சர்வதேச சர்க்யூட் பயணம் என இந்த கார் கொடுத்த நினைவுகளை விராட் கோஹ்லியால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.

போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கொண்டு சென்று நிறுத்தப்படுகின்றன. ஆனால் அவை அங்கு யாருக்கும் பயன்படாமல் சிதிலமடைந்து விடுகின்றன. இதில், விலை உயர்ந்த வாகனங்களும் அடக்கம்.

எனவே இப்படிப்பட்ட வாகனங்கள் எதையும் வீணாக விடாமல், உடனடியாக ஏலம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இதன்மூலம் காவல் துறைக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும். அத்துடன் ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு குறைந்த விலையில் நல்ல வாகனமும் கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Virat Kohli’s Audi A8L for sale: Car in top class condition!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X