புதிய ஃபோக்ஸ்வேகன் நிவஸ் எஸ்யூவி கார் வெளியீடு
ஃபோக்ஸ்வேகன் நிவஸ் என்ற புத்தம் புதிய எஸ்யூவி காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எஸ்யூவி கார்களுக்கான சந்தையை மனதில் வைத்து பல புதிய மாடல்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வகையில், அடுத்து ஒரு புத்தம் புதிய எஸ்யூவி மாடலை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்ய இருக்கிறது.

முதலாவதாக பிரேசில் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி நிவஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் அடிப்படையில் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது, பட்ஜெட் விலையிலான புதிய கார்களுக்கான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி ஏ0 என்ற பிளாட்ஃபார்மில்தான் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும்.

ஹோண்டா ஜாஸ் கார் அடிப்படையில் எப்படி டபிள்யூஆர்வி கார் முற்றிலும் புதிய மாடலாக உருவாக்கப்பட இருக்கிறதோ, அதே பாணியில் ஃபோக்ஸ்வேகன் போல அடிப்படையில் இந்த புதிய கார் உருவாக்கப்பட இருக்கிறது. இது 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை பெற்றிருக்கிறது.
அதேநேரத்தில், இந்த கார் பின்புறத்தில் தாழ்வான கூரை அமைப்புடன் க்ராஸ்ஓவர் ரக டிசைனில் வர இருப்பது டீசர் படம் மூலமாக தெரிகிறது. எனவே, இது தனித்துவமான மாடலாக இருக்கும். இந்த கார் 2560 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டது.

ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி காரைவிட குறைவான விலையில் இந்த புதிய கார் நிலைநிறுத்தப்படும். அதாவது, ரூ.10 லட்சத்திற்கும் குறைவான மார்க்கெட்டில் சந்தைப்படுத்தப்படும்.

இந்த கார் அடுத்த ஆண்டு மத்தியில் பிரேசில் நாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








