ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ மற்றும் வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனையில் போலோ, அமியோ, வென்ட்டோ கார்கள் முக்கிய பங்களிப்பை அளித்து வருகின்றன. இந்தியாவில் வர்த்தகத்தை தள்ளுவதற்கு இந்த மூன்று மாடல்களும்தான் கையில் இருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அவ்வப்போது இந்த இரண்டு கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது போலோ, அமியோ மற்றும் வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் வந்துள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

பிளாக் அண்ட் ஒயிட் எடிசன் என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் மாடல்கள் சந்தையில் களமிறங்கி உள்ளன. இந்த மாடல்களில் தோற்றத்திற்கு வசீகரம் கூட்டும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உட்புறத்திலும் சில கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

அதன்படி, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், ரியர் ஸ்பாய்லர், கருப்பு வண்ண கூரை, 16 அங்குல போர்டேஜ் அலாய் வீல்கள், கருப்பு வண்ண சைடு மிரர்கள், க்ரோம் பூச்சுடன் கூடிய ஃபென்டர் அமைப்பு மற்றும் பிளாட் அண்ட் ஒயிட் எடிசனை குறிக்கும் பட்டைகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

உட்புறத்தில் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண லெதர் சீட் கவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதேபோன்று, விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.

ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ மற்றும் வென்ட்டோ ஆகிய மூன்று கார்களின் பெட்ரோல், டீசல் மாடல்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் தேர்வுக்கு உள்ளது. அதாவது, இந்த மாடல்கள் சாதாரண மாடலிலிருந்து மிகவும் தனித்துவமாக தெரியும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ரூ.5.70 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது. போலோ ஜிடி டிடிஐ மாடல் ரூ.9.70 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் ரூ.5.83 லட்சத்திலிருந்து ரூ.9.99 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரூ.8.63 லட்சம் விலையிலிருந்து ரூ.14.32 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த கார்கள் டீப் பிளாக் பெயிண்ட் என்ற விசேஷ மாடல்களிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Volkswagen India has launched the Black & White edition models for the Polo, Ameo and Vento offerings in India. The new Volkswagen Black & White edition models offer a number of cosmetic updates on all three models, although prices for the special edition models remains unchanged.
Story first published: Monday, April 1, 2019, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X