தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் போலோ, அமியோ மற்றும் வென்ட்டோ மாடல்கள் சுமார் ரூ.1,80,000 வரை சலுகைகளை பெறுகின்றன.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

இந்த சலுகைகளுடன் ஐந்து வருட உத்தரவாதம் மற்றும் சாலைக்கான உதவி சலுகை (ஆர்எஸ்ஏ)-வையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு டெஸ்ட் ட்ரைவ் மற்றும் புக்கிங்கிற்கும் நிச்சய பரிசு ஒன்றையும் வழங்கவுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த சலுகைகள் அக்டோபர் 31ஆம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

போலோ

எண்ட்ரி-லெவல் மாடல் காரான இதற்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ரூ.1,11,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவின் எக்ஸ்ஷோரூம் விலையாக ரூ.5,44,000லிருந்து விற்பனை செய்யப்பட்டு வரும் இக்காரின் டீசல் வேரியண்ட்களுக்கு ஐந்து வருட உத்தரவாதமும், சாலைக்கான உதவி சலுகை (ஆர்எஸ்ஏ)-வும் வழங்கப்பட இருக்கின்றன.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

இரு இன்ஜின் தேர்வுகளில் போலோ மாடல் கார் கிடைக்கிறது. இதில் மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 74.9 பிஎச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. மற்றொரு நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 88.7 பிஎச்பி பவரையும் 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இரு என்ஜின்களும் ஐந்து நிலை வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

இதன் ஜிடி லைன் காரான போலோ ஜிடி மாடல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் 103.5 பிஎச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 108.4 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன. இதன் பெட்ரோல் என்ஜினுடன் ஏழு நிலை (டிஜிஎஸ்) ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

அமியோ

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் காம்பேக்ட் செடான் காரான அமியோவிற்கு ரூ.1,47,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய எக்ஸ்ஷோரூம் விலையாக ரூ.5,29,000க்கு விற்கப்படும் இந்த காரின் டீசல் மாடல்களுக்கு ஐந்து வருட உத்தரவாதம் மற்றும் ஆர்எஸ்ஏ-வும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

போலோ மாடலை போலவே பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வேரியண்ட் என்ஜின்களில் கிடைக்கும் அமியோவின் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஐந்து நிலை மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு 74.9 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

அதேபோல் மற்றொரு என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 88.7 பிஎச்பி பவர் மற்றும் 230 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் ஐந்து நிலை மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஏழு நிலை வேக (டிஜிஎஸ்) ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகனின் ஃபுல்-சைஸ் செடனான வென்ட்டோவிற்கு இந்நிறுவனம் ரூ.1,80,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.8,76,000க்கு இந்திய எக்ஸ்ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இம்மாடல் காரின் டீசல் வேரியண்ட்டிற்கு மட்டும் ஐந்து வருட உத்தரவாதம் மற்றும் ஆர்எஸ்ஏ போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

மூன்று என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும் இக்காரின் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 103.5 பிஎச்பி பவர் மற்றும் 153 என்எம் டார்க் திறனையும், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 103.5 பிஎச்பி பவர் மற்றும் 153 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்களை அமைப்புகளை கொண்ட டீசல் என்ஜின் 88.7 பிஎச்பி பவர் மற்றும் 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஐந்து நிலை மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடனும், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஏழு நிலை (டிஜிஎஸ்) ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும் இணைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் டீசல் என்ஜின் மாடல் கார்கள், ஐந்து நிலை வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஏழு நிலை வேக ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு தேர்வுகளில் கிடைக்கிறது.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

மேலும் அனைத்து ஃபோக்ஸ்வேகன் மாடல் கார்களுக்கும் 4எவர் கேர் என்ற மெயின்டனன்ஸ் பேக்கேஜ்ஜும் வழங்கப்பட இருக்கிறது. இந்த சர்வீஸ் பேக்கேஜ்ஜில் நான்கு வருட உத்தரவாதம் மூன்று சிறந்த சர்வீஸ்கள் மற்றும் ஆர்எஸ்ஏ சலுகையும் உள்ளன.

தீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த தீபாவளி பண்டிக்கைக்கு வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இம்மாதம் முழுவதும் கிடைக்கும்படியான சலுகைகளை இந்நிறுவனம் அறிவித்துள்ளதால் இம்மாதத்தில் ஃபோக்ஸ்வேகனின் விற்பனை யூனிட்களின் எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2019, 19:44 [IST]
English summary
Volkswagen Diwali Discount Offers: Festive Benefits Available On Select Models
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+