ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் கார்ப்பரேட் எடிசன் அறிமுகம்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபல கார்களின் கார்ப்பரேட் எடிசன் மாடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கார்ப்பரேட் எடிசன் மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ மற்றும் டிகுவான் ஆகிய 4 கார்களின் டீசல் மாடல்களில் இந்த கார்ப்பரேட் எடிசன் மாடல் கிடைக்கும். அதுவும் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் மட்டும் இந்த் கார்ப்பரேட் எடிசன் தேர்வு வழங்கப்படுகிறது.

அண்மையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பு பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதத்தில் இந்த கார்ப்பரேட் எடிசன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்கள், சிறு, குறு தொழில்துறையினர், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், கட்டட பொறியாளர்கள், பட்டய கணக்காளர் உள்ளிட்டோருக்கு இந்த கார்ப்பரேட் எடிசன் மாடல்கள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

கார்ப்பரேட் எடிசன் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சேமிப்புத் தள்ளுபடிகள், குறைவான செலவீனத்துடன் பராமரிப்புத் திட்டங்கள், ஆக்சஸெரீகள் மீது தள்ளுபடியும், சேமிப்புச் சலுகைகளும் வழங்கப்பட இருக்கின்றன. லாயல்டி போனஸும் இந்த கார்ப்பரேட் எடிசன் டீசல் கார்களை வாங்குவோர் பெற முடியும்.

இதுதவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 5 ஆண்டுகாலத்திற்கான வாரண்டி, 5 ஆண்டுகளுக்கான சாலை அவசர உதவித் திட்டம் ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன்மூலமாக நிம்மதியான கார் வாங்கும் சூழலை வழங்குவதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் 102 நகரங்களில் செயல்படும் 132 கார் ஷோரூம்கள், 113 சேவை மையங்கள் மூலமாக இந்த கார்ப்பரேட் எடிசன் கார்களை வாங்க முடியும் என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்கள் அண்மையில்தான் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டன.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ரூ.5.82 லட்சம் முதலும், வென்ட்டோ கார் ரூ.8.76 லட்சம் விலையில் இருந்தும் கிடைக்கிறது. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஹை ப்ளஸ் மற்றும் ஜிடி லைன் மாடல்களில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. எஞ்சின் தேர்வுகளில் மாற்றம் இல்லை.


Click it and Unblock the Notifications








