ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்தும் ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய அமியோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில் கூரை, சைடு மிரர்கள், பூட் லிட் ஸ்பாய்லர் உள்ளிட்டவை கரும் பூச்சு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் ஜிடி லைன் என்ற விசேஷ பாடி டீக்கெல் ஸ்டிக்கர்களும் இடம்பெற்றுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் கார் சன்செட் ரெட் என்ற புதிய வண்ணத் தேர்வில் வந்துள்ளது. கருப்பு வண்ணக் கூரையுடன் இது இரட்டை வண்ண தேர்வாக அமைந்திருப்பது கவர்ச்சிகரமாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் டாப் வேரியண்ட்டில் இருக்கும் அனைத்து சிறப்பம்சங்கள், வசதிகளை இந்த மாடல் பெற்றிருக்ககிறது. கூடுதலாக க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆர்ம் ரெஸ்ட், ஓட்டுனர் இருக்கைக்கான அட்ஜெஸ்ட் வசதி, ஆட்டோமேட்டிக் வைப்பர் மற்றும் பெரிய தொடு திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடலில் 1.5 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அண்மையில்தான் ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்களில் ஜிடி லைன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது அமியோ காரிலும் ஜிடி லைன் என்ற விலை உயர்ந்த மாடல் வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தேர்வாக அமையும்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடலுக்கு ரூ.9.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலானது மாருதி சுஸுகி டிசையர், ஃபோர்டு அமியோ மற்றும் ஹோண்டா அமேஸ் கார்களுக்கு போட்டியாக அமையும்.

Article Published On: Monday, September 9, 2019, 11:05 [IST]
English summary
Volkswagen India has silently launched the Ameo GT-Line in the Indian market. The new Volkswagen Ameo GT line comes just days after the launch of its new Polo and Vento facelift and is priced at Rs 9.90 lakh, ex-showroom (India).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+