Just In
- 12 min ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 28 min ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 2 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 10 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
Don't Miss!
- Sports
ஹர்திக் பாண்டியா தந்தை மாரடைப்பால் மரணம்.. எதிர்பாராத சோகம்!
- Movies
'வில்லனோ, ஹீரோவோ..நீங்க வேற லெவல்ஜி' விஜய் சேதுபதி பிறந்தநாள்.. கொண்டாடும் ரசிகர்கள்!
- News
கோவாக்சின், கோவிஷீல்டு இந்தியாவுக்கு வந்தது எப்படி? .. தடுப்பு மருந்துகளின் தொழில்நுட்பம் என்ன?
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் எடிசன் மாடல்கள்: ஃபோக்ஸ்வேகன் அறிமுகம்!
உலக கோப்பை கிரிக்கெட் துவங்கி இருக்கும் இவ்வேளையில், கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக ஸ்பெஷல் எடிசன் கார் மாடல்களை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது.

இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கி இருக்கின்றன. இதனையடுத்து, கிரிக்கெட் ரசிர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, போலோ, அமியோ மற்றும் வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

#GermanyCheersForIndia என்ற முழக்கத்துடன் இந்தியர்களுடன் மகிழ்ச்சியை சேர்ந்து கொண்டாடும் விதமாக இந்த கார்களை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த கார்கள் கப் எடிசன் (Cup Edition) என்ற பெயரில் வந்துள்ளன.

இந்த கார்களில் விசேஷ சீட் கவர்கள் மற்றும் க்ரோம் பேட்ஜ்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. மேலும், புதிய அலாய் வீல்கள் மற்றும் கப் எடிசன் என்பதை காட்டுவதற்கான விசேஷ பாடி டீக்கெல் அலங்கார ஸ்டிக்கர்களுடன் கொடுக்கப்படுகின்றன.

சாதாரண கார்களிலிருந்து இந்த கப் எடிசன் போலோ, அமியோ மற்றும் வென்ட்டோ கார்கள் தனித்துமாக இருக்கும். இது கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீஃபென் நாப் கூறுகையில்," ஜெர்மனியில் கால்பந்து போலவே, இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு என்பதை தாண்டி மதமாக இருக்கிறது. உலக அளவில் விளையாட்டு எங்களது விற்பனையில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

இது நாட்டையே ஒருமைப்படுத்துவது மட்டுமின்றி, உற்சாகம் உள்ளிட்டவற்றை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. இதனை மனதில் வைத்துதான் கிரிக்கெட் ரசிகர்களுக்காக கப் எடிசன் மாடலை அறரிமுகம் செய்துள்ளது. இது நிச்சயம் உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை எங்களது கார்கள் வழங்கும்," என்று கூறி இருக்கிறார்.
MOST READ: ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார்... படங்களுடன் தகவல்கள்!