ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய வருகை விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்களின் விற்பனை சுமாராக இருந்து வருகிறது. இருப்பினும், இந்த கார்களின் சிறப்பான கட்டமைப்பு தரத்திற்கு இந்தியாவில் தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

இந்த நிலையில், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய பொலிவுடன் புதிய போலோ, வென்ட்டோ கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். வரும் செப்டம்பர் 4ந் தேதி இந்த புதிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களில் புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு ஆகியவை இடம்பெற இருக்கிறது. இந்த புதிய மாடல்களில் புதிய டிசைனிலான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

தவிரவும், புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஒப்பாக, டியூவல் ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைன்டர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீட் அலர்ட் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. புதிய வென்ட்டோ கார் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

ஆனால், இந்த எஞ்சின்கள் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவே இருக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரலில்தான் பிஎஸ்-6 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. ஆனால், உறுதியான தகவல் இப்போதைக்கு இல்லை. இந்த புதிய மாடல்களில் பல கூடுதல் வசதிகளும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

புதிய பொலிவுடன் வரும் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் விலை சற்றே கூடுதலாக நிர்ணயிக்கப்படும். போலோ கார் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்களுடனும், வென்ட்டோ கார் ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களுடனும் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 27, 2019, 17:27 [IST]
English summary
According to a media report, Volkswagen is planning to launch the refreshed version of Polo and Vento in India on September 4, 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+