ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிவிப்பு!

பேட்டரியில் இயங்கும் புதிய எஸ்யூவி ரக காரை அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய மின்சார எஸ்யூவி குறித்த விரிவானத் தகவல்களை பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிவிப்பு!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய மின்சார எஸ்யூவி ஐடி ரூம்ஸ் என்ற பெயரில் வர இருக்கிறது. அதாவது, இது பெரிய ரக மின்சார எஸ்யூவி மாடலாக இருக்கும். முதலாவதாக சீனாவிற்கு இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிவிப்பு!

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் செயல்படும் பல்வேறு கார் பிராண்டுகளின் கீழ் 70 மின்சார கார் மாடல்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அதில், ஐடி ரூம்ஸ் எஸ்யூவியும் மிக முக்கிய மாடலாக கருதப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிவிப்பு!

ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் நியோ, ஐடி பஸ், ஐடி பக்கி மற்றும் ஐடி விஸ்ஸியான் வரிசையில் இந்த புதிய எஸ்யூவியும் சேர்ந்துள்ளது. ஆனால், இது பெரிய அளவிலான எஸ்யூவி மாடலாக இருக்கும் என்பதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிவிப்பு!

பேட்டரியில் இயங்கும் மாடல் என்பதோடு, இந்த எஸ்யூவியானது ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் திறன் படைத்ததாகவும் இருக்கும். எனவே, இது தானியங்கி முறையிலான எதிர்கால எஸ்யூவி கார் மாடலாகவும் இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிவிப்பு!

இந்த புதிய எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் திறன் வாய்ந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற இருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீ வேகம் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிவிப்பு!

இந்த புதிய எஸ்யூவியில் மிக உயர்தர உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. அதேபோன்று, இருக்கை அமைப்பிலும் பல்வேறு புதுமைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிவிப்பு!

பேட்டரி கார் தயாரிப்புத் துறையில் புரட்சிகரமான தயாரிப்பாக இது இருக்கும் என்று ஃபோக்ஸ்வேகன் கூறுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் EQC, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐஎக்ஸ்-3 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிவிப்பு!

வரும் 2021ம் ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் உலகின் பிற நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Volkswagen has announced the development of a new Electric vehicle. The German marque has started development on the new EV named the ID ROOMZZ and the SUV will go on sale in the Chinese market by 2021. At the moment, it is unclear whether the electric SUV will be sold elsewhere too.
Story first published: Thursday, April 4, 2019, 18:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X