ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

உலகிலேயே மிக நீண்ட பாரம்பரியம் மிக்க கார் மாடலான ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

தனித்துவமான டிசைனால் வாடிக்கையாளர்களை கவர்ந்து வந்த மாடல் ஃபோக்ஸ்வேகன் பீட்டில். உலகிலேயே மிக நீண்ட காலம் உற்பத்தியில் இருந்த மாடலாக பெருமை பெற்றிருந்த இந்த காரின் உற்பத்தி முடிவுக்கு வந்துள்ளது. ஹிட்லர் காலத்தில் துவங்கி 2K காலம் வரை இதன் உற்பத்தி நீடித்து வந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

இந்த நிலையில், மெக்சிகோ நாட்டின் பியூப்லா பகுதியில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையில் நேற்று கடைசி ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்தது. இந்த கடைசி கார் மாடலானது மெக்சிகோ நகரின் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் உருவான வரலாறே சுவாரஸ்யமானதுதான். ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் மக்கள் எளிதில் வாங்கி பயன்படுத்தும் வகையிலான புதிய கார் மாடலை உருவாக்க பிரபல கார் வடிவமைப்பு நிபுணரும், போர்ஷே சொகுசு கார் நிறுவனத்தின் ஸ்தாபகருமான ஃபெர்டினான்ட் போர்ஷேவுக்கு கட்டளை இட்டார்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் வடிவமைப்புப் பணிகள்1934ம் ஆண்டு துவங்கி 1938ல் நிறைவு பெற்று, உற்பத்திக்கு தயாரானது. ஹிட்லரின் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு மிக கவனமாக இந்த காரை போர்ஷே உருவாக்கி இருந்தார்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

வண்டு போன்ற தோற்றத்தில் மிக வித்தியாசமான டிசைனுடன் பீட்டில் கார் வடிவமைக்கப்பட்டது. இந்த கார் மிக விரைவாக ஜெர்மனி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால், ஜெர்மனியில் முதல் முறை பீட்டில் காருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

இந்த நிலையில், இரண்டாம் உலகப்போர் துவங்கிய நேரத்தில், பீட்டில் காரும் போரில் பயன்படுத்தப்பட்டது. 1941 முதல் 1944 வரை நாஸி படைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பின்னர், மீண்டும் மக்களிடத்தில் இந்த காருக்கான வரவேற்பு அதிகரித்தது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

இதைத்தொடர்ந்து, வெளிநாடுகளுக்கும் இந்த கார் ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் பீட்டில் கார் அசெம்பிள் செய்யப்பட்டது. உலகின் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட டாப் - 5 கார் மாடல்களில் ஒன்றாகவும் பீட்டில் கார் பெருமை பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

கால மாற்றத்திற்கு தக்கவாறு வடிவமைப்பிலும், வசதிகளிலும், தொழில்நுட்பத்திலும் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. கூபே, திறந்து மூடும் கூரை அமைப்புடைய கேப்ரியோலே மாடல்களிலும் வந்தது. பல்வேறு தலைமுறைகளை கடந்தாலும், வண்டு போன்ற அடிப்படை தோற்றத்தை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மாற்றவில்லை.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றன.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

இந்த கார் பல்வேறு எஞ்சின் தேர்வுகளிலும், கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், பீட்டில் காருக்கு விடை கொடுக்கும் விதத்தில் ஃபைனல் எடிசன் மாடல் குறித்த அறிவிப்பை ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டது. அதன்படி, 5,961 பீட்டில் கார்கள் ஃபைனல் எடிசன் மாடலாக உற்பத்தி செய்யப்பட்டன. அதில், கடைசி கார்தான் நேற்று உற்பத்தி பிரிவில் இருந்து வெளிவந்தது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!

இந்த காருக்கு மாற்றாக தாரேக் எஸ்யூவியை மெக்சிகோ ஆலையில் உற்பத்தி செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு உற்பத்தி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 11, 2019, 10:09 [IST]
English summary
The very last Volkswagen Beetle has just been produced. The Volkswagen Beetle that was driven off the VW production line in Puebla, Mexico is now an icon as it is the very last unit of the legendary hatchback.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+