இனி லீசுக்கு வீடு மட்டுமில்லைங்க ஃபோக்ஸ்வேகன் காரும் கிடைக்கும்... சென்னை வாசிகளே தயாராக இருங்க..!

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் அதன் கார்களை லீஸ் திட்டத்தின் அடிப்படையில் வாடகைக்கு விட இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இனி லீசுக்கு வீடு மட்டுமில்லைங்க ஃபோக்ஸ்வேகன் காரும் கிடைக்கும்... சென்னை வாசிகளே தயாராக இருங்க..!

ஐரோப்பா நாட்டின் மிக முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன். இந்நிறுவனம், இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் வாடகைக்கு வாகனங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக ஓரிக்ஸ் என்ற நிறுவனத்துடன் அது ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி லீசுக்கு வீடு மட்டுமில்லைங்க ஃபோக்ஸ்வேகன் காரும் கிடைக்கும்... சென்னை வாசிகளே தயாராக இருங்க..!

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடக்க தொழில்முனைவோர், சம்பளம் பெறும் தொழிலாளர்கள், கார்பரேட் நிறுவன தொழில் வல்லுநர்கள் மற்றும் எம்எஸ்எம்இ-க்கள் உள்ளிட்டோர்களுக்கு குத்தகை திட்டத்தின் அடிப்படையில் ஃபோக்ஸ்வேகனின் கார்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இனி லீசுக்கு வீடு மட்டுமில்லைங்க ஃபோக்ஸ்வேகன் காரும் கிடைக்கும்... சென்னை வாசிகளே தயாராக இருங்க..!

மாதாந்திர குத்தகை என்ற திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவைக்கு ரூ. 17,647 என்ற தொகை வசூலிக்கப்பட உள்ளது. இது ஆரம்பநிலை கட்டணம் ஆகும். ஃபோக்ஸ்வேகனின் மாடலுக்கு ஏற்றவாறு மாதாந்திர குத்தகை நிர்ணயிக்கப்படும்.

மேலும், இந்த சேவையை கார்பரேட் தொழில் மையங்கள் மூலம் வழங்க இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

இனி லீசுக்கு வீடு மட்டுமில்லைங்க ஃபோக்ஸ்வேகன் காரும் கிடைக்கும்... சென்னை வாசிகளே தயாராக இருங்க..!

ஆரம்பநிலையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை முதல்கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களாக உள்ள சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, புனே, மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி லீசுக்கு வீடு மட்டுமில்லைங்க ஃபோக்ஸ்வேகன் காரும் கிடைக்கும்... சென்னை வாசிகளே தயாராக இருங்க..!

ஃபோக்ஸ்வேகனின் இந்த சேவை ஏற்கனவே பல்வேறு நாடுகளில் வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது. இதன்காரணமாகவே, இந்தியாவிலும் இந்த சேவையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும், மற்ற நாடுகளில் நிலவும் அதே வரவேற்பு இந்தியாவிலும் கிடைக்கும் என அதீத நம்பிக்கையை அது தெரிவித்துள்ளது.

இனி லீசுக்கு வீடு மட்டுமில்லைங்க ஃபோக்ஸ்வேகன் காரும் கிடைக்கும்... சென்னை வாசிகளே தயாராக இருங்க..!

ஃபோக்ஸ்வேகன், இந்த குத்தகை திட்டத்திற்கு ஒரு சில நிபந்தனைகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி, குறைந்தது இரண்டு வருடங்களுக்கு புக் செய்தால் மட்டுமே லீஸ் திட்டத்தின்கீழ் வாகனங்களை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக நான்கு வருடங்கள் வரை குறிப்பிட்ட மாடல்களை குத்தகைக்கு வழங்கவும் அது திட்டமிட்டிருக்கின்றது.

இனி லீசுக்கு வீடு மட்டுமில்லைங்க ஃபோக்ஸ்வேகன் காரும் கிடைக்கும்... சென்னை வாசிகளே தயாராக இருங்க..!

இதுகுறித்து, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஸ்டெஃபன் க்நாப் கூறியதாவது, "ஓரிக்ஸ் நிறுவனத்துடன், எங்கள் கார்களை குத்தகை திட்டத்தில் வாடகை வழங்க திட்டமிட்டுள்ளோம். இது, எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முகாந்திரத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகின்றோம்" என்றார்.

இனி லீசுக்கு வீடு மட்டுமில்லைங்க ஃபோக்ஸ்வேகன் காரும் கிடைக்கும்... சென்னை வாசிகளே தயாராக இருங்க..!

இந்த சேவையானது குறுகிய காலத்திற்கு சிறந்த பயண அனுபவத்தை தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தொடங்கப்பட்டிருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு எந்தவொரு முன் தொகையும் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இனி லீசுக்கு வீடு மட்டுமில்லைங்க ஃபோக்ஸ்வேகன் காரும் கிடைக்கும்... சென்னை வாசிகளே தயாராக இருங்க..!

தொடர்ந்து, பேசிய ஓரிக்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் சந்தீப் கம்பீர் கூறுகையில், "இரு முன்னணி உலகளாவிய பிராண்டுகளுக்கு இடையிலேயான இந்த கூட்டணி, பலரின் கனவுகளை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். இது வாடிக்கையாளர்களுக்கு வோக்ஸ்வாகனின் பிரீமியம் தயாரிப்புகளை குத்தகை திட்டத்தின் மூலம் அனுபவிக்க உதவும். வோக்ஸ்வாகனின் இந்த சேவை அனைத்து கார்ப்பரேட் பிசினஸ் மையங்களிலும் கிடைக்கும்" என தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 14, 2019, 13:32 [IST]
English summary
Volkswagen Launched Car Leasing Service In India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+