8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அதிக தூரம் மற்றும் நீண்ட காலம் வாரண்டி கொண்ட புதிய ஹேட்ச்பேக் ரகத்திலான எலக்ட்ரிக் காரை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்க சமீபகாலமாக, உலகத்தில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோன்று, இந்தியாவிலும் அதுபோன்று ஓர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

அவ்வாறு, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டிற்கு முற்று புள்ளி வைத்துவிட்டு, நாடு மின் வாகன மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், வருகின்ற 2030ம் ஆண்டுக்குள் நாட்டை மின் வாகனங்களின் ராஜ்ஜியத்திற்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

ஆகையால், எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து சாலைகளையும் மின் வாகனங்களின் கட்டுபாட்டிற்குள் வரவிருப்பது தற்போதே உறுதியாகியுள்ளது. இது, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் நிகழவுள்ளது. இதன்காரணமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள், மின்வாகன உற்பத்தியில் அதிகப்படியான முனைப்பை காட்டி வருகின்றனர்.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

அந்தவகையில், அண்மைக் காலங்களாக உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதிநவீன எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு, புதிய தொழில்நுட்ப வசதி மற்றும் அதிக தூரம் செல்லக்கூடிய வாகனங்களை உற்பத்தி செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

இந்நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அதன் எதிர்கால எலக்ட்ரிக் கார் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கார் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாகவும், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட உள்ளது.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

ஐடி.3 என்ற பெயரில் அறிமுகமாக உள்ள அந்த கார், ஒரே சார்ஜில் 550 கிமீ தூரம் வரை செல்லும் திறனைப் பெற இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் காருக்கு இந்த அளவிற்கு திறனை வெளிப்படுத்துவதற்காக, 125kW திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட உள்ளது.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

அதேசமயம், இந்த மின்சார காருக்கு, அந்த நிறுவனம் 8 வருடங்கள் அல்லது 1,60,000 ஆயிரம் கி.மீட்டர்கள் என்ற வாரண்டியை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. அதிக ரேஞ்ச் மற்றும் அதிக கால வாரண்டி உள்ளிட்ட சிறப்பால், இந்த காருக்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அதன் புதிய எம்இபி எலக்ட்ரிக் ஆர்கிடெக்டர் பிளாட்பாரத்தில் வைத்துதான் இந்த புதிய ஐடி.3 எலக்ட்ரிக் காரை உற்பத்தி செய்ய இருக்கின்றது. ஆகையால், இந்த கார் புதிய தொழில்நுட்ப வசதிகளுக்கும், சிறப்பு தோற்றத்திற்கும் எந்தவொரு குறைவுமின்றி உருவாகலாம் என கூறப்படுகின்றது.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

மேலும், இந்த எலக்ட்ரிக் காரை வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் ஃப்ராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. ஆகையால், இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு, ஃபோக்ஸ்வேகன் ரசிகர்கள் ஹை பீக்கில் இருக்கின்றது.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 காரில் பயன்படுத்தப்பட இருக்கும் 125kW கெபாசிட்டி கொண்ட மூன்று லித்தியம் செல்கள் அண்மையில்தான் அறிமுகமாகின. இவை, வெறும் 30 நிமிட சார்ஜிலேயே 260 கிமீ தூரம் செல்லக்கூடிய சக்தியை சேமித்து வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவை. அதேசமயம், இந்த பேட்டரிகள் அதிவேகமாக சார்ஜ் அடையும் திறனுள்ளவையாக இருக்கின்றன.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

அதேபோன்று, இந்த பேட்டரிகள் குறைந்தது 330 கிமீ தூரம் முதல் 550 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய திறனை வழங்குபவையாக இருக்கின்றன. ஃஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்த ஐடி.3 கார் பிளாட்பார்மிற்கு சிறப்பு வசதியாக, அதன் உரிமையாளர்கள் வீட்டிலேயோ அல்லது அலுவலகங்களிலேயே சார்ஜ் செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தர இருக்கின்றது.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

இதன்மூலம், காரின் உரிமையாளர் சார்ஜிங் நிலையங்களை தேடி அலைய வேண்டிய சூழல் தடுக்கப்படும். அந்தவகையில், இந்த சார்ஜிங் போர்ட்டுகள் 11Kw (AC) திறன் கொண்டவையாக இருக்கும். இது 230 வோல்ட்டைக் காட்டிலும் மிக குறைவான நேரத்தில் காருக்கு சார்ஜை ஏற்றிவிடும்.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், புதிய ஹேட்ச்பேக் ரகத்திலான எலக்ட்ரிக் காரை, அதன் முதலமாண்டில் ஒரு லட்சம் யூனிட்களை தயாரிக்க இலக்க நிர்ணயித்துள்ளது. மேலும், இந்த ஐடி. நான்கு நிறங்களிலும், மூன்று விதமான வேரியண்ட்களிலும் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த எலக்ட்ரிக் கார், ரெனால்ட் ஜோயி மற்றும் நிஷான் லீஃப் உள்ளிட்ட கார்களுடன் போட்டியைச் சந்திக்க இருக்கின்றது.

8 வருடங்கள் வாரண்டி, 550 கிமீ ரேஞ்ச்... அசத்தும் ஃபோக்ஸ்வேகன் புதிய எலக்ட்ரிக் கார்: சிறப்பு தகவல்!

ஆனால், இதன் இந்திய வருகை குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த காரின் முதல் அறிமுகத்திற்கு அது வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, எலக்ட்ரிக் காரின் மற்ற சிறப்பம்சங்கள் குறித்த தகவலும் அப்பேதே வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Volkswagen ID.3 Electric Hatchback To Get Upto 550km Range. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X